ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தஞ்சை அரசு மருத்துவமனையைச் சீரமைக்க ரூ.25 லட்சம் திரைப்பட நடிகை ஜோதிகாவின் கொடையுள்ளம்: குவிகிறது பாராட்டு
August 9, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை,ஆக.9- மக்களுக்குக் கோவிலைவிட மருத்துவ மனைகள்தான் முக்கியம் என்று திரைப்பட நடிகை ஜோதிகா கூறிய காட்சிப்பதிவு வெளியானபோது, இந்துத் துவாக் கும்பல் அவரைக் குறிவைத்து சமூக ஊடகங் களில் அவதூறு பரப்புரை களைச் செய்தது.  ஆனால், ஜோதிகா தற்பொழுது  அவர் கருத்தின்படி, மருத்துவமனை சீரமைப்புக்கு நன்கொடை யாக ரூ.25 லட்சம் மற்றும் குழந்தைகளுககான மருத்துவக் கருவிகளை கொடையாக அளித்து அவருடைய மனித நேயக் கொடையுள்ளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனையின் முதல்வர் மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி ‘அகரம் அறக்கட்டளை’ முலம் வழங் கப்பட்டுள்ளது.

அதுகுறித்த தகவல் வருமாறு,

தஞ்சை அரசு மருத்துவ மனைக்கு போதிய உபகர ணங்கள் வாங்க நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதி யுதவி வழங்கியுள்ளார். ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களைத் திரைப்பட இயக்குநர் சரவணன் வழங்க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, ராஜ்யசபா உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவ மனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக் காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக் கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இதையடுத்தே தன் பங்களிப் பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசு தார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார்.

சொல்லோடு நின்று விடாமல் களத்தில் செயலில் இறங்கிய ஜோதிகாவின் செயலைப்பலரும் பாராட்டி வருகின்றனர். ஜோதிகா சார் பில் மருத்துவ உபகரணங் களை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகா தாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பெற்றுக் கொண் டார். “ஜோதிகா அவர்கள் செய்திருக்கும் உதவி மகத் தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்றார் அமைச்சர் விஜய பாஸ்கர். மேலும் இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட் சியர் கோவிந்த்ராவ் கூறியதா வது; ஜோதிகா அவர்களின் சமூக அக்கறைக்குத் தலை வணங்குகிறேன். தாய் மார் கள், குழந்தைகள் நலனுக்காக 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவின் பெருமனதுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.