ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
திராவிடர்கள்மீது  வேதங்களின் தீராப் பகை!
September 9, 2020 • Viduthalai • மற்றவை

"ஆரியர்களால் தோற்கடிக்கப் பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவி டர்கள் - தஸ்யூக்கள் என்றும், தான வர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்."

"இது ஆரியக்கவிகள், திராவிடர் கள்மீது கொண்டிருந்த வெறுப்பைக் காட்டுகின்றது. ஏனெனில் ஆரி யர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் செலுத்து வதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்."

- சி.எஸ்.சீனிவாசாச்சாரி, எம்.ஏ., எம்.எஸ்., இராமசாரி அய்யங்கார் எம்.ஏ., (இந்திய சரித்திரம்: 16,17ம் பக்கங்கள்)

"ஆரியர்கள்இந்தியாவிற்குள் நுழைந்ததால் பல புதிய பிரச் சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசியலாலும் மாறுபட்ட திரா விடர்கள், ஆரியர்களால் தோற்கடிக் கப்பட்ட திராவிடர்கள் நீண்டகால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்த படியால், இவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட ஆரியர்களுக்கும் இவர் களுக்கும் (திராவிடர்களுக்கும்) இடையே விரிந்த பெரிய பிளவு ஏற்பட்டது"

 - பண்டித நேரு, (Discovery of India, page: 62)

"ஓ! இந்திரனே! பிப்ரூ மிருகாய அசுர அரசர்களை ஆரிய மன்ன னான விதாதின் புத்திரன் ரிஜுஷ் வனுக்கு அடிமைப்படுத்தினாய்! அய்ம்பதாயிரம் கறுப்புப் படைகளை அழித்தாய்; முதுமை உயிரை மாய்ப் பது போல அநேக கோட்டைகளையும் பாழாக்கினாய்!"

- ரிக் வேதம், மண்டலம் 17, மந்திரம் 14, ஸ்லோகம் - 12.

"ஓ இந்திரனே! சோமனே! ராட்சதர்களை எரி! எரி!! நசுக்கு! நசுக்கு!! இருண்டவனாந்தரங்களில் ஒன்று,பத்து, நூறாய்ப் பெருகிவரும் அந்த அரக்கக் கூட்டங்களை அடக்கு! அடக்கு!! சின்னாபின்னப் படுத்து; மடையர்களை அக்கினிச் சுவாலையில் சுட்டுப் பொசுக்கு! சித் திரவதை செய்!! நார் நாராகக் கிழித் தெறி! துண்டு துண்டாக வெட்டு!!"

- ரிக்வேதம், 8வது மண்டலம், 104வது மந்திரம், ஸ்லோகம் -1.

"ஓ இந்திரனே! சோமனே! அந்த அசுரக் கூட்டத்தை, துரோகிகளை, தீமையே உருவானவர்களை அக்கினி குண்டத்தில்வைத்து நீர்ப் பானையில் வேக வைத்து அவித்துக் கொல்! பிராமணத் துரோகிகளான அந்தப் பச்சை மாமிசம் தின்னும் அரக்கர்களை மீளா நரகத்தில் தள்ளி ஹிம்சிப்பாயாக!"

- ரிக்வேதம், மண்டலம் 8, மந்திரம்: 104, ஸ்லோகம் - 2.

"குகைகளிலும் வனாந்தரங் களிலும் பதுங்கிக் கிடக்கும் அந்தச் சண்டாளர்களைக் கீறிப், பிளந்து அரிந்து சித்திரவதை செய்! இருண்ட காடுகளில் மறைந்து கிடக்கும் அவர் களுக்கு ஒரு உதியும் செய்யாதே! அந்த வனாந்தரங்களிலும் அவர்கள் மீளாமல் போவார்களாக! உனது பயங்கர பலத்தால் அவர்களை அடக்கி ஒடுக்குவாயாக!"

- ரிக்வேதம், மண்டலம் 8, மந்திரம்: 104, ஸ்லோகம் - 3

"அசுரர்கள் ஒழிக! அவர்கள் பிள்ளை குட்டிகள் நாசம் அடைக! அவர்களுடைய பிற்கால சந்ததிகள் ஒழிக! பூமிதேவி அசுரக் கூட்டங்களை விழுங்கி விடட்டும். இரவும் பகலும் எங்களை இம்சிக்கும் அசுரக்கூட்டம் நாசமாகட்டும்!"

- ரிக்வேதம், மண்டலம் 8, மந்திரம்: 104, ஸ்லோகம் - 11

"சோம பானம் செய்யும் இந் திரனே! யதூதனர்களின் சந்ததியினர் களை அடித்துப் பிடித்து இழுத்துக் கொண்டு வருவாயாக!" பாவமன் னிப்புக் கேட்போரின் வலக்கண்ணை யும், இடக்கண்ணையும் பிடுங்கி விடுவாயாக!"

- அதர்வணவேதம், காண்டம் - 1, மந்திரம் - 3, ஸ்லோகம் - 3

வேதம் விஷம் கக்கும் நாகம் என்பது இப்பொழுது புரிகிறதா?