ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தந்தை பெரியார் அவர்களின் 142ஆவது பிறந்த நாள் விழா பட்டிதொட்டி முதல் இல்லந்தோறும் கொண்டாடுவோம்
August 18, 2020 • Viduthalai • கழகம்

 கழக மாவட்டத் தலைவர்கள் - செயலாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் அவர்கள் வழிகாட்டுதல் உரை

சென்னை, ஆக. 18- திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 16.8.2020 முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் காணொலி மூலமாக நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆற்றிய வழிகாட் டு தல் உரையில், கரோனா காலத்தில் நமது தோழர்கள் அச்சப்பட தேவையில்லை. துணிவுடன் செயலாற்றுங்கள் அதே நேரத்தில் அலட்சியமாக இருக் காதீர்கள்.  ஒவ்வொருவரின் பாது காப்பும் மிகவும் முக்கியம். பாதுகாப்பாக இருங்கள். முடிந்தவரை மற்றவர்க ளுக்கு உதவிடுங்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன் படுத்தி மத் திய பி.ஜே.பி. அரசு மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றி நமது முன்னோடித் தலைவர்கள் பெற்றுத் தந்த உரிமைகளைப்பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன.

சமூகநீதிக்கு எதிரான காரியங் களைச்செய்து வருகிறார்கள். எப்பாடு பட்டாவது சமூக நீதியைப் பாதுகாத் திட வேண்டும். தமிழ்நாடு தந்தை பெரியார் மண்; இங்கு அவர்களால் காலூன்ற முடியவில்லை என்ற கோபம் அவர்களுக்கு உள்ளது. அதனால் பல வித்தைகளைச்செய்து பார்க்கிறார்கள். அவற்றை முறியடிக்கும் சக்தி நமக்கு உண்டு. முறியடிப்போம்!. தோழர்கள் உற்சாகமாக செயல்படுங்கள்.

மாவட்டத் தலைவர்கள், செயலா ளர்கள், ஒன்றியம், மாநகரம், நகரம், கிளைக் கழகத் தோழர்களிடம் தொடர் பில் இருங்கள். தொடர்பு சங்கிலியைப் பெருக்குங்கள். இந்த ஆண்டு தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாளை (செப். 17) நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பட்டி தொட்டிகள் என பெரும் திருவிழா போல் கொண்டாடிட வேண்டும். சுவர் எழுத்து விளம் பரத்தைச் செய்யுங்கள். ஊர்தோறும் வீடுகளுக்கு முன் தந்தை பெரியார் படங்களை வைத்து மாலை அணிவியுங் கள். நாடு முழுவதும் பெரியார் படங் களை அச்சிட்டு ஒட்டுங்கள். கரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உத வுங்கள். பாதுகாப்புடன் செயல்படுங்கள்.

நீட், புதிய தேசியக் கல்விக் கொள் கையை ஒழித்துக்கட்ட மக்களைத் திரட் டும் பணியில் மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வோம். துண்டறிக்கைகள் கொடுப்போம். தமி ழகத்தில் அனைத்து இயக்கங்கள் அர சியல் கட்சிகளை ஒருங்கிணைப்போம் நமது உரிமைகளைப் பாதுகாப்போம்.

சமூக வலைத்தளங்களில் செயல் படும் நமது தோழர்கள் விடுதலையில் என்ன வருகிறதோ அதைப் பரப்பிடும் பணியை மேற்கொள்ளுங்கள். எந்த நேரத்தில் எந்தப் பணிக்கு முன்னு ரிமை அளிப்பது என்பதைப் புரிந்து செயல்படுங்கள். எதிரிகளின் நோக் கம் புரிந்து அவற்றை முறியடிக்கும் வகையில் செயல்படுங்கள். கழக இளை ஞரணி, மாணவரணி, மகளிரணி சிறப்பாக செயல்படுகிறார்கள். மற்ற அணிக ளும் தங்கள் செயல்பாடுகளை விரி வாக்கக் கொள்ளுங்கள். 

இந்த கரோனா காலத்தில் தங் களையெல்லாம் நீண்ட இடை வெளிக்குப் பிறகு காணொலியில் சந்தித்தது நேரில் சந்தித்த உணர்வைப் பெறுகிறேன். மகிழ்ச்சி! உற்சாகமாக பாதுகாப்பாக இருங்கள். பங்கேற்ற அனைவருக்கும் நன்றி வாழ்க பெரி யார், வளர்க பகுத்தறிவு" என குறிப்பிட்டார்கள்.