ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தஞ்சாவூரில் பேய்வீடு மூடநம்பிக்கை முறியடிப்பு
September 11, 2020 • Viduthalai • கழகம்

தஞ்சாவூர், செப். 11-- தஞ்சாவூர் தெற்கு வீதியில்இந்துஅறநிலையத்துறை அலுவலர்கள் குடியிருப்பு வீடுகள் உள்ளன15ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் மாவட்ட இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் இராஜ மாணிக்கம் என்பவர் குடியிருந்துள் ளார்.  அவரது மனைவி கார்விபத்தில் மறைவுற்றதை அடுத்து பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டார்.

கடந்த 15 ஆண்டுகளாக யாரும் வசிக்காததால் பங்களா போன்ற வீட் டில் ஆலமரம் வளர்ந்து வீட்டுக்குள் விழுதுகள் படர்ந்து பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் உள்ளது, இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு  முன் தூக்குபோட்டு ஒருவர் இறந்ததாகவும் அவரின் ஆவி அந்த வீட்டில் சுற்றுவ தாகவும் சுற்றியுள்ள மக்களிடம் பீதியை உண்டாக்கிய ஒரு நபர் அந்த இடத்தை ஆக்கிரமித்து வைக்கோல் களை போட்டும் மாடு வளர்ப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்

இந்த மூட நம்பிக்கையை நம்பி அந்த பகுதி மக்கள் பீதியடைந்தனர்  செய்தி அறிந்த தஞ்சை மாவட்ட திரா விடர் கழக தலைவர் வழக்குரைஞர்சி.அமர்சிங் தலைமையில் ஏராளமான கழகத்தோழர்கள் 10-.9-.2020 அன்று காலை 10.30மணியளவில் பாழடைந்த அந்த இல்லத்திற்கு சென்று அந்த பகு தியில் வசிக்கும் மக்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் முழக்கங்களை எழுப்பி அங்கு கூடியிருந்த ஊடக செய்தியாளர்களிடம் இந்த இடத்தை தமிழக அரசு உடன டியாக புனரமைப்பு பணிகளை மேற் கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத் தனர்.

இந்த இடத்தை மூட நம்பிக்கை யின் காரணமாக யாரும் பயன்படுத்த பயந்தால், மூட நம்பிக்கையை ஒழிக் கும் நோக்கோடு பகுத்தறிவாளர் களான நாங்கள் வாங்குவதற்கும் தயார் என அறிவிக்கப்பட்டது.

இணை ஆணையரிடம் மனு அளிப்பு

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான தஞ்சை மாநகரத்தின் மய்யப்பகுதியான தெற்கு வீதியில் பல கோடி மதிப்புள்ள இடத்தையும், அலு வலர்கள் குடியிருப்பு பகுதியையும் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக பயன்படுவதை தடுத்து தமிழக அரசு புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என தஞ்சை அறநிலையத்துறை இணை இயக்குநர் அவர்களிடம் தஞ்சை மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் மனு அளிக்கப் பட்டது. மனுவை பெற்று கொண்ட அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்,

நிகழ்வில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், மண்டலத் தலைவர் மு. அய்யனார், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாத்துரை, கழக கிராமபிரச்சார குழு அமைப்பாளர் அதிரடி.க.அன்பழகன், கழக பேச்சா ளர் இரா.பெரியார் செல்வன், மண் டல மகளிரணி செயலாளர் அ.கலைச் செல்வி, தஞ்சை தெற்கு ஒன்றியத் தலைவர் இரா.சேகர், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங்கம், மாநகரத்தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், மாநில மாணவரணி அமைப்பாளர் இரா.செந்தூரபாண் டியன், உரத்தநாடு பெரியார்நகர் அ.உத்திராபதி, மாவட்ட இளைஞ ரணி செயலாளர் நா.வெங்கடேசன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பா ளர் இரா.சரவணக்குமார், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர்

செ. ஏகாம்பரம், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.அஞ்சுகம் , மக ளிரணி பாக்கியம், விடுதலையரசி, பொ.பகுத்தறிவு,பொ.தமிழிசை, போட்டோ மூர்த்தி, மாணவரணி ரா.கபிலன், நாஞ் சிக்கோட்டை பகுதி செயலாளர் துரை. சூரியமூர்த்தி, வடக்குவீதி விஜயன், நெடுவை அய்யா ஆறுமுகம், அ.பெரியார் செல்வன், கரந்தை பகுதி செயலாளர் டேவிட், தண்டாயுதபாணி உள்ளிட்ட ஏராள மான கழக தோழர்கள் கலந்து தொண் டனர்.

அப்பகுதி மக்கள் பீதியிலிருந்து மீண்டு விழிப்புணர்வை பெற்றனர்.