ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தமிழ்நாடு அரசு அமைத்துள்ள கல்வி நிபுணர்கள் குழுவில் கல்வியாளர்கள் - பெற்றோர் - ஆசிரியர் - மாணவப் பிரதிநிதிகள் அவசியம் தேவை!
September 7, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

தேசிய கல்வி குறித்து நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் விவாதிக்காமல் ஆளுநர்களிடமும், குடியரசுத் தலைவரிடமும் கருத்துக் கேட்பது சரியா?

நிபுணர் குழுவை மாற்றிடுக - வரலாற்றுப் பிழையைச் செய்து வரலாற்றுப் பழியை ஏற்கவேண்டாம்!

தேசிய கல்விக் கொள்கையை நாடாளு மன்றத்திலும், சட்டமன்றங்களிலும் விவாதிக் காமல், ஆளுநர்களிடமும், குடியரசுத் தலை வரிடமும் மத்திய அரசு கருத்துக் கேட்பது - தலைகீழான முறையாகும். தமிழ்நாடு அரசு அமைத்த கல்வி நிபுணர்கள் குழுவில் கல்வி யாளர்கள், பெற்றோர், ஆசிரியர், மாணவர் களின் பிரதிநிதிகள்   இடம்பெறும் வகையில் மாற்றியமைக்கவேண்டும் - தவறான அணுகு முறையால் வரலாற்றுப் பிழையை செய்து, வரலாற்றுப் பழியை ஏற்கவேண்டாம் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

புதிய கல்விக் கொள்கை என்ற கொள்கை முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜெண்டாவினை செயலாக்குகின்ற திட்டம் தான்.

அதனை உருவாக்கியபோது அதில் சிறந்த கல்வி நிபுணர் எவருமே இடம்பெறவில்லை.

கல்வியாளர்கள் இல்லாத கல்விக் குழு

முதலில் இதனை சமஸ்கிருதமயமாக்கிட கால் கோள் விழா நடத்தியவர் டி.ஆர்.எஸ்.சுப்பிர மணியம் என்ற அய்.ஏ.எஸ். பார்ப்பனர்.

அதன்மீது எழுந்த எதிர்ப்புக் குரலுக்குப்பின் அதனை ‘ரிப்பேர்' செய்து அளிக்கும்போது மாற்றி அமைக்கப்பட்ட கல்விக் குழுவிலும் அணுசக்தித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கஸ்தூரி ரங்க அய்யங்கார்தான் தலைவராக இருந்தார், அறிக்கை தந்தார்.

இதுபற்றி நாடாளுமன்றத்திலோ, நாட்டின் அனைத்து சட்டமன்றங்களிலோ விரிவான விவா தங்கள் நடைபெற்ற பிறகே - ஒப்புதல் கிடைத்த பிறகே - மத்திய அமைச்சரவை அதனை ஏற்பது தான் சரியான ஜனநாயக முறையாகும் - மக்களாட்சியின் மாண்பு என்பதும் அதுதான்!

ஆனால், நடந்ததும், நடப்பதும் என்ன? குதிரைக்கு முன்னால் வண்டியா? வண்டிக்கு முன்னால் குதிரையா? என்பதில், குதிரைக்கு முன் னால் வண்டி என்பது போன்ற ஒரு தலைகீழான முறையே - அதுவும் ‘ஒப்புக்குச் சப்பாணி' என்று கூறுவதுபோல, நடைமுறைகள் அமைக்கப் பட்டுள்ளன!

அசல் ஜனநாயகக் கேலிக்கூத்தே!

முதலில் மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டு, அதற்குப் பிறகு குடியரசுத் தலைவரி டமும்,, ஆளுநர்களை அழைத்தும் கருத்துக் கேட்பது என்றால், இதைவிட ஒரு ஜனநாயகக் கேலிக் கூத்து வேறு உண்டா?

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. வின் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சரியானபடி சுட்டிக்காட்டி தனது ஜன நாயக அரசியல் கடமையை ஆற்றிடும் வகையில் இதைத் தவறான அணுகுமுறை என்று சுட்டிக் காட்டியுள்ளது வரவேற்கத்தக்கது.

மத்திய அமைச்சரவையே ஒப்புக்கொண்ட பிறகு, ஆளுநர்களிடமும், குடியரசுத் தலைவரி டமும் கருத்துக் கேட்பு நடத்தி முடிவு செய்வது, சடங்கு அல்லது சம்பிரதாயம் போன்ற ஒரு ‘தமாஷ்' அல்லாமல் வேறு என்ன?

ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பு ஒரே வாரத்தில் என்ன? அதுவும் கரோனா கொடுங் காலத்தில்! இது கரோனாவைவிட கொடுமை அல்லவா?

