ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தமிழ்நாட்டில் கலவரம் செய்ய இந்து முன்னணி திட்டம்
August 14, 2020 • Viduthalai • தமிழகம்

தமிழ்நாட்டில் கலவரம் செய்ய இந்து முன்னணி திட்டம்?

விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு

சென்னை, ஆக. 14- விநாயகர் சதுர்த் தியையொட்டி பொது இடங்களில் சிலை வைக்கவும், ஊர்வலம் செல்ல வும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட் டுள்ள செய்தி அறிக்கை பின்வரு மாறு: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22.8.2020 அன்று கொண்டாடப்பட இருக் கிறது. கரோனா தொற்று நோய்ப் பரவலைத் தடுக்க பொது விழாக் களைத் தவிர்க்கவும், பொது இடங் களில் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலை களை ஊர்வலமாக எடுத்துச் செல் வதோ, அச்சிலைகளை நீர்நிலைக ளில் கரைப்பதோ தற்போது ஊர டங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இய லாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலி லேயே கொண்டாட அறிவுறுத்தப் படுகிறது.

மேலும், பண்டிகை கொண் டாடத் தேவையான பொருட்களை வாங்கக் கடைகளுக்கோ, சந்தைக ளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

சிறிய திருக்கோவில்களில் பொது மக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில், அத்தகைய திருக்கோவில்களில் வழி பாடு செய்யும்போது அறிவுறுத்தப் பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை களை தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களும், திருக்கோவில் நிர் வாகமும் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். மேலும், அவ்வாறு வழி பாட்டுத் தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண் டிப்பாக முக கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை கடைபிடிக் கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தடையை மீறி 1.5 லட்சம் சிலைகள் 'பிரதிஷ்டை' செய்யப்படுமாம்:

இந்து முன்னணி தலைவர் சண்டித்தனம்

இந்நிலையில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப் பிரமணியம் என்பவர் கோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ள தற்கு இந்து முன்னணி கண்டனத் தைத் தெரிவித்து கொள்கிறது. கடந்த 36 ஆண்டுகளாக இந்து முன் னணி விநாயகர் சதுர்த்தி விழாவை இந்துக்கள் ஒற்றுமை விழாவாக எழுச்சியுடன் கொண்டாடி வருகி றது. இதுவரை பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தபோதிலும் அவற்றை யெல்லாம் அனுசரித்து விழாவை இந்து முன்னணி முன்னெடுத்து வந்துள்ளது.

தற்போது கரோனா தொற்று காரணமாக சுகாதாரத்துறை விதித் துள்ள கட்டுப்பாடுகளுடன் விழா எடுக்க இந்து முன்னணி தயாராகி வருகிறது. கடந்த 5ஆம் தேதி நடந்த கூட்டத்தில் அரசு தரப்பும் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்குச் சாதகமாகவே பேசினார்கள்.

ஆனால் விநாயகர் சதுர்த்தி விழா விற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது வேதனை அளிக்கிறது. இந்துக்களின் அனைத்து விழாக்க ளையும் தடுத்து நிறுத்த அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறது. ஒடிசாவில் ஜெகநாதர் தேர் திரு விழாவின் சிறப்பை உணர்ந்து உச்ச நீதிமன்றம் கட்டுப்பாட்டுடன் நடத்த அனுமதி அளித்தது.

ஆனால் தற்போது தமிழக அரசு இந்துக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில் இந்து விரோத நிலைப்பாட்டை எடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது. பிற மதங்களுக்கு எத்தகைய உரிமைகள் உள்ளனவோ, அதே போல இந்துக்களுக்கும் வழிபாட்டு உரிமைகள் உள்ளன. எனவே வழிபாட்டு உரிமைகளை மீட்கும் வகையில் தக்க முன்எச் சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற் பாடுகளுடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வருகிற 22-ஆம் தேதி 1லு லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் திட்டமிட்டபடி பிரதிஷ்டை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

தமிழ்நாட்டில் இந்து முன்னணியின் அத்துமீறல் குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் அறிக்கை நாளை விடுதலையில்...