ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தற்கொலைகள் அதிகரித்தது எப்போது
September 8, 2020 • Viduthalai • மற்றவை

தற்கொலைகள் அதிகரித்தது எப்போது?

உண்மையை மறைத்த பாஜக மாநில நிர்வாகி

மதுரை, செப்.8 தமிழகம் முழுவதும் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறை கேடு நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் கீரனூர் ஊராட்சியில் 161 பேர் உண்மையான பயனாளிகள் இல்லை. போலியாகப் பதிவு செய்து பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என கீரனூர் ஊராட்சியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் தமிழக முதல் வர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள் ளார்.

இந்த ஊராட்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதை வழக்குரைஞர் இராமகிருஷ்ணன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிசாமி ஆகியோர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தனர்.

கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. தமிழக முதல்வர் தனிப்படை அமைத்து இதில் சம்பந் தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்பிரச்சினையில் மனம் வலிக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பின்விவசாயிகள் தற்கொலை குறைந் துள்ளது என அதிமுகவுடன் கைகோத்துள்ளபாஜகவின்மாநில துணைத் தலைவர் சீனிவாசன் செய்தி யாளர்களிடம் கூறிவிட்டு இடத்தை காலி செய்தார். தற்கொலையை பொறுத்தமட்டில் திமுக, காங்கிரஸ் ஆட்சியில்தான்அதிகம்என்று கூறி னார். சாமார்த்தியமாக தேசியகுற்ற ஆவணக் காப்பகம் நான்கு நாட் களுக்கு முன்னர் வெளியிட்ட உண் மைத்தகவலைமறைத்துவிட்டு செய்தி யாளர்களிடம் பொய்யுரைத்தார்.

குற்ற ஆவணக்காப்பகம் கூறுவதென்ன?

கடந்த 2019- ஆம் ஆண்டில் இந்தியாவில் 43 ஆயிரம் விவசாய கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில் 32 ஆயிரத்து 563 பேர் கூலித் தொழிலாளர்கள், 10 ஆயிரத்து 281 பேர் விவசாயிகள். ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிக்கையில் கூலித் தொழிலாளர்கள் மட்டும் 23.4 சதவீதம். கடந்த 2018- ஆம் ஆண்டில் 30 ஆயிரத்து 132 பேர் தற்கொலை செய்த நிலையில் 2019-ஆம் ஆண்டு தற்கொலை எண்ணிக்கை அதிகரித் துள்ளது.

உயிரை தாங்களே மாய்த்துக் கொண்டவர்கள் 10,281 பேர். இதில் 5,957 பேர் விவசாயிகள், 4,324 பேர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இது நாட்டில் தற்கொலை செய்தவர் களில் 7.4 சதவீதம் (1,39,123) ஆகும். 2018- ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் அல்லது விவசாய கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,349 (7.7 சதவீதம்).

2019 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 5,563 பேர் ஆண்கள். 394 பேர் பெண்கள். விவசாயத் தொழிலாளர்களில் ஆண் கள் 3,749 பேர். பெண்கள் 575 பேர். உண்மை எப்போதுமே கசக்கத்தான் செய்யும். இது பாஜகவிற்கு முற்றிலும் பொருந்தும்.