பல கோடி மாணவர்களின் இன்றைய கால கட்டம் மட்டுமல்ல, இனிவரும் கால சந்ததியினரின் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி கண்ணொ ளியைவிட முக்கியமாகக் கருதப்பட வேண்டிய கல்வியை இப்படியா அவசர கதியில் திணிப்பது?

கல்வியாளர் குழு அமைத்ததில்

தமிழ்நாடு அரசின் தவறான செயல்பாடு

மத்திய அரசின் நிலைப்பாடு இப்படி இருக்க, தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க. அரசு இதில் மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று கூறியது வரவேற்கத்தக்கதுதான் என்றா லும்கூட, புதிய கல்விக் கொள்கை அதுமட்டுமே யல்ல!

கல்வி நிபுணர்கள் குழு அமைத்திருப்பதில் - இந்நாள், முன்னாள் துணைவேந்தர்கள் அய்வரை மட்டும் உறுப்பினர்களாக நியமித்து, உயர்கல்வித் துறை செயலாளரான அய்.ஏ.எஸ். அதிகாரியைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளது, துணைவேந்தர் பதவிகளையே சிறுமைப்படுத்து வதுபோல அமைந்துள்ளது.

பள்ளிக் கல்விக்கான பொதுமேடை அமைப் பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சுட்டிக்காட்டியது போல, பல்கலைக் கழகங்கள் தன்னாட்சி பெற்றவை. பல்கலைக் கழகங்களில் ஆட்சிக் குழுவில் இடம்பெறும்போதுகூட (Ex-officio) கல்வித் துறை செயலாளர்களை, அதிகாரிகளை உறுப்பினர்களாகவும், துணைத் தலைவராகவும் இருப்பதுதான் நடைமுறை.

இதிலும், அவர்களில் ஒருவர் தலைவராகவும், அரசு அதிகாரி ஒருங்கிணைக்கும் குழுவின் செய லாளராகவும்தான் அமைக்கப்பட்டிருக்க வேண் டும். அந்த மரபு இதில் கடைப்பிடிக்கப்படவில்லை.

அதைவிட இந்தக் குழுவில் சமூக ஆர்வ லர்களோ, பள்ளிக் கல்வியில் அனுபவம் பெற்ற ஓய்வு பெற்ற இயக்குநர்களோ அல்லது பழுத்த அனுபவம் வாய்ந்த திரு.எஸ்.எஸ்.இராஜகோபா லன் போன்ற முதிர்ச்சியாளர்களோ இடம்பெறாதது ஏனோ புரியவில்லை.

கல்வியை மத்திய பட்டியலுக்கு

‘அய்ஜாக்' செய்வதா?

கல்விக் கொள்கை கீழ்நிலையிலிருந்து உயர் கல்வி வரையில் இதில் ஆசிரியர்களின் பிரதி நிதிகள், பெற்றோர்கள், மாணவர்களின் பிரதிநிதி கள், பொதுநல ஆர்வலர்கள் அனைவரும் இடம்பெற்றிருந்தால்தான் இதற்குரிய முழுமை கிடைக்கும்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப் பெறுதல் அவசியம். தமிழக சட்டமன்றத்தில் இந்தக் கல்விக் கொள்கைப்பற்றி திட்டவட்டமாக மாநில அரசுகளின் கருத்துகளை மத்திய அரசு கேட்கவேண்டும் என்று வற்புறுத்தவேண்டும்.

கல்வி ஏதோ இப்போதே (யூனியன்) மத்திய அரசு பட்டியலுக்கு ‘‘அய்ஜாக்'' (Hijack) செய் யப்பட்டிருப்பதைப்போல, மாநில அரசுகளையும், நாடாளுமன்ற, சட்டமன்றங்களையும் அலட்சி யப்படுத்துதல் அரசமைப்புச் சட்டத்தினையே புறக்கணிப்பது போன்றதாகும்!

காரணம், கல்வி இன்னமும் ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) தான் இருக்கிறது என்பதை ஏனோ மத்திய அரசு ‘வசதியாக மறந்துவிட்டதுபோல்'  நடவடிக்கைகளை நடத்தி வருகிறது!

மாநிலங்கள் தங்கள் உரிமைகளை வற்புறுத் திட வேண்டியது அதுவும் குழந்தைகளின் கல்வி என்பது அடிப்படை என்பதை எவரே மறுக்க முடியும்?

சரித்திர வீண்பழியைத் தேடவேண்டாம்!

தமிழ்நாடு அரசு தனது குழுவை மாற்றி அமைத்து, ஆக்கபூர்வமான அறிக்கை வெளிவர முழு கவனஞ்செலுத்த வேண்டியது அவசர அவசியம்!

இல்லையானால், வரலாற்றுப் பிழையைச் செய்தவர்கள் என்ற வரலாற்றுப் பழியை ஏற்க வேண்டியவர்களாகி விடுவார்கள் என்பது உறுதி!

 

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

7.9.2020