ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி
October 11, 2020 • Viduthalai • அரசியல்

அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள், வேலைவாய்ப்புகள், கரோனா கொள்முதல்கள் குறித்து வெள்ளை அறிக்கைகள் எப்போது வரும்? 

சென்னை, அக். 11- அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையையும், கரோனா கொள்முதல்கள் குறித்து தனியாக ஒரு வெள்ளை அறிக்கை யையும் முதல்வர் பழனிசாமி வெளியிட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் நேற்று (10.10.2020) வெளியிட்ட அறிக்கை:
"கரோனாவின் கொடூரமான பிடியில் சிக்கி, தொழில் முதலீடுகள் இன்றியும், வருமானத்தை இழந்தும், வேலைவாய்ப்புகள் இல்லாமலும் தடுமாறி, தத்தளித்துக் கொண்டி ருக்கும் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக, 'தமிழக அரசு எடுத்த முயற்சிகளால் தமிழகம், நாட்டின் முக்கிய முதலீட்டு மய்யங்களில் ஒன்றாக மாறியுள்ளது' என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந் தங்களின் கதி என்னவென்றே இது வரை மாநில மக்களுக்குத் தெரிய வில்லை. அனைத்துத் திசைகளிலும் எல்லா துறைகளிலும் படுதோல்வி கண்டு, மூழ்கும் கப்பலில் அமர்ந்து கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி, 'முதலீடுகளை ஈர்த்து விட்டோம்', 'புதிய தொழில்களைத் தொடங்கிவிட்டோம்' என்று கூறி வருவது கண்டனத்திற்குரியது.

நாட்டில் இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களில் 77 சதவீதம் பேர், தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங் களில்தான் இருக்கிறார்கள்! இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் முதல் வரின் கரோனா நிர்வாகத்தில் மட் டுமல்ல; அனைத்திலும் ஏற்பட்டுள்ள தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளது.

ஆகவே, தனது கரோனா நிர்வாகத் தோல்வியைத் திசைதிருப்ப, முதல்வர் பழனிசாமி போடும் நாடகங்கள் எடுபடாது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் போட்டு விட்டோம் என்று கூறி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. வெளிநாடுகளுக்குப் பயணம் சென்று முதலீடுகளைக் கொண்டு வந்துவிட்டோம் என்று பொய்களை அள்ளி வீச முடியாது.

உலக முதலீட்டாளர் மாநாடுகள் போடப்பட்ட ஒப்பந்தங்களால் வந்த முதலீடுகள் எவ்வளவு? உருவாக்கிய வேலைவாய்ப்புகள் எவ்வளவு? என் பது குறித்து ஒரு வெள்ளை அறிக் கையை வெளியிட முடியாத முதல்வர், 'தமிழகத்தை முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக மாற்றிவிட்டோம்' என்று கூறுவது நல்ல வேடிக்கை! இதுவரை அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட் டுள்ள வேலை வாய்ப்புகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஊழலின் சுரங்கமாக இருக்கும் கரோனா கொள்முதல்கள் குறித்து தனியாக ஒரு வெள்ளை அறிக்கையை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.