ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தந்தை பெரியார் அவர்களின் 142ஆவது பிறந்த நாள் விழா: மிக எழுச்சியோடு கொண்டாடுவதென கோவை மண்டல கலந்துரையாடலில் தீர்மானம்
August 29, 2020 • Viduthalai • கழகம்

கோவை, ஆக. 29-  கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், நீலமலை, திருப்பூர், தாராபுரம்  உள்ளிட்ட கழக மாவட்டங்கள் சார்பில் கோவை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்  காணொலி வாயிலாக 27.8.2020 அன்று மாலை 6.30  மணி அளவில் மண்டலத் தலைவர் ஆ.கருணா கரன் தலைமையில் நடைபெற்றது.

மண்டலச் செயலாளர் ச.சிற்றரசு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில மருத்து வர் அணி தலைவர் இரா.கவுதமன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ இளந்திரையன், மேட்டுப் பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, கோவை மாவட் டத் தலைவர் ம.சந்திரசேகர், திருப் பூர் மாவட்ட தலைவர் இரா.ஆறுமுகம், நீலமலை மாவட்டத் தலைவர் மு.வேணுகோபால், தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் க.கிருஷ்ணன், மேட்டுப் பாளையம் மாவட்டச் செயலாளர் கா.சு.ரங்கசாமி, திருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ் ஆறுச்சாமி, நீல மலை மாவட்ட செயலாளர் மு.நாகேந்திரன், தாராபுரம் மாவட்ட செயலாளர் க.சண்முகம்,கோவை மண்டல மகளிரணி  செயலாளர் கலைச்செல்வி. மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் இரா. சி.பிரபாகரன், மண்டல இளைஞ ரணிச் செயலாளர் ஆ.பிரபாகரன், தமிழ்முரசு, மடத்துக்குளம் தங்க வேல். திருப்பூர் பாலகிருஷ்ணன். பொள்ளாச்சி பொறியாளர் தி. பரமசிவம். சாலைவேம்பு சுப்பை யன், இலா.கிருஷ்ணன், மூர்த்தி, வெள்ளளூர் காளிமுத்து. அ.மு. ராஜா. திருச்சி ஆரேக்கியராஜ். மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம்,  தலைமைக் கழகப் பேச்சாளர் புலியகுளம் க.வீரமணி ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினார்கள்.

பொதுச்செயலாளர்  இரா. ஜெயக்குமார்  சிறப்புரையில் கூறிய தாவது:

