ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித் தொகை கோரிய வழக்கு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தாக்கீது
August 5, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை, ஆக.5 தனியார் ,அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி யின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை நிலு வையை உடனே சம்மந்தப் பட்ட கல்வி நிறுவனங்களுக் குத் தருமாறு உத்தரவிடக் கோரி கல்வி நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில ளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத் தலைவர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந் துள்ள வழக்கில், தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி களில் படிக்கக் கூடிய தாழ்த் தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின்கீழ் மாநில ஆதி திராவிடர் நலத்துறை சார் பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை அந்த மாணவர் களின் கல்விக் கட்டணமாக சம்மந்தப்பட்ட கல்லூரி களுக்குத் தரப்படும்.

ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அந்த மாண வர்களுக்கான கல்விக் கட் டணத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அரசு செலுத்தவில்லை. தற் போது வரை அந்த தொகை நிலுவையில் உள்ளது. எனவே, உடனடியாக நிலு வையில் உள்ள கல்விக் கட் டணத்தைத் தனியார் கல் லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள் ளிட்ட கல்வி நிறுவனங் களுக்கு அளிக்க வேண்டும். இதுபோல கல்விக் கட்டணத் தைத் திருப்பித் தருவதற்கான கால நிர்ணயம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என் றும் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ரவிச் சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு தாரர் சார்பில் வழக்குரைஞர் விஜய் ஆனந்த் ஆஜரானார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தமிழக அரசு 4 வாரங்களுக் குள் பதில் தருமாறு உத்தர விட்டுள்ளது.