ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் தாயார் இராஜாமணி அம்மையார் மறைவு
October 5, 2020 • Viduthalai • கழகம்

கழகத் தலைவர் இரங்கல்

மறைந்தும், மறையாமல் நம் நெஞ்சங்களில் வாழும் பகுத்தறி வாளர், மேனாள் அமைச்சர் தங்கபாண்டியன் அவர்களது துணைவியாரும், மேனாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தாயாருமான திருமதி இராஜாமணி அம்மையார் (வயது 84) நேற்று மாலை மல்லாங்கிணறு - அவரது இல்லத்தில் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

அவரை இழந்து வாடும் அவரது மகன், மகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

5.10.2020

குறிப்பு: தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் தொலை பேசியில் தொடர்பு  கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இல. திருப்பதி தோழர்களுடன் சென்று மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.