ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
திராவிடர்களின் தேசிய திருவிழாவாக தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடிட கும்பகோணம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
September 12, 2020 • Viduthalai • தமிழகம்

கும்பகோணம், செப். 12- கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழக  கலந்துரை யாடல் கூட்டம் 4.9.2020 வெள்ளி அன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை கும்பகோணம் பெரியார் மாளி கையில்  நடைபெற்றது.

குடந்தை மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராஜ் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார்.

கூட்டத்திற்கு மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், மண்டலச் செயலாளர் க.குருசாமி, மாவட்டத் தலைவர்  வழக்குரைஞர் கு.நிம்மதி, பொதுக்குழு உறுப்பினர்கள் சு.விஜய குமார், தாராசுரம் வை.இளங்கோவன்  ஆகியோர் முன்னிலையேற்று உரை யாற்றினர்.

மாவட்ட அமைப்பாளர் வ. அழகு வேல், பாபநாசம் ஒன்றியத் தலைவர் தங்க. பூவானந்தம், குடத்தை ஒன் றியத்தலைவர் ஜில்ராஜ், வலங்கை ஒன்றியத் தலைவர் சந்திரசேகரன், செயலாளர் பவானி சங்கர், திரு விடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சங்கர், குடந்தை பெரு நகரத் தலைவர் கு.கவுதமன், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் திரிபுரசுந்தரி, மாவட்டத் துணைத் தலைவர் வலங்கை கோவிந்தன், திரு நாகேஸ்வரம் சிவக்குமார், பட்டீஸ் வரம் இளவழகன், குடந்தை ராஜப்பா, நாச்சியார் கோவில் குணசேகரன், கோவி.மகாலிங்கம், கோவிந்தகுடி ஜெயபாலன், பவுண்டரிபுரம் முரு கேசன், சி.செல்வக்குமார், சுதன்ராஜ், குருமூர்த்தி, ராணிகுருசாமி, உஷா ராணி, பரிமளா, அறிவுமணி, தென்றல் சதீஷ், பிரவீனா, பெருமை, இயற்கை, வலங்கை சமத்துவம், குடந்தை காம ராசு, வைரமுடி, மதுவந்தி, பூர்ணிமா, சங்கீதாநிம்மதி, குடியரசு, பிரகதி, தற்கொலை கோவிந்தராசு,  மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் பேசுகையில், தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவது, கிராமம் முதல் நகரங்கள் வரை பெரியார் படங்கள், சுவரொட்டிகள், சுவரெழுத்துகள், கழக கொடியேற்றுதல் நடத்தி எங்கு நோக்கினும் Ôபெரியார், பெரியார்Õ என்னும் முழக்கம் கேட்க வேண்டும். கழகத்தோழர்களிடம் கழகப் பொறுப்பாளர்கள் தொடர்போடு இருப்பது கரோனா காலத்தில் அவ சியம் எனவும், கரோனா  காலத்திலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஓய்வின்றி இயங்குவதோடு நம்மையும் இயங்கச்செய்வது குறித்தும்,

பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகளின் மனுநீதி கொள் கைக்கு ஒரே மாற்று தந்தை பெரியா ரின் மனிதநேயம், சமூகநீதி, மானுடப் பற்று கொள்கைகளே, பெரியார்தான் வெல்வார், நூற்றாண்டுகள் பல கடந் தாலும் பெரியார்தான் பேசப்படுவார், மனித நேயத்திற்கு எதிரான மதவாதம் ஒருபோதும் வெல்லாது, தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடுவோம், தந்தை பெரியார் காணவிரும்பிய முழுமையான சமு தாயத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் வென்றெடுப்போம், போட்டி போட்டு பெரியார் பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை செய்வோம் என தனது தலைமையுரையில் குறிப்பிட்டார். இறுதியாக பெருநகர செயலாளர் வழக்குரைஞர் ரமேஷ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன

தீர்மானம் 1

இரங்கல் தீர்மானம்:

திருநாகேஸ்வரம் தி.க.விஜயக் குமார் தாயார் கோவிந்தம்மாள், பாப நாசம் முன்னாள் நகர அமைப்பாளர் கருணாகரன், கரோனா முன்களப் பணியில் ஈடுபட்டு மறைந்த மருத்து வர்கள் உட்பட அனைவருக்கும் இக் கூட்டம் இரங்கலையும், வீர வணக் கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது

தீர்மானம் 2

விடுதலையை பரப்புவோம்:

சமூக நீதிக்கு ஏற்படும் ஆபத்துகள், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்குகள் ஆகியவற்றை கண்டித்தும், மத்திய-மாநில அரசுக ளுக்கு வழிகாட்டிடும் நிலையிலிருந்து சங்கநாதம் புரிந்துவரும் 'விடுதலை' நாளிதழை பிடிஎப் வடிவில் பல லட்சம் நபர்களிடம் சேர்க்கும் பணி யில் அனைத்து தோழர்களும் ஈடுபட இக்கலந்துரையாடல் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3

தலைமைசெயற்குழு தீர்மானங்களை செயல்படுத்துவது:

1.8.2020 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய தலைமை யில் காணொலி வாயிலாக நடை பெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழு மற்றும் மாவட்டத்தலை வர், மாவட்ட செயலாளர்கள் கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்களை ஏற்று செயல்படுத்துவது எனதீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4

தந்தை பெரியார் 142ஆவது பிறந்தநாள் விழா:

அறிவுலக ஆசான் தந்தை  பெரியார் அவர்களின் 142 வது பிறந்த நாள் விழாவினை வரும் செப்டம்பர் 17 அன்று திராவிடர்களின் தேசிய விழாவாக மிக எழுச்சிமிக்க வகையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்தோறும் இல்லங்கள்  தோறும் பெரியார் படம் வைத்து மாலை அணிவித்து கழக கொடிகளை ஏற்றுவது என்றும், பெரியார் படங் கள் தாங்கிய வண்ண சுவரொட்டி களை அச்சடித்து ஊர்தோறும் ஒட்டு வது என்றும், சுவர் எழுத்து விளம் பரங்கள் செய்வது இனிப்புகள் வழங் கியும் எழுச்சிமிக்க செயல்பாடுகளு டன் மிகச்சிறந்தமுறையில் மாவட்டம் முழுவதும் கொண் டாடுவது எனவும் இந்தக் கலந்துரையாடலில் முடிவு செய்யப்படுகிறது.

 

 

 

புதிய பொறுப்பாளர்கள்

திராவிட மாணவர் கழக கும்பகோணம் நகரத்

தலைவர்: அரவிந்த்

செயலாளர்: தமிழ்ச்செல்வன்,

திராவிட மாணவர் கழக குடந்தை மாவட்டத் தலைவர்:

வலங்கை நவீன்

செயலாளர்: இ.அருண்

அமைப்பாளர்:  சபரிநாதன்