ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தமிழ்நாடு கதவு இல்லாத வீடா - வட நாட்டுக்காரர்களின் வேட்டைக்காடா
August 13, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

தமிழ்நாடு கதவு இல்லாத வீடா - வட நாட்டுக்காரர்களின் வேட்டைக்காடா?

உரிமைக்காகப் போராடும் இளைஞர்கள் வெற்றி பெற திராவிடர் கழகம் வாழ்த்துகிறது!

திருச்சி பொன்மலை இரயில்வே தொழிற் சாலையில் தமிழ்நாட்டை வஞ்சித்து, வடநாட்டைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் போக்கைக் கண்டித்தும், அதற்காகப் போராடும் இளைஞர்கள் அமைப்பினருக்கு வாழ்த்தைத் தெரிவித்தும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

‘‘தமிழக வேலை நிராகரிக்கப்பட்ட இளைஞர் உரிமை மீட்புக் கூட்டமைப்பின்'' சார்பில் கீழ்க் கண்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி திருச்சி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது!

  1. தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களில், பொதுத்துறை நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை வாய்ப்பை தமிழக இளைஞர்களுக்கே கொடுக்க தமிழக அரசு அரசாணையாக வெளியிட வேண்டும்.
  2. தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் - 2016 என்ற இந்தச் சட்டத்தின் பிரிவுகள் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் தமிழ்நாடு அரசுப் பணிகளில் வேலைக்கு எடுக்க வழிவகை உள்ளது. இந்தச் சட்டத் தால் தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்பு பறிபோகின்றது. எனவே, இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்து தமிழக அரசுப் பணிகளில் தமிழக மக்களுக்கு 100 விழுக்காடு வேலை வாய்ப்பை கொடுக்க அரசாணை வெளி யிட்டு தமிழக இளைஞர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க கேட்டுக் கொள்கிறோம்.
  3. இரயில்வே துறையில் தொழில் பழகுநர் (Act Apprentice) பயிற்சி முடித்து இரயில்வே வேலையை மட்டுமே நம்பி காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அனைவரையும் உடனடியாக வேலைக்கு எடுக்கக் கேட்டுக் கொள்கிறோம்.
  4. பொன்மலை இரயில்வே பணிமனை யில் கரோனா பேரிடர் தொற்று காலத்தையும் பொருட்படுத்தாமல் 500 க்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தவர்களை வேலைக்கு எடுக்க சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருவதால், இங்கு பல்வேறு விதிமீறல்கள் நடந்தபடி உள்ளன. ஆகையால் இந்தப் பகுதியில் கட்டுப்பாடின்றி 500 க்கும் மேற்பட்டவர்கள் விதிமுறைகளைக் கடந்து ஒன்று கூடுவதால், இங்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நெருக்கடி காலத்தில் பொன்மலை ரயில்வே பணி மனை தொழிலாளர்களே நிர்ணயிக்கப்பட்ட அளவில் வேலை செய்யும்போது வெளி மாநிலத்தவர்களின் வருகை அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துவதால் சான் றிதழ் சரிபார்க்கும் பணியை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
  5. பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலை செய்து பணி ஓய்வு பெற்ற தொழி லாளர்களின் குடும்பத்து இளைஞர்கள் பலர் வேலையின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன் னுரிமை அளிக்க வேண்டுமாறு சமூகப் பொறுப்புணர்வுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது.

பொன்மலையில்

நடந்தது என்ன?

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும் பணியில், தமிழ கத்தைச் சேர்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என பல ஆண்டுகாலமாக வலி யுறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அறி விக்கப்பட்ட 503 இடங்களுக்கான பணிகளுக்கு 4 தமிழர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட் டுள்ளனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக, பெரும் பாலான வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்ற நிலையில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு ஆள் எடுக்கும் பணி கடந்த வாரம் நடைபெற்றது. இந்தப் பணியில் வடமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 500 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரயில்வே பணிமனையில் வேலை பெற ஏராளமான தமிழர்கள் அப்ரன்டீஸ் முடித்து பணிக்காகக் காத்திருந்த நிலையில், வடமாநிலத் தவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா முடக்கம் காரணமாக, இன்றுவரை ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது, பல்வேறு வட மாநிலங்களில் இருந்து சுமார் 500 வடமாநில இளைஞர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக வந்து கலந்து கொண்டனர். காலியாக இருந்த 503 பதவிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில், அவர்களுக்கு இ-பாஸ் கிடைத்தது எப்படி, இ-பாஸ் வழங்கியவர்கள் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ள நிலை யில், அவர்களின் இ-பாஸின் உண்மையான தன்மை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், வேலைக்கு வந்திருந்த தமிழக இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கரோனா பொது முடக்க காலத்திலும், வட மாநிலத் தொழிலாளர்கள் திருச்சியில் குவிந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவே கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், வடமாநிலத் தவர்கள் எப்படி திருச்சியில் குவிந்தனர் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களுக்கு இ-பாஸ் கிடைத்தது எப்படி என்றும் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

