ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தந்தை பெரியார் பேசிய கூட்டத்தில் தக்ளியில் நூல் நூற்ற விந்தை
July 16, 2020 • Viduthalai • மற்றவை

முனைவர் பேராசிரியர்

ந.க.மங்களமுருகேசன்

1929-30களில் வலங்கைமானிலிருந்து சுயமரி யாதை இயக்கத்தில் மிக்கப் பற்றுக் கொண்ட தோழர் ஒருவர் தந்தை பெரியார் அவர்கள் குடந் தைக்கு வரும் பொழுதெல்லாம் வலங்கைமானுக்கு வந்து ஒரு சொற்பொழிவாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டேயிருந்தார்.

தந்தை பெரியார் அவர்களும் ஒரு தடவை குடந்தை வந்திருந்த பொழுது மறுநாள் வலங்கை மான் வருவதற்குச் சம்மதம் தெரிவித்து விட்டார்.

அதன்படி குடந்தை வெங்கட்ராமன், கார்குடி சின்னையா (பிள்ளை) ஆகிய இயக்கத் தோழர் களும் வலங்கைமான் கூட்டத்திற்குச் சென்றிருந் தனர். அக்காலத்தில் வலங்கைமான் என்று சொன் னால் அந்நாளையக் காங்கிரசுக் கோட்டை. அதா வது சுயமரியாதை இயக்க எதிர் முகாமல்ல - எதிரி முகாம்.

கூட்டம் வலங்கைமானில் வடக்குத் தெருவில் கூடியது. கூட்டத்தில் சுமார் 500 பேர் இருந்தனர். 500 பேரும் அல்லது பெரும்பான்மையோர் சுய மரியாதை இயக்க ஆதரவாளர்களா என்றால் இல்லை.

வந்திருந்தவர்களில் பெரும்பான்மையோர் கதருடையும், காந்தி குல்லாவும் அணிந்திருந்த 'வந்தே மாதரம், மகாத்மா காந்திக்கு ஜே' என்று ஜே போடக் கூடிய கூட்டம்.

சிலர் கூட்டத்திலேயே தக்ளியில் நூற்றுக் கொண்டிருந்தனர் என்றால் கூடிய கூட்டம் எப் படிப்பட்டது என்பது விளங்கும்.

கூட்டத்திற்குப் பெரியார் அவர்களை அழைத் தவரைத் தவிர வேறு எவரும் சுயமரியாதைக்கார ராய் இருப்பார் என்று தோன்றவில்லை. கூட்டத் திற்குத் தலைமை வகித்தவர் குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன்.

கூட்டத்திற்குத் தந்தை பெரியாருடன் சென் றிருந்த குடந்தை வெங்கட்ராமனுக்கும், கார்குடி சின்னையா (பிள்ளை)க்கும் என்னமோ ஏதோ நடக்கப் போகிறது என உள்ளூரப் பயம், உதறல் தான்.

கார்குடி சின்னையா (பிள்ளை) 10 நிமிடம் பேசிய பின் தந்தை பெரியார் அந்த எதிரி முகாமில் சுமார் ஒன்றரை மணி நேரம் சங்கநாதம் செய்து சொற்பொழிவு ஆற்றிக் கூட்டத்தை முடித்து வந்தனர்.

எவ்விதக் குழப்பமும் இல்லாமல் கூட்டம் முடிந்திருக்கிறது. கூட்டம் முடிந்ததும் குடந்தைக்கு வந்து விட்டனர்.

இப்படி எதிரி முகாமிலும் சொற்சிலம்பம் ஆடி வெற்றிக் கோப்பையைத் தட்டி வந்த மாவீரர் தந்தை பெரியார்.

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன எதிர்ப்புக் கிடையே அடி படாமல் தப்பித்து வந்த நிகழ்வும் நடந்திருக்கிறது.

குடந்தைத் தாலுகா பார்ப்பனர் அல்லாதார் மாநாடு ஒன்று தோழர் நாராயணசாமி (கோனார்) அவர்களின் முயற்சியால் திருவிசைநல்லூரில் நடைபெற்றிருக்கிறது. அம்மாநாட்டிற்கு வந்த வர்கள் தந்தை பெரியாரும், கார்குடி சின்னையா பிள்ளையும்.

மாநாட்டின் சிறப்பாக ஊர்வலமாக மாநாட்டுப் பந்தலுக்கு தந்தை பெரியாரை அழைத்துச் சென்று மிருக்கின்றனர்.

அப் பக்கம் இருந்த சில பார்ப்பன மிராசுதாரர் கள் தந்தை பெரியார், அவருடன் வந்தவர்கள் ஆகியோரை அன்றிரவு மாநாடு முடிந்து திரும்பி வரும்பொழுது காரை வழிமறித்து அவர்களை அடிக்க வேண்டுமெனத் திட்டமிட்டு சில ஆட்க ளைத் தடிகளுடன் தயார் செய்து நிறுத்தி வைத் திருக்கின்றனர்.

திருவிசைநல்லூர் எனும் மாநாடு நடைபெற்ற ஊரிலிருந்து திருவிடைமருதூர் கிழக்கேயும், கும்ப கோணம் மேற்கேயும் இருக்கிறது. மாநாடு முடிந்து குடந்தையிலிருந்த வெங்கட்ராமன் வீட்டிற்கு மேற்கே வந்து விட்டனர்.

மாநாட்டுப் பாதுகாப்புக்கு திருவிடைமருதூரில் இருந்து வந்திருந்த காவல் துறை அதிகாரிகள் மாநாடு முடிந்து காரில் சென்று கொண்டிருந்தனர். மாநாடு முடிந்து வரும் பெரியார் குழுவினரை அடித்து உதைக்கத் திட்டமிட்ட அடியாட்கள் இடையில் நின்று கொண்டிருந்தனர். இரவு நல்ல இருட்டு வேளை. தெருவில் விளக்குகள் எதுவும் இல்லாத காலம். காரில் வருவது யாரெனத் தெரிந்து கொள்ளாமல் பெரியார் குழுவினர் என்று எண்ணி வந்த காரை நிறுத்தியதும், காரில் இருந்த காவல் துறையினரைக் கண்டதும் அடி ஆட்கள் துண் டைக் காணோம், துணியைக் காணோம் என அலறி அடித்துத் தலைதெறிக்க ஓடியுள்ளனர். மறுநாள் காலையில் திருவிசைநல்லூர் நண்பர்கள் தெரிவித்து அறிந்திருக்கின்றனர்.

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியன கண்ணீரும், செந்நீரும் சிந்தி வளர்ந்த இயக்கம் என்று குறிப்பிடுவார்கள். அது எவ்வளவு உண்மை என்பதற்கு மதுரை கருஞ்சட்டை மாநாட் டுக் கலவரம் போன்றவை மட்டும் உதாரணம் இல்லை. இதுபோல் திருவிசை நல்லூர்களும் எடுத் துக்காட்டுகள்.