ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஜோதிபாபூலே - உண்மை நாடுவோருக்கு ஓர் முன்னோடி!
August 21, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள்

மராத்திய சமூகப் புரட்சியாளர் ஜோதிபாபூலே அவர்கள் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக் கப்பட்ட மக்களாகிய பெண்களுக்கும், தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கும் முதல் பள்ளிகளைத் தொடங்கி, ஒரு கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் (1827-1890).

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் போலவே ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, கல்வி வாய்ப்புகளை அனைவருக்கும் அளித்தல், மூடநம்பிக்கைகள் அகற்றல், மதவெறியை ஒழிப் பது போன்றவற்றின் 1870 இல் - 250 ஆண்டு களுக்கு முன்பே போராட்டக் களத்தில் நின்று வென்றவர்.

அக்காலத்தில் விவசாயிகளும், தொழிலாளர் களும், கிராம மக்களும் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி, தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டு மென்றும், மக்களை ஒன்றுபடுத்த பலத்த எதிர்ப்புகள் - சனாதனம் - பழைமை விரும்பிகள் - பார்ப்பன உயர்ஜாதிக்காரர்களின் பலத்தை எதிர்ப்பை மீறி எதிர்நீச்சல் அடித்து மக்கள் இயக் கத்தைக் கட்டி, ஒரு பெரும் பண்பாட்டுப் புரட் சியை உருவாக்கியவர்.

அம்மக்கள் அவரை ‘மகாத்மா’ பட்டம் அளித்துப் போற்றினர் - 1887ஆம் ஆண்டில்!

உண்மை நாடுவோர் சங்கம் - சத்திய சோதக் சமாஜ் என்பது அவர் ஆரம்பித்த ஓர் இயக்கம்; கட்சி அல்ல!

சமூகப் புரட்சியாளர் ஜோதிபாபூலேவின் தத்துவம் உண்மையோடு ஒழுகுவதுதான்.

தந்தை பெரியார் தொடங்கிய ‘குடிஅரசு’ ஏட்டின் அச்சகம் பெயர் ‘‘உண்மை விளக்கம் அச்சகம்‘’ அவர் தொடங்கிய ஏடு ‘‘உண்மை’’ - 50 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவரை ஒருவர் அறியாமலேயே வாய்மைப் போரில் என்றும் இளையார்களாக இருந்தவர்கள் - மனித நேயர்களான இவர்கள்.

ஜோதிபாபூலே உயர் தத்துவக் கோட்பாடுகளே மனித குலம் உய்ய உண்மைதான் முக்கியம் என்பது புரியும்.

ஜோதிபாபூலே கடவுள் நம்பிக்கையாளர் என்றாலும், உருவ வழிபாட்டுக்காரர் அல்ல.

அவர் கூறிய உயர்ந்த தத்துவங்கள் இதோ:

‘‘உண்மைதான் மனிதனின் மதமாகும். உண்மை என்பது நல்லொழுக்கம் ஆகும். அசுத்த மான மனிதனைக் கண்டிக்க வேண்டும். குளியல் மனிதனுக்கு வீரியத்தைத் தருகிறது. அதனால் மனிதன் தன் பணியை உற்சாகத்தோடு செய்ய முடிகிறது. அசுத்தமான ஆடைகள் நோய்க்குக் காரணமாகின்றன. மனித ஆளுமை என்பது புனிதமானது. மனிதனுக்கு மனிதன் அறிவு வேறுபட்டிருக்கலாம். ஆனால், அறிவு என்பது பரம்பரைப் பண்பினால் வருவது அல்ல. உண்மையைக் கொண்டு தனது மனத்தைச் சுத்தமாக வைத்திருக்கும் மனிதனே சுத்தமாக இருப்பான். மனதைச் சுத்தமாக வைத்திருப்பதன் மதிப்பைப் புரிந்து கொள்ள முடியாத மனிதன் பூமிக்குச் சுமையாகவே இருப்பான். கடுமையான உழைப்பும், கறைபடியாத பண்பும் ஒருவனுக்கு நலத்தையும், செல்வத்தையும் சேர்க்கும். அம் மாதிரியான மனிதன், தன் உழைப்பின் பயனை அனுபவிப்பான். துடுக்கான மனிதன் ஏமாற்றுக் காரனாக இருப்பான். அவன் சமூகத்திற்கு எதிரியாக மறுவான். கடுமையான உழைப்பும், நல்லொழுக்கமும் கொண்ட ஒருவன் ஏழை மக்களுக்குப் பெரிதும் ஆதரவாக இருப்பான். அவன் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத் திருப்பான். கெட்ட புத்தி கொண்ட இளைஞன் தன் முதுமையில் துன்பத்தை அனுபவிப்பான். சோம்பேறி மனிதன் என்றைக்கும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டான். அவன் மனம் என்றும் அமைதியாக இருக்காது.

சோம்பேறியே வறுமையின் மறுவடிவமாவான். சூதாட்டம் அனைத்தையும் நாசம் செய்து விடும். பங்குச்சந்தை தரகர்களுக்கு மட்டுமே நன்மை யளிக்கும். மற்றவர்களுக்கு இது அழிவையே தரும். தள்ளி நின்றபடி அதற்கு விடை கொடுத்து விடுங்கள். செல்வந்தர்கள் போல் பாசாங்கு செய்ப வர்கள் இறுதியாக திவாலாகி, மற்றவர்களையும் நாசம் செய்து, இறுதியில் தற்கொலை செய்து கொள்வார்கள். கூட்டுச் சேர்ந்து தொழில் செய் யுங்கள். ஆனால், வரவு - செலவுக் கணக்கில் உண் மையாய் இருங்கள்.

