ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தந்தை பெரியார் பொன்மொழிகள்
September 17, 2020 • Viduthalai • மற்றவை
 1. நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்குச் சுதந் திர நினைப்பு சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக் கூடியவைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக் கின்றேன். எப்படிப்பட்ட பழைமை விரும்பிகளானாலும் இதற்கு இடம் கொடுக்கவில்லையானால் அது நியாயமும் ஒழுங்குமாகாது. 'புரட்சி‘, 17.12.1933
 2. நான் ஓய்வு ஒழிச்சலின்றி, சோம்பல், கழிப் பிணித்தனமின்றி உழைத்தேன். திருட்டு, புரட்டு, மோசடி இன்றி வெள்ளையாய் நடந்து கொண்டேன். என் நடத்தையில் பல தவறுதல்கள், தகாத காரியங்கள் ஏற்பட்டு இருக்கலாம். என்னையே நீதிபதியாகக் கொண்டு எனக்குச் சரி என்று பட்டதையும், தேவை என்று பட்டதையும் செய்தேன். அதுவும் ஒளிவு மறைவு இல்லாமல் செய்து வந்தேன். வாழ்வில், செய லில் பல ஏமாற்றம் அடைந்து இருக்கலாம்; ஆனா லும், அதையே ஒரு படிப்பினையாகக் கொண்டு முயற்சியில் சளைக்காமல் நடந்து கொண்டுதான் வருகிறேன். 'விடுதலை', 17.9.63
 3. நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மையென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளிவிடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில், அவைகளை உண்மையென ஒப்புக் கொள்வதில் மட்டும் பிரயோசனம் இல்லை; அவை களை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொந்த அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான் உங்களுடைய விடுதலை. 'குடிஅரசு', 7.2.26
 4. நான் வெறும் ஆள் என்று கருதி கூப்பாடு போட்டு மிரட்டுவதற்கு உங்களிடம் சரக்கு கிடை யாது. உத்தியோகமோ, பணமோ வயிற்றுச் சோற் றிற்கு வழியோ, ஒரு பெருமையோ, கவுரவமோ எதிர்பார்த்துப் பொதுச் சேவையில் இறங்கவில்லை. 6, 7 தடவை ஜெயில் பார்த்தாய்விட்டது. சிவில், கிரிமினல் இரண்டும் பார்த்தாகி விட்டது. பார்ப்பனர் கள் தொல்லைகளையும் அவர்களால் கூடிய மட்டி லும் செய்து பார்த்தாய் விட்டதை அனுபவித்துமாய் விட்டது. காடு வா, வா என்கிறது. வீடு போ, போ என்கின்றது. நான் செத்தால் எனக்காக அழுபவர்கள் கூட யாரும் இல்லை. என்னால் காப்பாற்றப்பட வேண்டியவர்களும் யாரும் இல்லை. நான் ஒற்றை யாள். நின்றால் நாளைக்கு நெடுஞ்சுவர், விழுந்தால் குட்டிச்சுவர். முழுகிப்போவது ஒன்றுமில்லை. 'பகுத் தறிவு', 21.10.1934
 5. நான் ஒரு பிறவித் தொண்டன், தொண்டி லேயேதான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பதும் எனக்குக் இஷ்ட மில்லாததும் எனக்கு தொல்லையானதுமான காரி யம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டுகோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனேயொழிய இதில் எனக்கு மனச்சாந்தியோ, உற்சாகமோ இல்லை. 'குடிஅரசு', .13.10.1940
 6. எனக்கு ஆசை எல்லாம் மக்கள் பகுத்தறி வாளர்கள் ஆக வேண்டும்; ஜாதி ஒழிய வேண்டும்; உலகில் பார்ப்பனர் இருக்கக் கூடாது. இதுதான் எனது கொள்கை. இதற்காகத்தான் காங்கிரசில் கூப் பிட்டவுடன் சேர்ந்தேன்; நான் காங்கிரசை விட்டதற் கும் இதுதான் காரணம். ஜஸ்டிஸ் கட்சி என்றும் பார்ப்பனரல்லாத கட்சியிலே சேராமலே அதற்கு நான் ஆதரவளித்ததும் இதற்காகத்தான்; ஜஸ்டிஸ் கட்சித் தலைமை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதும் இதற்காகத்தான். அக்கட்சித் தலைமை ஏற்றவுடன் அக்கட்சிக் கொள்கையாக இம் மூன்றை யுமே ஏற்படுத்திவிட்டு, அரசியலில் (எலக்ஷனில்) நிற்பதில்லை. பதவி ஏற்பதில்லை) பிரவேசிப்தில்லை என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதும் இதற்காகத்தான். 'விடுதலை', 26.8.72
 7. தமிழ் மக்களுக்குத் தேவையான சில கருத் துக்களைச் சொல்லிப் பதிந்தாக வேண்டும். இன்று ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நாளை ஒரு நாள் ஏற்றுக் கொள்ளும் நிலை வரும். இக்கருத்துகளை சொல்லும் நிலையில் நான்தான் இருக்கிறேன். சொல்ல வேண்டிய கருத்துகளை நானே எழுதி, நானே அச்சுக்கோத்து, நானே அச்சிட்டு, நானே படித்துக் கொள்ளும் நிலைக்குப் போனாலும் குடிஅரசில் வெளியிட்டு என் கருத்துக்களை வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை. 'குடிஅரசு', 10.6.29
