ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட கரோனா பரிசோதனை 40,63,624 தொற்று உறுதியானது 3,79,385 : தமிழக சுகாதாரத்துறை தகவல்
August 24, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை,ஆக.24 தமிழகத்தில் நேற்றைய (ஆக.23) கரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டி ருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 68 ஆயிரத்து 111 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,650 ஆண்கள், 2,325 பெண்கள் என மொத்தம் 5,975 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 33 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 212 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 849 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,298 பேரும், கோவையில் 392 பேரும், கடலூரில் 380 பேரும், குறைந்தபட்ச மாக தர்மபுரியில் 12 பேரும், விருது நகரில் 10 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 40 லட்சத்து 63 ஆயிரத்து 624 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டு உள்ளது.

இதில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 385 பேருக்கு தொற்று உறுதி செய் யப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்தப் பட்டியலில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 68 ஆண்களும், 1 லட்சத்து 50 ஆயிரத்து 288 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 17 ஆயிரத்து 928 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 48 ஆயிரத்து 497 முதியவர்களும் இடம் பெற்றுள் ளனர்.

கரோனாவுக்கு அரசு மருத்துவ மனையில் 76 பேரும், தனியார் மருத்துவமனையில் 21 பேரும் என 97 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 19 பேரும், சேலத்தில் 8 பேரும், தேனியில் 7 பேரும், வேலூரில் 6 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், செங்கல்பட்டு, நெல்லையில் தலா 4 பேரும், விருதுநகர், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், தென்காசி, சிவகங்கை, நீலகிரி, மதுரை, காஞ்சீபுரம், திண்டுக்கலில் தலா 3 பேரும், கோவை, கடலூர், ஈரோடு, ராணிப்பேட்டையில் தலா இருவரும், திருப்பத்தூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், கரூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரியில் தலா ஒருவரும் என 27 மாவட் டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள் ளது. இதுவரையில் தமிழகத்தில் 6 ஆயிரத்து 517 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 47 பேர் முழுமை யாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,040 பேரும், செங்கல் பட்டில் 483 பேரும், கோவையில் 444 பேரும் அடங்குவர். இதுவரையில் 3 லட்சத்து 19 ஆயிரத்து 327 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சை யில் 53 ஆயிரத்து 541 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 896 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 779 பேரும், ரயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 987 பேரும், கடல் மார்க்க மாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 124 பேர் கரோனாவால் பாதிக்கப் பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.