ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தகவலின் உண்மைத்தன்மை அறிய ‘வாட்ஸ்அப்’பில்  புதிய வசதி அறிமுகம்
August 6, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி, ஆக. 6- வாட்ஸ்அப்பில் வதந்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் பிரவுசிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வதந்திகளையும், போலித் தகவல்களையும் கட்டுப்படுத்தும் விதமாக முகநூல், வாட்ஸ்அப் தரப்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வாட்ஸ்அப்பில் பிரவுசிங் வசதி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.  இதன் மூலம் வாட்ஸ்அப்பில் லென்ஸ் அய்கான் (தேடு குறியீடு) கொடுக்கப்பட்டிருக்கும். பயனர்கள் இதன் மூலம் தங்களுக்கு வந்துள்ள மெசேஜ்களை பிரவுசிங் செய்து உண்மையா, பொய்யா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். வாட்ஸ்அப்பில் பிரவு சிங் செய்தால், நாம் ஏற்கெனவே பயன்படுத்தும் பிரவுசரிலேயே தேடுதல் முடிவுகள் கிடைக்கும். தற்சமயம் குறிப்பிட்ட சில நாடு களில் மட்டும் இந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரேசில், இத்தாலி, அயர்லாந்து, மெக்சிகோ, ஸ்பெயின், அமெ ரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் லேட்டஸ்ட் வாட்ஸ்அப் வெர்ஷனில் பிரவுசிங் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கரோனா குறித்த வதந்திகளைக் கட்டுப் படுத்தவும், செய்தி களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாகவும் மத்திய அரசு சார்பில் கரோனா உதவி மய்யங்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச

புதிய ஆளுநர் நியமனம்

புதுடில்லி, ஆக. 6- ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின்  துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரீஷ் சந்திர முர்மு பதவி விலகலைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத் தின் புதிய  துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  கிரிஷ் சந்திர முர்மு-வின் பதவி விலகல் கடிதத்தை ஏற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்காவை நியமனம் செய்து உள்ளார்.

மருத்துவ மாணவர்களுக்குத் தேர்வு:

இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு

புதுடில்லி, ஆக. 6- கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை யாக நாடு முழுவதும் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங் களில் தேர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதுடன், மாணவர்களைத் தேர்வில்லாமல் தேர்ச்சி செய்து வருகின்றன அல்லது அக மதிப்பீடு மதிப்பெண் முறையில் தேர்ச்சி வழங்கி வருகின்றன. வேலை வாய்ப்புக்காகக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்தும் பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்துவது பற்றியும் இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.

அதில், ''செய்முறை, ஆய்வகம் உள்ளிட்ட எம்.பி.பி.எஸ். படிப்பு களை முடிப்பதில் கல்லூரிகள் கவனம் கொள்ள வேண்டும். கல்லூரிகளைத் திறந்து 2 மாதங்களுக்கு உள்ளாக அல்லது அரசு அனுமதித்த பிறகு இதை மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகத் தேர்வுகளை மருத்துவ மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்குள்ளாக நடத்தி முடிக்க வேண்டும்.

அதேநேரம் 2020ஆம் ஆண்டு முதல் பாதியில் நடைபெறுவதாக இருந்த மருத்துவ இறுதியாண்டுத் தேர்வின் மீதித் தேர்வுகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அந்தளவில் நடத்த வேண்டியது அவசியம். கல்லூரிகளைத் திறக்கும்வரை இறுதியாண்டு மாணவர் கள் தேர்வுகளுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. அத்தகைய மாணவர்கள் இறுதித் தேர்வு முடிந்ததும் மருத்துவக் கல்லூரிகளிலோ, மருத்துவமனைகளிலோ பயிற்சிக்காகச் சேரலாம். மருத்துவ மாண வர்கள் தங்களின் தேர்வுகளை எழுதாமல் அடுத்த ஆண்டுக்குத் தேர்ச்சி அளிக்க முடியாது'' என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.