 8. என்னுடைய மூச்சும் தொண்டும், சமூக நீதி வேண்டும் என்பதுதான். நான் பிழைப்பதும் சாவதும் அதற்காகத்தான். சமூக நீதிக்குத்தான் மேல் ஜாதியை நடத்துகிறபடி எங்களையும் நடத்து எங்களுக்குக் கூடுதலாகவும் வேண்டாம் என்பதுதான். இம்மாதிரி எண்ணியதனாலேயே நான் அரசாங்கத்துக்கு விரோதி; ராசத் துரோகி; வகுப்புவாதி என்று ஆக்கப்பட்டுள்ளேன். 'விடுதலை', 28.10.60
 9. எனக்கு 90 வயதாகிவிட்டது. கால் விரலெல் லாம் மடங்கி விட்டது. எழுதினால் கை நரம்பெல்லாம் சுருங்கி வலி எடுக்கிறது. அப்படி இருக்கும் நான் எதற்காக இப்படி அலைய வேண்டும்? இதன் மூலம் பொருள் சேர்த்துக் கொண்டேனா? அல்லது பங்களா கட்டிக் கொண்டேனா? எனக்கிருந்த பங்களா, சொத் துகளை விற்று இயக்கத்திற்குப் போட்டு விட்டு அலைகிறேன் என்றால், ஒரு மனிதன், சோற்றைத் தின்றுவிட்டு எதற்காக வீட்டில் சும்மா இருந்து கொண்டு இருக்க வேண்டும். நம் சமுதாய இழிவைப் போக்க நம்மால் இயன்றதைச் செய்துவிட்டுப் போவோமே என்று தானே அலைகின்றேன். இதைப் புரிந்து கொள்ள நம் இனத்தைச் சார்ந்தவனால் முடியவில்லையே என்பதுதான் எனக்கு வேதனை யாக இருக்கிறது. 'விடுதலை', 29.7.68
 10. எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத் தறி வைக் கொண்டு ஆராய்ச்சி செய்து சரி என்பது பட்ட படி நடவுங்கள் என்பதேயாகும். 'குடிஅரசு', 24.11.40
 11. உலகில் அர்ச்சகன், மாந்திரீகன், சோதிடன் இவர்களைவிட பித்தலாட்டத்தில் கை தேர்ந்தவர்கள் கிடையாது. மதமும், கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்தி விட்டன. குறிப்பாக பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படி கீழ்ஜாதி என்றுகூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப் போலத்தான் மக்களில் சரிபகுதி எண் ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன் மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் - நல்ல துணிமணி வாங்கிக் கொடுத்தால்போதும் என்கிற அளவுக்குத் தங்களை இறுக்கிக் கொண்டு விட்டார்கள். பிராமணன் - சூத் திரன் என்ற அமைப்புக்கும், பேதத்திற்கும், புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்திற்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும் படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக் கொண்டு வருகிறோம். இதற்கு ஒரு பரிகாரம் என்னவென்றால், கலியாணம் என்பதையே சட்ட விரோதமாக்கவேண்டும். இந்த கலியாணம் என்ற அமைப்புமுறை இருப்பதால்தான் கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தனமும் உருவாகிறது. மனைவியாகிவிட்டால் அதோடு சரி - அவர் ஒரு சரியான அடிமை! அது மட்டுமல்ல - இந்தக் கலியாண முறை இருப்பதால் தானே குழந்தை குட்டிகள், அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதித்து - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப் பது என்ற சமுதாய ஒழுக்கக்கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. 'விடுதலை', 27.06.1973
 12. நான், மனித பேதம் ஒழிய வேண்டுமானால், மதம் ஒழிய வேண்டும் என்கிறேன். அன்றியும் மதம் ஒழிந்த இடத்தில்தான் மனிதனின் பிறப்பு பேதம் புதைக்கப்படுகிறது. அதுபோல்தான் பொருளாதார ஏழ்மை, செல்வ பேதம் ஒழியவேண்டுமானால், அவைகளின் உற்பத்தி ஸ்தானம், அதாவது தோன்று மிடமும், காப்பு இடமும் ஒழிக்கப்பட வேண்டும். ஏழ்மைக்கும், செல்வத்திற்கும் கர்த்தாவும், காவலும் கடவுளாய் இருக்கிறது! அப்படிப்பட்ட கடவுளைக் காப்பாற்றிக்கொண்டு அல்லது அக்கடவுள் ஆணைக்கு அடங்கினவனாய் இருந்துக்கொண்டு, கடவுள் தன்மையை - செயலை - கட்டளையை நீ எப்படி மீறி, சமாளிக்க, தாண்டமுடியும் என்று சிந்தித்துப்பார். அதனால்தான் மனித சமுதாய சமத்துவத்திற்கும், மதம் ஒழிக்கப்பட வேண்டியது எப்படி அவசியமோ, அதுபோல் பொருளாதார சமத் துவம் வேண்டுமானால், பொருளாதார பேதத்துக்கும், பேதத் தன்மைக் காப்புக்கும் ஆதாரமாயிருக்கிற கடவுள் தன்மை ஒழிக்கப்படவேண்டியது அவசிய மாகும். 'குடிஅரசு', 10.03.1945