ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தருமபுரியில் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவுத் தூணை பேருந்து நிலையம் அருகே நிறுவிட மாவட்ட திராவிடர் கழகம் கோரிக்கை
September 13, 2020 • Viduthalai • கழகம்

தருமபுரி, செப். 13- தருமபுரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 10.9.2020 வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

வருகைதந்த அனைவரையும் மாவட்ட துணைச் செயலாளர் சேட்டு வர வேற்று பேசினார். மாவட்டத் தலை வர் வீ.சிவாஜி தலைமை ஏற்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண் டாடுவது குறித்து விளக்க உரை யாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் க.கதிர் மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச் செல்வன் மண்டல மாணவர் கழகச் செயலாளர் ம.செல்லதுரை நகர தலைவர் கரு.பாலன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். தந்தை பெரியார் பிறந்த நாளை இந்த காலகட்டத்தில் ஏன் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என் பது குறித்து திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர்      ஊமை.ஜெய ராமன் சிறப்புரையாற்றினார்.                                         நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இரங்கல் தீர்மானம்
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய துணைத் தலைவர் ராமசாமி மற்றும் இளைஞரணி மேனாள் தலைவர் வகுத்துபட்டி  ஆனந்தன் அவர்களின் தாயார் ருக்குஅம்மாள் மற்றும் கொடிய  கரோனா நோயால் உயிர் நீத்த அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட திராவிடர் கழகம் வீரவணக் கத்தை செலுத்துகிறது.                                                      

தீர்மானம்2:

தருமபுரி நான்குவழி சந்திப்பு சாலை அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் நூற்றாண்டு நினைவு தூண் அந்தப் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ததாலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி மாவட்ட நிர்வாகம் இடமாற்றம் செய்து கிருஷ்ணகிரி சாலையில் நினைவுத்தூண் நிறுவப்பட்டது. ஆனால் அதற்கு போதிய பாதுகாப்பு, பராமரிப்பு இல்லாமல் நினைவுத் தூண்மீது சுவரொட்டி ஒட்டுவது, பேனர் கட்டுவது, தூணை மறித்து தள்ளுவண்டி வைத்துக் கொண்டும் உள்ளார்கள். அவற்றை ஒழுங்குபடுத் தித் தரக் கோரி காவல்துறை மற்றும் நகராட்சிக்கு பலமுறை புகார் அளித் தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நினைவுத் தூணை பேருந்து நிலைய பகுதியில் நிறுவி பராமரிப்பு செய்திட மாவட்ட நிர் வாகத்தை மாவட்ட திராவிடர் கழ கம் கேட்டுக்கொள்கிறது.                                            

தீர்மானம்3:

தந்தைபெரியார் 142ஆவது பிறந்த நாளை    முன்னிட்டு மாவட்டம் முழு வதும் சிறப்பாக பட்டி தொட்டி எங்கும் விழா எடுப்பது, மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 21 பெரியார் சிலைகளுக்கு மாவட்ட கழகத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அப்பகுதியில் உள்ள அனைத்து ஆதாரவாளர்களையும் இணைத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாகக் கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது .                                    

தீர்மானம் 4:

தந்தைபெரியார் 142ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி நகரம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, பொம் மிடி, பள்ளிப்பட்டி, தாளநத்தம் ஆகிய பகுதிகளில் சுவரெழுத்துப் பணியை சிறப்பாக செய்து முடித்த கழகப் பொறுப்பாளர்கள் மாவட்டத் தலைவர் வீ. சிவாஜி, மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் மாரி.கருணாநிதி, மாவட்ட துணைச் செயலாளர் சேட்டு, மாநில மாணவர் கழகத் துணைச்செயலாளர் திலீபன், ஆனந்தன், பூபதிராஜ், மற்றும் தாள நத்தம் நடராஜ் ஆசிரியர், பாண்டியன், முனுசாமி ஆகியோருக்கு மாவட்ட திராவிடர் கழகம் பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.


கழகத்தில் இணைந்த தோழர்
மாவட்டத் துணைச் செயலாளர் சேட்டு அவர்களின் வழியாக பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம் போதகாடு கிராமத்தைச் சேர்ந்த சீதாராமன் என்னும் தோழர் தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டார் அவர் கையிலிருந்த அடிமை கயிற்றை மாநில அமைப்புச் செயலாளர் ஜெய ராமன், மாவட்டத் தலைவர் சிவாஜி ஆகியோர் அகற்றி கழகத்தில் இணைத் துக் கொண்டனர். கழகத்தில் இணைந்த சீதாராமனுக்கு தோழர்கள் பாராட்டு தெரிவித்தனர்.                                                          கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் ஆசிரிய ரணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் சின்னராஜ், மாவட்ட இணைச் செய லாளர் சரவணன், மாவட்ட இளைஞ ரணித் தலைவர் தீ.ஏங்கல்ஸ்,கடத்தூர் ஒன்றிய வாசகர் வட்டத் தலைவர் தனசேகரன், வாசகர் வட்டத் துணைச் செயலாளர் மா.சுதா, கொண்டகர அள்ளி  தோழர்கள் ஆனந்தன், சிறீ தரன், பிரகாசம், நகர அமைப்பாளர் பரமசிவம், மாரவாடி காந்தி, படிப்பக உதவியாளர் மல்லிகா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அர் ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இறுதியாக மாவட்ட அமைப்பாளர் பெ.கோவிந்தராஜ் நன்றி கூறினார் .