ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தேசிய புதிய கல்விக்கொள்கைக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு
August 25, 2020 • Viduthalai • இந்தியா

ஆசிரியர்களின் கருத்துகளை கேட்கிறது மத்திய அரசு

புதுடில்லி, ஆக. 25- மத்திய பா.ஜ.க. அரசால் தேசிய புதிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டு, அதற்கு கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்பு தல் அளித்தது. அடுத்த கல்வி யாண்டிலேயே புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது.

குலக்கல்வித்திட்டத்தின் புதிய வடிவமாக மத்திய பா.ஜ.க. அரசால் தேசிய புதிய கல்விக்கொள்கை வகுக்கப் பட்டு வெளியிடப்பட்டுள் ளது. மும்மொழி என்கிற பெயரால் இந்தி திணிப்புக்கு வழிவகுக்கிறது. மாணவர் களுக்கான கட்டாயக் கல் வித்திட்டத்தை சீர்குலைக் கிறது. மாணவர்களுக்கு தேர் வுச்சுமைகள், இடைநிற்றல் கள் அதிகரிக்கிறது என்று பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், ஆசிரியர் அமைப்புகள் என பல தரப்பி லிருந்தும் கடும் எதிர்ப்பு வெளியானது. மேலும் ஒத் திசை வுப்பட்டியலிலிருந்து மாநிலங்களின் பட்டியலுக்கு கல்வியை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில்,  மத்திய அரசு தற்பொழுது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கள், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல் வர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்க மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய் துள்ளது.

அதன்படி, ஆக.24 முதல் முதல் வருகிற 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் தங்களது கருத் துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ள கேள்விகளுக்கு விடை அளிக் கும் வகையிலேயே கருத்துகள் பெறப்பட உள்ளன. நாடு முழுவதும் இருந்து பெறப் படும் கருத்துகளின் அடிப் படையில் ஆய்வு செய்து என்சிஇஆர்டி உரிய முடிவை எடுக்கும் என அறிவிக்க வாய்ப்புள்ளது.