ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தொழிலாளர்கள்மீது கிருமி நாசினியைத் தெளிப்பதா
August 13, 2020 • Viduthalai • இந்தியா

தொழிலாளர்கள்மீது கிருமி நாசினியைத் தெளிப்பதா?

சுரங்கங்களுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி,ஆக.13- கரோனா நோய்த் தடுப்புக்காக மனிதர் களின் மீது கிருமி நாசினி களைத் தெளிக்கும் வைரஸ் தடுப்பு கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களின் பயன்பாடு, நிறுவுதல், தயாரிப்பு, விளம்ப ரங்கள்மீது தடை விதிக்கக் கோரி சட்டக்கல்லூரி மாண வர் குருசிம்ரன் சிங் நரூலா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘கரோனா நோய்த் தடுப்பு என்ற போர் வையில் தற்போது பயன்பாட் டில் உள்ள மனிதர்கள்மீது கிருமி நாசினிகளை தெளிக் கும் சுரங்கங்களில் கிருமி நாசினி என்ற பெயரில் மனி தர்கள் மீது புறஊதாக் கதிர்கள் பாய்ச்சப்படுகிறது. இந்தக் கிருமி நாசினி தெளிப்பு சுரங் கங்கள் உடலளவில் மட்டு மின்றி மனரீதியாகவும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத் துகிறது. கரோனா தடுப்புப் பணியில் இவை பயனற்றவை. ஆபத்து விளைவிப்பவை என்று உலக சுகாதார மய்யம் மற்றும் உலகின் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் எச் சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக மனு தாரர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு இருமுறை புகார் அனுப்பியதில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இந்த சுரங்கங்கள் தொடர்பாக மத்திய அரசு அறிவுரையை வெளியிட்டுள்ளது. ஆனால் வெறும் அறிவுரை மட்டு மின்றி இந்த சுரங்கங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட வேண் டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசா ரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் நடை பெற்றது.

அப்போது இந்த மனுவின் மீது பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய சுகாதா ரத்துறை அமைச்சகம், விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்திற்கும்,  விவசாயத்துறை அமைச்சகத் திற்கும் தாக்கீதை அனுப்பு மாறு உத்தரவிட்டு விசார ணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத் தனர்.