ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
திராவிடக் கட்சிகள் குறித்து சமூகவலைதளங்களில் தவறான கருத்துப் பதிவிட்ட இந்து முன்னணி பிரமுகர் கைது
July 29, 2020 • Viduthalai • தமிழகம்

திருத்துறைப்பூண்டி, ஜூலை 29 திருத்துறைப் பூண்டியில் இந்து முன்னணி பிரமுகரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அண்மைக்காலமாகத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திராவிடக் கட்சிகள் குறித்து தவறான கருத்துக்களைப் பதிவிட்டு வந்த இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவாஜிமீது திராவிடர் கழக வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து (செவ் வாய்கிழமை) இரவு சிவாஜியைக் கைது செய்தனர்.