ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தொண்டி அருகே கடலில் தத்தளித்த நான்கு மீனவர்கள் மீட்பு
November 11, 2020 • Viduthalai • தமிழகம்

தொண்டி, நவ. 11- தொண்டி அருகே நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

மூழ்கிய படகை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இராமநாத புரம் மாவட்டம், தொண்டி அருகே லாஞ்சியடி பகுதியை சேர்ந்த பிரமுடாஸ் (45) என்பவரின் படகில், நேற்று அதிகாலை மீன் பிடிக்க பிரமுடாஸ், லிங்கம், ரவி  உட்பட 4 பேர் சென்றனர். அப்போது கடலில் பலத்த காற்று வீசியதில் படகு கவிழ்ந்துள்ளது. இதனால் 4 மீனவர்களும் கடலில் தத்தளித்து சத்தமிட்டனர். அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு கரை சேர்த்தனர். படகு முற்றிலுமாக கடலில் மூழ்கியது.