ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
துப்பாக்கிக் கலாச்சாரம் தடுப்புக்கான நடவடிக்கை குறித்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
August 4, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை, ஆக. 4- தமிழ் நாட்டில் துப்பாக்கிக் கலாச் சாரம் பெருகி வருகிறது, பீகார்போல மாறி வருகிறது எனத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், துப்பாக்கிக் கலாச்சாரத்தைத் தடுக்க  எடுக்கப்பட்ட நடவடிக்கைக் குறித்து தமிழக அரசு பதி லளிக்க உத்தரவிட்டுள்ளது.

உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியைக் காட்டிக் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரைக் குண்டர் சட்டத்தில் அடைத் ததை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கு, நீதிபதிகள் கிரு பாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவி வருகிறது. குண்டர்கள், கிரிமினல்கள், அரசியல்வாதி கள் துப்பாக்கி உரிமம் வைத் திருக்கிறார்கள். இது சரியல்ல, பீகார், ஜார்கண்ட்டில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் வருகின்றன என நீதிபதி கிரு பாகரன் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த தமி ழக தலைமை குற்றவியல் வழக் குரைஞர், இதுபற்றி டிஜிபி யிடம் தெரிவிப்பதாகக் கூறி னார்.

உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் வைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடு பட்டவர்களை விட்டு விட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், நாட்டு துப்பாக்கி கள் பயன்படுத்தி கொள்ளை யடித்ததாக பீகாரைச் சேர்ந் தவர்கள் கைது செய்யப்பட்டி ருக்கிறார்கள், நாட்டுத் துப் பாக்கி பீகாரிலிருந்து வந்தி ருக்கின்றன, தமிழகத்தில் துப் பாக்கிக் கலாச்சாரம் மெது வாகப் பரவி வருகிறது.

இது நாட்டுக்கும், மாநி லத்திக்கும் நல்லதல்ல. பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கரில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் தமிழகத்தில் ரவுடிகள், குண் டர்கள், அரசியல்வாதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து துப்பாக்கிக் கலாச் சாரத்தைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர், தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, மற்றும் சென்னை காவல் ஆணை யரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி கொள்ளைய டித்ததாக எத்தனை வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள் ளன? வட மாநிலங்களில் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகள் எளிதாக கிடைக் கிறதா? சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்றதாக எத் தனை பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்? வெளிநாடுகளில் இருந்தும் ஆயுதங்கள் விற்பனை செய் யப்படுகிறதா? தமிழகத்தில் எத்தனை பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது? உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள் ளனர்? ரவுடி கும்பல் துப் பாக்கிகள் பெற்று கொலை, கொள்ளை, நில அபகரிப்பு குற்றத்தில் ஈடுபடுகின்றனரா? நக்ஸல்கள், சமூக விரோதி களும், ஆயுதங்களை வைத்து சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்துகின்றனரா?

என் பன உள்ளிட்ட கேள் விகளை எழுப்பி 2 வாரங் களில் பதிலளிக்க உத்தரவிட் டனர்.