ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
திருவனந்தபுரம் விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க முடியாது
August 21, 2020 • Viduthalai • தமிழகம்

பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம், ஆக. 21- கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு 50 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவதற்கு மத்திய பாஜக அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது. இதோடு கவுஹாத்தி, ஜெய்ப்பூர் விமான நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், இந்த அனுமதியைக் கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், “2003ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அளித்த உத்தரவாதத்தை மீறி திருவனந்தபுர விமான நிலையத்தை அதானி குழுமத்துக்குக் குத்தகைக்கு விடுவது முறை யற்றது. மாநில அரசின் வாதங்களை கருத்தில் கொள்ளாமல் அமைச் சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது ஒருதலைபட்சமானது. இதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு நல்காது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தின் முக்கியப் பங்குதாரராக மாநில அரசு, ஏற்கெனவே கொச்சி, கண்ணூர் ஆகிய விமான நிலையங்களை சிறப்பாக நிர்வகித்து வருவது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படி இருக்கும்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். இந்த முடிவு மாநில மக்களின் விருப்பதிற்கு எதிராக உள்ளது. ஆகையால் இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவு

வழங்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஆக. 21- தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும்வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து சென்னையில் நோயின் தாக்கம் சற்றுக் குறைந்திருந்தாலும், மற்ற மாவட்டங்களில் தொற்றின் வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனால், மாணவர்களுக்குத் தொலைக்காட்சிகள் மூலம் வகுப் புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாணவர்களுக்கு வேண்டிய சத்துணவு மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. அதில்,  நடப்புக் கல்வி யாண்டு மாணவர்களுக்கு 220 நாட்களுக்கு மதிய உணவு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கரோனா நோய் தொற்று காரணமாக 5 மாதங்களாக மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதாகவும், தமிழக அரசின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகளை தவிர்க்க எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில், அரிசி, பருப்பு, ஆகிய உலர் உணவு பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் மாதத்தில் பள்ளிகள்  மூடப்பட்ட நாட்களையும் சேர்த்து, அடுத்து பள்ளிகள் திறக்கப்படும் நாள்வரை மாணவர்களுக்கு இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதனையடுத்து தொடக்கப்பள்ளி மாணவர் களுக்கு 100 கிராம் அரிசியும், 40 கிராம் பருப்பும், உயர்தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு 150 கிராம் அரிசியும், 56 கிராம் பருப்பும் வழங்கப்பட உள்ளது.