ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தேசியக் கல்விக் கொள்கையைப் புறக்கணிக்க வேண்டும் ஏன்
August 16, 2020 • Viduthalai • கழகம்

தேசியக் கல்விக் கொள்கையைப் புறக்கணிக்க வேண்டும் ஏன்?

திராவிடர் கழக இளைஞரணி சார்பில் காணொலி சிறப்புக் கூட்டம்

விருத்தாசலம், ஆக. 16 சமூகநீதி, மாநில உரிமைகள், மாணவர்களின் கல்வி நலன் பாதுகாக்கப்பட வேண்டுமானால், புதிய கல்விக்கொள்கையைப் புறக் கணிக்க வேண்டுமென திராவிடர் கழக இளைஞரணி சிறப்புக் கூட்டத்தில் விளக்கப்பட்டது. திராவிடர் கழக மாநில இளைஞரணி சார்பில் "புதிய தேசியக் கல்விக் கொள்கையைப்  புறக்கணிக்க வேண்டும் ஏன்?" எனும் தலைப்பில் நடைபெற்ற இணைய வழி  சொற்பொழிவுக் கூட்டத்தில், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ் வரவேற் புரையாற்றினார்.

சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் இர.சிவசாமி தலைமை வகித்தார். மாநில இளை ஞரணி துணைச் செயலாளர்கள் தே.காமராஜ், வெ.ஆசைத்தம்பி, இரா.வெற்றிக்குமார், ஆ.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளை ஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் இணைப்புரை வழங்கினார். திராவிடர் கழகப்- பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தொடக்கவுரையாற்றினார்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப் புரையாற்றினார்.

கல்வி என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் . ஆனால், புதியக் கல்விக் கொள்கை 2020 இல் அதற்கான வாய்ப்பே இல்லை.

சமூகநீதி, சமத்துவம் ஆகிய சொற்றொடர் களையே காண்பது அரிதாக உள்ளது. மொழியை மய்யமாக வைத்து குறிப்பாக சமஸ்கிருதத்தை மத்திய அரசு இதன் மூலம் திணிப்பது இதன் மூலம் வெளிப் படையாகி உள்ளது.

வளர்ந்த நாடுகள் அனைத்தும் தங்கள் மாணவர்களுக்கு  தங்கள் தாய் மொழிலேயே கல்வியை வழங்குகின்றனர். இந்திய விஞ்ஞானிகளாக சிறப்பாகப் பணி யாற்றிய டாக்டர் சிவன், மயில் சாமி அண்ணாதுரை ஆகியோர் தமிழ் வழியில் பயின்றவகள் ஆவார்கள். மத்திய அரசு இது கல்விக் கொள்கையா அல்லது மொழிக்கொள்கையா என்பதை விளக்க வேண்டும். இக்கல்விக் கொள்கை மூலம் சமஸ்கிருதப் பண்பாட்டு அடையாளக் கட்ட மைப்பை மத்திய அரசு உருவாக்க முயல்கிறது. இதற்காக இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஏராள மான நிதியை வாரி வழங்குகிறது.

அரசு கலைக் கல்லூரிகளை கபளீகரம் செய்யத் துடிக்கும் இக்கல்விக் கொள்கையை, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இக் கல்விக் கொள்கையை, சமூக நீதியை ஒழிக்கத் துடிக்கும் இக் கல்விக் கொள்கையை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் எனப் பேசினார்.

மேலும், இறுதியாக தோழர் களின் கேள்விகளு-க்கு- விடையளித் துப் பேசினார்.

நிகழ்ச்சியில், பேராசிரியர் காளி முத்து, புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, மாநில அமைப்புச் செயலாளர்கள் வீ.பன்னீர்செல்வம்,  வே.செல்வம், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என் னாரெசு பெரியார், தஞ்சை மண் டல இளைஞரணி செயலாளர் வே.ராஜவேல், விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர் தா.இளம்பரிதி, மதுரை மண்டல இளைஞரணி செயலாளர் இரா.அழகர், திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் அன்புராஜா, புதுவை இளைஞரணி தலைவர் தி.இராசா, தருமபுரி மண்டல இளைஞரணி செயலாளர் வ.ஆறுமுகம், சேலம் மண்டல இளைஞரணி செயலாளர் கூ.செல்வம், ஈரோடு- மண்டல இளைஞரணி செயலாளர் ஜெபராஜ் செல்லதுரை, பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொறுப் பாளர்கள் மா.அழகிரிசாமி, தமிழ்ச்செல்வன், அண்ணா.சரவணன்,கோபு.பழனிவேல், ரமேஷ், தரும.வீரமணி, கழகச் சொற்பொழிவாளர் பூவை. புலிகேசி, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, வேட்டவலம் பட்டாபிராமன், அரியலூர் சிவக் கொழுந்து, குழ.செல்வராசு, தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி, விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆதவன், பட்டுக் கோட்டை மாவட்டத் தலைவர் வீரய்யா உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நிறைவாக, கோவை மண்டல இளைஞரணி செயலாளர் வெள்ளலூர் ஆ.பிரபாகரன் நன்றி கூறினார்.