ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை எழுச்சியோடு கொண்டாடுவது என கோவை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
September 14, 2020 • Viduthalai • கழகம்

கோவை, செப். 14- கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் செப்டம்பர் 13 சுந்தராபுரம் பகுதியில் காலை 11 மணி அளவில் மண்டலச் செயலாளர் ச.சிற்றரசு தலைமையில் நடைபெற்றது. கோவை மத்திய பகுதி பொறுப்பாளர் இல.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

பொறுப்பாளர்கள்

மாவட்டத் துணைச் செயலாளர் தி.க.காளிமுத்து, இளைஞரணி பொறுப்பாளர் ச.திராவிடமணி, மாநகரத் தலைவர் புலியகுளம் க.வீரமணி,  வே.தமிழ் முரசு, தெ.புண் ணியமூர்த்தி, மண்டல மாணவர் கழகச் செயலாளர் மு.ராகுல், மாண வர் கழகப்பொறுப்பாளர் த.க.கவுத மன்,  மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் இராசி.பிரபாகரன், மண்டல இளைஞரணிச் செயலாளர் ஆ.பிரபாகரன், மாவட்ட அமைப் பாளர் மு.தமிழ்செல்வன், ஜி.டி. நாயுடு பெரியார் படிப்பகம், மாவட் டக் கழக அலுவலகப் பொறுப்பாளர் அ.மு.ராஜா, வடக்கு பகுதிச் செயலா ளர் கவிகிருட்டினன், தெ.குமரேசன், க.அர்ச்சுனன், ஆனந்த், கா.கோபால கிருஷ்ணன், க.சி.தமிழ் நியூட்டன், இரா.இருதயராசு ஆகியோர் தங்க ளது கருத்துகளை பதிவுசெய்தனர்.

மண்டல செயலாளர் ச.சிற்றரசு அவர்கள் தனதுரையில், சுந்தராபுரம் தந்தை பெரியார் சிலை, குனியமுத்தூர் பெரியார் சிலை, ஆத்துப்பாலம் பெரி யார் சிலை,  புலியகுளம் பெரியார் சிலை, வெள்ளளூர் பெரியார் சிலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கு செப்டம்பர் 17 அன்று மாலை அணி வித்து தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை மிகவும் சிறப்பாக கொண் டாடுவதோடு, கேபிஎம் பள்ளி, முத்து நகர், பிள்ளையார்புரம், காமராஜ் நகர், குறிச்சி, பாவேந்தர் படிப்பகம் குனியமுத்தூர், முருகாநகர் பெரியார் படிப்பகம், உக்கடம், மாநகர வீதி, ஜி.டி.நாயுடு நினைவு பெரியார் படிப் பகம் ஆகிய இடங்களில் தந்தை பெரி யார் அவர்களின் பிறந்த நாள் விழாவை கழகக் கொடியேற்றி, எழுச்சி முழக்கத்தோடு பிறந்த நாள் விழா நடைபெறுகிறது என்பதை சுட்டிக் காட்டி ஆங்காங்கே உள்ள கழக நிர்வாகிகள் தகுந்த முன்னேற் பாடுகளை மிக சிறப்பாக செய்வதோடு அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே உள்ள தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்ட் இயக்கங்கள் உள்ளிட்ட முற்போக்கு கட்சி தோழர்கள் மற்றும்  ஆதரவா ளர்களை ஒருங்கிணைத்து ஏற்பாடு களை செய்யவதோடு நமது தோழர் களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத் தினார்.

அதேபோல தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் சுவரெழுத்து பணிகளை மிகவும் சிறப்பாக வெள்ள ளூர் பகுதியில் துவக்கிவைத்த மாவட் டத் துணைத் தலைவர் காளிமுத்து, ஆ.பிரபாகரன் மண்டல இளைஞர ணிச் செயலாளர் ஆகியோருக்கும் பாராட்டுகளையும், கோவை மாவட்ட முழுவதும் சுவரெழுத்து பணிக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூபாய் 15 ஆயிரத்தை வழங் கிய மாவட்டத் தலைவர் ம.சந்திர சேகருக்கு அவர்களுக்கு பாராட்டு களையும் உடனிருந்து உதவிய கும ரேசன், இராசி பிரபாகரன், ந.குரு, வெற்றி செல்வன், கிருஷ்ணமூர்த்தி, புலியகுளம் வீரமணி ஆகியோருக்கு வாழ்த்துகளையும், ஆத்துப்பாலம் பெரியார் சிலைக்கு பராமரிப்பு செல வுகளை ஏற்றுக் கொண்ட தா.சூசை ராசு, அதேபோல தந்தை பெரியார் அவர்களின் சிலைகளுக்கு வண்ணம் தீட்டி தந்த  பெயின்டர் குமார் ஆகி யோருக்கு பாராட்டுகளையும், அதேபோல பொள்ளாச்சி பகுதியில் சுவரெழுத்து பணிகளை சிறப்பாக செய்த ஓவியர் மாயவன், உடனிருந்த ஒத்துழைப்பு வழங்கிய பொள்ளாச்சி பொறியாளர் தி.பரமசிவம் உள் ளிட்ட பொள்ளாச்சி நகர பொறுப் பாளர்கள் உள்ளிட்ட கழகத் தோழர் களுக்கும் இந்த கலந்துரையாடல் கூட்டத்தின் சார்பில் பாராட்டுகளை, வாழ்த்துகளையும் தெரிவித்துக் கழ கத் தோழர்களை ஊக்கப்படுத்தி விரி வாக  உரையாற்றினார். இறுதியாக புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.

தீர்மானம் (1)

இரங்கல் தீர்மானம்

பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் டாக் டர் நல்.இராமச்சந்திரன் மறைவிற்கு இந்த கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், அவருடைய சமுகப் பெரும்பணிக்கு வீரவணக்கத்தையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் (2)

கோவை மாவட்டத்தில் அனைத்து  பகுதிகளில் தந்தை பெரியார் அவர் களின் 142ஆவது பிறந்த நாள் விழா எழுச்சியோடு கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் (3)

நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து தொடர்ந்து கோவையில் அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரத்தை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.