ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தாங்க முடியாத கடன் சுமை: நிதி மேலாண்மையில் அ.தி.மு.க. அரசு தோல்வி
August 15, 2020 • Viduthalai • அரசியல்

தளபதி மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, ஆக.15, தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

2011இல் இருந்து கடகடவென உயர்ந்து கொண்டிருக்கும் ரூ.4.56 லட்சம் கோடி கடனும், 2014இல் இருந்து தொடர்ந்து அதிகரித்து 2019-2020ஆம் நிதியாண்டின் திருத்தப் பட்ட மதிப்பீட்டிலேயே ரூ.25 ஆயி ரம் கோடி வருவாய்ப் பற்றாக்குறை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிதி நிலைமையும் மேலும் அதிகமாகி தமிழகத்தின் நிதி மேலாண்மையில் அ.தி.மு.க. ஆட்சி முற்றிலும் தோல்வி யடைந்து நிற்பது கவலையளிக்கிறது.

இயல்பான நிதியாண்டிலேயே நிதி மேலாண்மையை ஒழுங்காகச் செய்ய முடியாமல் கடன் வாங்குவதை மட்டுமே தனக்குத் தெரிந்த ஒரே நிதி நிர்வாக உத்தியாக கற்றுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கரோனா பேரிடர் காலத்தில் அசாதாரணமாக மிக மோசமாகத் தோல்வியடைந்து, தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் தாங்க முடியாத கடன் சுமையை ஏற்றி வைத்து வேடிக்கை காட்டிக் கொண் டிருக்கிறது.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, நகர்த்தி அகற்றிட முடியாத தடைக் கல்லை உருவாக்கி, இந்த 9 ஆண்டு களில் அ.தி.மு.க. அரசு தமிழகப் பொருளாதாரத்திற்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து விட்டது.

2015, 2019 ஆகிய ஆண்டுகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள், முதல்-அமைச்சரின் முதலீடு திரட்டும் உலகச்சுற்றுலா, தற்போது கரோனா காலத்தில் போடப்படும் கண் துடைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என அனைத்திலும் இதுவரை முத லீடுகள் வரவில்லை. தமிழகத்திற்குக் கிடைத்துள்ள புதிய முதலீடுகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கை யைக்கூட வெளியிட முடியாத, கையா லாகாத அர சாகவே இன்னும் சில மாதங்களில் இடத்தைக் காலி செய்து விட்டு, வீட்டுக்குச் செல்லப்போகிறது அ.தி.மு.க. அரசு.

2020_-2021ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியிட்ட கையோடு, கரோனா பேரிடர் தொடங்கி விட்ட நிலையில் அந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் பற்றி நிதி ஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய்து நிதி நிலையை மறுவரையறை செய்து கொள்ள வேண்டும் என்ற ஆக்கப் பூர்வமான ஆலோசனையை வழங் கினேன். ஆனால் வேறு எதற்கோ நேர காலம் இருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு, நான் வழங்கிய ஆலோசனை குறித்துச் சிந்தித்து பார்க்கவே இது வரை நேரமில்லாமல் போய்விட்டது.

ஒவ்வொரு முறை பிரதமரிடம் பேசும்போதும் கரோனா நிதி கேட்பதை மட்டும் அறிக்கையாக வெளியிடும் முதல்-அமைச்சர், அப்படிக் கேட்டதில் 10 சதவீத நிதி கூட வரவில்லை என்று வெளிப் படையாக ஏனோ பேசவே அச்சப் படுகிறார். மத்திய அரசு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கி விட்டோம் என்று கூறிய பிறகும் இன்றுவரை அந்த நிதி வந்ததா, இல்லையா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக ஒரு விளக் கத்தைத் தமிழக மக்களுக்குக் கொடுக் கவே தயங்கி நடுங்கி நிற்கிறார்.

கரோனா பேரிடர் காலம் முடிந்த பிறகு தமிழக நிதி நிலைமை இன்னும் கடுமையாகி அய்.சி.யூ.விற்கு எடுத்துப் போகும் சூழல் எழுந்து விட்டது. தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தி தொழில் வளர்ச்சிக்கு கேடு விளைவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு களை உருவாக்காத ஒரு கேடுகெட்ட ஊழல் ஆட்சியை அளித்து தமிழ கத்தின் பொருளாதாரத்தை முதல்-அமைச்சர் அடியோடு புதைத்து விட் டதைத் தமிழக மக்கள் ஒருபோதும் மறக் கவோ, மன்னிக்கவோ மாட் டார்கள்.

ஆகவே, ஒரு கடைசி வாய்ப்பாக இப்போதாவது முதல்- அமைச்சர் மனம் திருந்தி மக்களின் கரோனா கால பாதிப்பையும், நிதி நிர்வாக சீரழிவையும் மனதில் வைத்து, நிதிநிலை அறிக்கையை மறு ஆய்வு செய்து எஞ்சியிருக்கும் ஆறு மாதங்களில் ஆக்கபூர்வமான நட வடிக்கை எதையாவது எடுக்க முடி யுமா? என்று, இயன்றால் ஆராய்ச்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கரோனா பேரிடரின் மீளாத் துயரில் ஒவ்வொரு குடும்பமும் மூழ்கியிருப்பதால் ஒரு ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5 ஆயிரம் என்று அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நேரடி நிதி யுதவி அளித்து அவர்களின் வாழ்வில் குறைந்தபட்ச ஒளியையாவது ஏற்றிட முன்வர வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.