இட ஒதுக்கீடு, சமுக நீதி காக்க தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் மத்திய மாநில அரசுகளின் நீட்தேர்வு புதிய கல்விக் கொள்கை என மக்கள் விரோத திட்டங்களை அம்பலப்படுத்தி தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்கள் ஆசிரியர் அவர்களின் அறிக்கை விடுதலையில் தொடர்ந்து வெளி வந்து கொண்டுள்ளது. ஆகவே, நாம் அனைவரும் விடுதலை படிப் பதும் அதை சமூக வலைதளங்களில் பரப்புவதிலும் தோழர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர் என்ன சொல்கிறாரோ அதை செய்தால் போதும். சுந்தராபுரம் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட போது அதை கண்டித்து ராகுல் காந்தி அவர்கள் டிவிட் போடு கிறார். பெரியார் சிலை அவமதிக் கப்பட்ட போது அதனை கண் டித்து கழகத் தலைவர் வழிகாட் டுதலை அப்படியே கடைபிடித்து மாநிலம் முழுவதும் கடுமையான கண்டன ஆர்ப்பாட்டம்  நடை பெற்றது. அதேபோல கோவை மண்டல  கழகம் தனது எதிர்ப்பை போராட்டத்தை மிகவும் சிறப்பாக ஒருங்கிணைத்து அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் ஆதரவாளர் களை திரட்டி கடுமையான தொடர் போராட்டம் நடத்தியது. அதன் விளைவாக அந்த நபர்மீது காவல்துறை தேசிய பாதுகாப்பு சட்டபடி நடவடிக்கை எடுத்தது. கழகத்தின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்பதை சுட்டிக் காட்டி ஆசிரியர் என்ன அறிவிக் கிறாரோ, அவர் என்ன செய்ய சொல்கிறாரோ அதை தொடர்ந்து செய்து முடிக்கும் மண்டல கழக பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர், செயலாளர்கள் உள் ளிட்ட அனைத்து தோழர்களுக்கும் பாராட்டுகள் என்றும், அடுத்து வரக்கூடிய தந்தை பெரியார் அவர் களின் 142ஆவது பிறந்த நாள் விழாவை வெகுசிறப்பாக கோவை மண்டலம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் மிக எழுச்சியோடு நடத்தவேண்டும். பெரியார் பிறந்த நாள் சுவரொட்டிகள்  அனைத்து பகுதிகளிலும் வெகுஎழுச்சியாக ஒட்டப்பட வேண்டும். அதேபோல சுவரெழுத்து பணி மண்டல முழுவ தும்  வாய்ப்புள்ள பகுதியில் சிறப் பாக செய்யவேண்டும். அந்த அள வில் எந்த நேரத்தில் எந்த பிரச்சா ரம் செய்யவேண்டும் என்பது மிக வும் முக்கியம். ஓபிசி இட ஒதுக்கீடு, சமுக நீதி, சுற்றுசூழல் மதிப்பீட்டு வரைவு குறித்து ஆசிரியர் வழி காட்டியபடி விழிப்புணர்வை ஏற் படுத்த மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவேண்டும். மதவாத பிஜேபி யின் மக்கள் விரோதக் கொள்கை களை அம்பலபடுத்துவதே நமது ஒரே நோக்கம் என்பதை மன தில் வைத்து பிரச்சாரம் செய்ய தயா ராக வேண்டும் என கூறி மண்டல கலந்துரையாடலில் பங்கேற்ற மாநில மண்டல மாவட்ட பொறுப் பாளர்கள் உள்ளிட்ட அனைவருக் கும் வாழ்த்து கூறிய தனது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்வில் கணியூர் சிவகுமார், த.க.கவுதமன், செம்மொழி சுரேஷ், கவிதா, திலகமணி, வெற்றி செல் வன், இலைக்கடைசெல்வம் உள் ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

கூட்ட முடிவில் குமரேசன் நன்றி கூறினார்.

கலந்துரையாடல் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1.

சமூகநீதிக்கு ஏற்படும் ஆபத்து கள், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்குகளை கண்டித்தும் மத்திய, மாநில அரசு களுக்கு வழி காட்டும் நிலையில் இருந்து சங்க நாதம் புரிந்துவரும் விடுதலை நாளிதழை பிடிஎஃப் வடி வில் வாட்ஸ்அப் மூலமாக லட்சம் நபர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் அனைத்து தோழர்களும் ஈடுபடுவது என முடிவு செய்யப்படு கின்றது!

தீர்மானம் 2.

1.8.2020 அன்று தமிழர் தலைவர் அவர் களின் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற் குழு மற்றும் மாவட்டத் தலைவர் கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத் துவது என தீர்மானிக்கப்படுகின்றது!

தீர்மானம் 3.

செப்டம்பர் 17 அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 142 ஆவது பிறந்த நாள் விழாவினை திராவிடர்களின் தேசியத் திரு விழாவாக மிக எழுச்சியோடு கொண்டாடும் வகையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஊர் தோறும் இல்லம் தோறும் பெரி யார் படங்களை வைத்து மாலை அணிவிப்பது கழகக் கொடி ஏற் றுவது பெரியார் படங்கள் தாங்கிய வண்ண சுவரொட்டிகளை அச்ச டித்து ஊர்தோறும் ஒட்டுவது சுவரெழுத்து விளம்பரங்களை செய்வது இனிப்புகளை வழங்கு வது உள்ளிட்ட செயல்பாடுகளு டன் மிகச் சிறப்பாக கொண்டா டுவது என முடிவு செய்யப்படுகிறது.

 தீர்மானம் 4.

மத்திய அரசு கொண்டு வந் துள்ள குலக்கல்வி திட்டமான புதிய தேசிய கல்விக் கொள்கையை முற்றிலும் புறக்கணித்து விடுமாறு தமிழக அரசை இக்கூட்டம் வற் புறுத்துகிறது. தாழ்த்தப்பட்ட பிற் படுத்தப்பட்ட கிராமப்புற மாண வர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு மத்திய அரசை இக்கூட்டம் வற்புறுத்துகிறது.