ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தமிழகத்தில் பள்ளி சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு!
September 11, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை,செப்.11தமிழகத்தில்பள்ளிசிறுவர் களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலமாகி உள்ளது.

இந்தியாவில்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது ஆண்டுக்கு 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போக்ஸோ சட்டத் தின்கீழ் பதியப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் சமீபத்தில் வெளியானது அதிர்ச் சியை ஏற்படுத்தியது.

2018- இல் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் தொடர்பாக போக்ஸோ சட்டப் பிரிவு 4, 6- இன்கீழ் போடப் பட்ட வழக்குகளில் 63,636 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறப் பட்டுள்ளது.

இந்நிலையில்,தமிழகத்தில்பள்ளிகளில் குழந்தைகளுக்குஎதிராக நடக்கும் பாலி யல் குற்றங்கள் குறித்து மாநில குற்ற ஆவண காப்பகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக தகவல் கோரப் பட்டிருந்தது. அதன்படி, கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. அதாவது, பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது.

2013- ஆம் ஆண்டுக்கு பிறகு ஆண்டுக்கு சராசரியாக 16 குற்றங்கள் வழக்குகளாக பதியப்பட்டுள்ளன. 2019 ஆ-ம் ஆண்டு 2,410 நிகழ்வுகள் நடந்துள்ளன.   2018 ஆம் ஆண்டு 2,052 குற்ற சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன.தமிழகத்தில் பள்ளிகள் அல்லாத இடங்களிலும் குழந்தைகளுக்கு எதி ராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மிக அதிகமாகியுள்ளன.

அதாவது, 2013- ஆம் ஆண்டு 419 ஆக பதியப்பட்ட பாலியல் குற்றங்கள், 2014- இல் 1,055 ஆக உயர்ந்துள்ளது. இது 2015- இல் 1,546 ஆகவும் 2016- இல் 1,585 ஆகவும் 2018- இல் 2,052 ஆகவும் 2019- இல் 2,410 ஆகவும் அதிகரித்து வருவது ஆர்டிஅய் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஆண்டில் ஜூலை வரை 2000-க்கும் மேற்பட்ட பாலியல் குற்ற வழக் குகள் பதியப்பட்டுள்ளன.  2006 ஆம் ஆண்டு முதல்படிப்படியாக பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித் துள்ளதாகக் கூறப் படுகிறது.