ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தந்தைபெரியார் அவர்களின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு
September 7, 2020 • Viduthalai • கழகம்

சங்கராபுரம் வட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

சங்கராபுரம்,  செப். 7- கலந்துரையாடல் கூட்டம் 2.9.2020 புதன்கிழமை மாலை 4 மணியளவில் மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் மு.கலைச்செழியன் தலைமை வகித்தார். இரிசிவந்தியம் ஒன்றியத் தலைவர் அர.சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.கரிகாலன் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் இரிசிவந்தியம் ஒன்றியப் பகுதி கிராமங்களான அரியலூர், பகண்டை, வாணாபுரம் ஆகியவைகளி லிருந்து 10க்கும் மேற்பட்ட புதிய தோழர் கள் வே.கோதண்டபாணி தலைமையில் திராவிடர் கழகத்தில் இணைந்தனர். மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் அவர்களை வரவேற்றுப் பாராட்டினார்.

அவர் உரையாற்றுகையில், திரா விடர் கழகத்தில் சேருவதால் அறிவு வளர்ச்சி பெறும்; தேவையற்ற செலவுகள் குறைந்து பொருளாதாரம் மேம்படும்; கடவுள், மதம், பண்டிகை, வேண்டுதல் ஆகியவற்றால் வீண்செலவாகும். பணம்  வருங்கால சேமிப்பாகும். ஆகையால், திராவிடர் கழகத்தில் சேரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பெரியாரால் தான் இன்று தாழ்த்தப்பட்ட பிற்படுத் தப்பட்ட மக்கள் படித்து அடிப்படை ஊழியர் முதல் மிகவுயர்ந்த குடியரசுத் தலைவர் பதவி வரை வகித்து வருகின் றனர். பெண்ணுரிமைக்காகப்  பெரியார் போராடியதன் விளைவாக இன்று ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங் குகிறார்கள். பெண்களின் உடை, குடும்ப கட்டுப்பாடு பற்றி 90 ஆண்டுகளுக்கு முன் கூறியவை இன்று நடைமுறையில் உள்ளது. பெரியாரால் தான் நாம் மானமும் அறிவும் பெற்று சுயமரியாதை வாழ்வு வாழ்கிறோம்.

தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண் டும்; பிறந்த நாளின் போது தந்தை பெரி யாரின் சிலைக்கு மாலை அணிவித்தும்  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி யும் கொண்டாட வேண்டும்" என்று கூறினார். இறுதியில் கடுவனூர் கிளைத் தலைவர் கி. ஆனந்தன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

(1)தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு இரிசிவந்தியம் ஒன்றிய கிராமங்களில் சுவரெழுத்து விளம்பரம் எழுதுவது என தீர்மானம் நிறைவேற் றப்படுகிறது.

(2) புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் துண்டறிக்கை களை பொதுமக்களிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

(3) திராவிடர் கழகத்தில் புதிதாக இணைந்த தோழர்களுக்கு அவ்வப் போது ஆலோசனைகள் வழங்குவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.