ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும், கல்வி வள்ளல் காமராசரும் நிகழ்த்திய கல்விப் புரட்சியின் விளைச்சல்!  மண்டல் கமிஷனின் விழுமிய பலன்!
August 6, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

மத்திய அரசின் சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக மாணவ - மாணவிகள் 44 பேர் தேர்வு: பாராட்டு - வாழ்த்துகள்!

திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும், கல்வி வள்ளல் காமராசரும் நிகழ்த்திய கல்விப் புரட்சியின் விளைச்சல் - மண்டல் கமிஷனின் விழுமிய பலனால் மத்திய அரசின் சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக மாணவ - மாணவிகள் 44 பேர் தேர் வாகியிருக்கிறார்கள் - அவர்களுக்குப் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் சிவில் சர்வீசஸ் பதவிகளில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். போன்ற 24 விதமான உயர் பதவிகளுக்கு தமிழ் நாட்டிலிருந்து மொத்தம் 44 பேர் தேர்வாகி யுள்ளனர்.

தமிழக அளவில் முதலிடம்!

அவர்களில் பலர் எளிய குடும்பங்களி லிருந்தும் தேர்வாகி உள்ளனர்.

தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ள நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார், தேசிய அளவில் 7 ஆவது இடத்தைப் பெற் றுள்ளார். (இவரது அடிப்படையான படிப்பே, பிரபல கல்வி நிறுவனங்களிலிருந்தே இவரைத் தயாரித்திருக்கிறது - பி.டெக் படிப்பை கான் பூரிலும், எம்.பி.ஏ. படிப்பை அகமதாபாத்திலும் படித்துள்ளார்).

மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணிநகரத் தைச் சேர்ந்த முருகேசன் - ஆவுடைதேவி இணையரின் மகள் செல்வி பூர்ணசுந்தரி. இவர் பார்வை மாற்றுத் திறனாளி. 5 வயதில் பார்வையை முழுமையாக இழந்தபோதிலும், தொடக்கக் கல்வி முதல் தன்னம்பிக்கையோடு பயின்று பட்டப் படிப்பை முடித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிக்குப் பாராட்டு!

2018 ஆம் ஆண்டு வங்கித் தேர்வில் வெற்றி பெற்று ஊரக வளர்ச்சி வங்கியில் பணிபுரிந்த பூர்ணசுந்தரி, 4 ஆவது முறையாக 2019 இல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அதில் 286 ஆம் இடத்தில் வெற்றி பெற்று, அய்.ஏ.எஸ். ஆகி யுள்ளார்!

அதேபோல, சென்னை ஓட்டேரி புதிய வாழைமாநகரைச் சேர்ந்த பாலநாகேந்திரன் என்ற பார்வை மாற்றுத் திறனாளியும் வெற்றி பெற்றுள்ளார். இருவருக்கும் நமது தனி பாராட்டுகள் - வாழ்த்துகள்!

‘‘சிறு வயது முதலே எனக்கு என் தாய்தான் ஆசிரியர்; போட்டித் தேர்வுக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில்  சென்றபோது அங்கு நண்பர்கள் செய்த பொருளாதார உதவிதான் என்னை வெற்றியாளராக உருவாக்கியது'' என்று நன்றியுணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார்!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த

மூன்று மாணவிகள்!

அதேபோல், இவ்வாண்டு தமிழ்நாட்டின் வெற்றிப் பட்டியலில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் இடம்பிடித்து அம்மாவட் டத்திற்குத் தனிப் பெருமை சேர்த்துள்ளனர்!

இதில் இருவர் மாநில அளவில் 2 ஆம், 3 ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

பண்ருட்டியை அடுத்த மருங்கூர் கிராமத் தைச் சேர்ந்த இராமநாதன் மகள் அய்ஸ்வர்யா, மாநில அளவில் 2 ஆம் இடம் பெற்றுள்ளார்! தேசிய அளவில் 47 ஆவது இடத்தைப் பெற் றுள்ளார்!

தனது தாயார் இளவரசிதான் இந்த அள வுக்குத் தன்னை ஊக்கப்படுத்தி வெற்றி பெற வைத்தவர் என்றார். (இவரது தாயார் தமிழக அரசின் கல்வித் துறையில் பணிபுரிகிறவர்)

அதுபோலவே, கடலூர் பண்ருட்டியை அடுத்த பண்டரக்கோட்டை  மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் சிவப்பிரகாசம் மகள் பிரியங்கா, தமிழக அளவில் 3 ஆம் இடத்தையும், தேசிய அளவில் 68 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்! (இவரது தாயார் பரிமளா  - போஸ்ட் மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார்).

பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணப் பிரியா என்பவர் தேசிய அளவில் 514 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அறிஞர் அண்ணாவின்

கொள்ளுப் பேத்தி!

அதுபோலவே, திராவிடர் இயக்கத்தவர் களும் சரி, மற்ற பொதுத் தொண்டறத்தில் ஈடு பட்டவர்களும் சரி மிகுந்த மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒரு செய்தி. அறிஞர் அண்ணாவின் கொள்ளுப் பேத்தி, டாக்டர் பரிமளத்தின் மகளின் மகள் ராணி, அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது அறிய எல்லை யற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

நகைச்சுவை நடிகர்

சின்னிஜெயந்தின் மகன்

அதுபோலவே, தமிழகத்தின் நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் அய்.ஏ.எஸ். தேர்வில் சிறப்பாக வெற்றி பெற்றுள்ளார் என்பதும் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்!

கடலூர் மாவட்டத்தில் மருங்கூர், பண்டரக் கோட்டை போன்ற கிராமப் பகுதிகளிலிருந்து அதுவும் நமது மகளிர் தேர்வாகி இருக்கிறார்கள் என்றால், அதற்கு மூலகாரணம், படிப்பை அனைவருக்கும் அளிக்காதீர் என்ற பிற்போக் குத்தனத்தின் முது கெலும்பு முறிக்கப்பட்டது தான்.

கல்விப் புரட்சியின் விளைச்சல்!

அதுமட்டுமா?

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று கேட்ட பத்தாம்பசலித்தன மூடநம்பிக் கையை மாய்த்து திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும், கல்வி வள்ளல் காமராசரும் நிகழ்த்திய கல்விப் புரட்சியின் விளைச்சல்.

இவை எல்லாவற்றிலும் முதன்மையானது ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ' என்று எண்ணி தன்னம்பிக்கையுடன் உழைத்த - வெற்றிக் கனி பறித்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!

மண்டல் கமிஷனின்  விழுமிய பலன்!

மண்டல் கமிஷன் அமலானதனால், விழுமிய பலன் ஏற்பட்டு, ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவ, மாணவிகள் சமூகநீதி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது!

மேலும் பல வெற்றிகளைக் குவிக்க, மக்கள் சமூக மேம்பாட்டிற்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்களாக!

 

கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

6.8.2020