மாநிலத்தில் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனங்களில் தமிழக மக்களுக்கு முன் னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத் தப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசோ, பொதுத்துறை நிறுவனத்தில் வட இந்திய இளைஞர்களை வேண்டுமென்றே நிரப்பி வருகின்றது. இது எந்த விதத்தில் நியாயம் என்று தமிழக இளைஞர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இந்த விஷயத்தில், தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வடமாநிலத்தவர்களின் இ-பாஸ் குறித்து விளக்கம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி இருப்பதுடன், தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய் யும்படி தமிழக அரசுக்கும், தமிழக எம்.பி.க் களுக்கும் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மதுரையிலும்

இதே நிலைதான்...

கடந்த ஆண்டும் மதுரை மற்றும் திருச்சி யிலும் 700-க்கும் மேற்பட்ட வட இந்தியர்களைத் தென்னக ரயில்வே வாரியம் நியமித்துள்ளது.

திருச்சியில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 528 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 475 பேர் வெளிமாநிலத்தவர் என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 53 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர்.

இதே போல் 2019-ஜனவரிமாதம் மதுரை ரயில்வே கோட்டத்தில் 212 வட இந்தியர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.

அஞ்சல் துறையில்

ஆள் எடுப்பு!

அஞ்சல் துறையில் ஆள் எடுப்பு வட வர்களை திணிக்க சூழ்ச்சி;

‘‘தமிழகத்தில் நடந்த தேர்வில் தமிழ் தெரியாத இந்தி மாணவர் தமிழ் இலக்கணத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். அதே போல் மலையாள மொழித் தேர்வில் அரியானா மாணவர் ஒருவர் வினாக்கள் அடங்கிய கேள்வித்தாளை அலைபேசியில் படம் பிடித்து கொண்டு வந்துள்ளார். இந்த இரு சம்பவங்கள் மூலம் அஞ்சல் துறையில் மிகப்பெரும் மோசடிகள் நடைபெற்றுள்ளது தெளிவாக தெரியவந்துள்ளது.  ஆனால், இது குறித்து இதுவரை சம்பந்தப்பட்ட அஞ்சல் துறை எந்த ஒரு பதிலும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது.

இதன் பின்னணியில் அஞ்சல் துறையின் சில அதிகாரிகள் இருப்பதும், மிகப் பெரிய மோசடி இத்தனை நாட்களாக நடந்து வருவதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இதைப் பார்க்கும்போது தென் மாநிலங்கள் அனைத்திலும் இந்தி பேசும் வட இந்தியர்களைத் திணிக்கும் சூழ்ச்சி பின்னப்பட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இரயில்வேயில், அஞ்சலகங்களில், வங்கிகளில் எல்லாம் தமிழ் தெரியாத இந்திக்காரர்கள் வந்து குவிந்து விட்ட னர். ஏற்கெனவே ஒட்டு மொத்த வணிகங்கள் எல்லாம் வடவர்கள் கைகளில் குவிந்த நிலையில், மத்திய அரசு அலுவலகங்களிலும் வடவர் ஆதிக்கம் என்பது அபாயகரமானதாகும். மறுபடியும் வடவர் எதிர்ப்பை முன்னிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.

இப்படியாக தமிழ்நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடாகி விட்டது. தமிழ்நாடு என்ன திறந்த வீடா? யாரும் வந்து நுழைய?

கரோனாவால் நாடு உறைந்து கிடக்கும் ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கபளீகரம் செய்யும் இந்தப் போக்கைக் கண் டித்து நடைபெறும் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் தன் முழு ஆதரவையும் அளிக்கிறது.

நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, தமிழ்நாட்டின் உரிமையை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

இதில் தமிழக அரசும் முக்கிய கவனம் செலுத்தி ஆவன செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

13.8.2020