தைரியமான மனிதன், மனக் கசப்பான நேரத்திலோ, நோய் வாய்ப்பட்ட நேரத்திலோ தன் தைரியத்தை இழக்கமாட்டான். அவன் குடும்பத் தில் அமைதியையே பராமரித்து வருவான். அவன் தன் கடமைகளை நேர்மையோடு செயலாற்றி வருவான். மற்றவர்களைப் பழிவாங்குவது என்ற சிந்தனைக்கே இடம் தரமாட்டான். சகிப்புத் தன்மை மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் வழியமைத் துத் தரும். பழி பாவத்திற்கு அஞ்சாத மனிதனின் செயல்கள் அவனுக்கு நாசத்தையே விளைவிக்கும். அவன் அதற்குக் கடவுளையே பழிதூற்றுவான்.

உண்மையை ஒதுக்கிவிட்டு, மதம் குறித்துச் சூடாகவும், குருட்டுத்தனமாகவும் வாதம் செய்யும் நபர்கள் உணர்ச்சிவசப்படுவதோடு இறுதியில் கலவரத்திற்கு வழிவகுத்து விடுவார்கள். அமை திக்கும், ஒற்றுமைக்கும் சகிப்புத்தன்மை முக்கிய மாகும்.

மற்றவர்களின் செழிப்பைக் கண்டு மகிழ்ச்சி யடைகின்ற, நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொண்டு அதனைப் பின்பற்றுகின்ற, மற்றவர்க ளுக்குத் தன் அறிவை கற்றுத்தருகின்ற மனிதனே மதிக்கப்படவேண்டிய மனிதனாவான். ஒவ் வொன்றின் மீதும் பேராசை கொள்கின்ற, தன் சுயநலத்திற்காகப் போராடுகின்ற, தன்னை நியாயப்படுத்திக் கொள்ளும் மனிதன் சுயநல மியாகவே இருப்பான். தன்னை எளிதில் நம்பி வரும் நபர்களை இவர்கள் ஏமாற்றி விடுவார்கள். அனைத்து அறிவுகளிலும் சுய - அறிவே மிகமிக முக்கியமாகும். தன்னலம் கொண்ட மனிதன் தன்னைச் சுய - ஆய்வு செய்து கொள்ளவே முடியாது. சுய ஆய்வு என்பதுதான் அறிவிற்கான உண்மையான அறிகுறியாகும். வரவுக்கு மீறி செலவு செய்பவர்கள் கடனிலேயே மூழ்கிக் கிடப் பார்கள். சுயநலம் கொண்ட நண்பர்களும், உறவி னர்களும், முகஸ்துதியாளர்களும் தேனொழுகப் பேசி மற்றவர்களிடமிருந்து காசைக் கறந்து விடுவார்கள். குடும்பத்தில் ஒவ்வொருவரும் அவரவர் செய்ய வேண்டிய கடமையைச் செய்து வரவேண்டும்.

உண்மையை நேசிப்பது, சுத்தமான எண்ணம், அமைதியான மனம் இவற்றிலிருந்துதான் தைரியம் பிறக்கிறது. நல்ல நடத்தையிலிருந்தும் தைரியம் பிறக்கிறது. தைரியமான மனிதன் வேதனைகளைச் சமாளித்து, அபாயங்களை எதிர் கொண்டு, துன்பப்பட்டவர்களைப் பாதுகாக்கிறான். தீய நடத்தைகள் ஆன்ம பலத்தை முடமாக்கி விடுகின்றன. தீய நடத்தைகள் கவலைகளையும், வேதனைகளையும் கொண்டு வந்து சேர்க்கும். பொய்யர்களுக்கு அமைதி கிடைக்காது.

மற்றவர்களுக்குத் துன்பம் செய்ய வேண்டாம். அது பாவமாகும். பணிவும், நன்றியும், மனநிறைவும் கொண்டவர்களாக இருங்கள். தீய ஒழுக்கங்கள் நோயையும், சோகத்தையுமே தரும். வறுமைக்குக் காரணம் தலைவிதியே என நம்பிக்கை கொள்வது பொய்யான மனநிறைவாகும். குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவே உருவாகும். அமைதி ஓடிப்போய்விடும். உண்மை, மனவலிமை ஆகியவற்றின் துணை கொண்ட மனிதனின் மனநிறைவானது, துன்பமான நேரத்தில்கூடப் பாதிக்கப்படாமல் இருக்கும்.

உன்னத மனிதனான சாக்ரடீஸ்மீது வெறுப்பு கொண்டவர்கள் அவருக்கு விஷம் தந்தார்கள். இருந்தும் அவர் மன அமைதி இழக்கவில்லை. தன் பணியிலேயே கவனமாக இருந்தார். பகுத் தறிவோடும், உண்மையோடும் உலகத்தின் நன் மைக்காக வாழ்ந்து வருபவர்கள் வளம் சேர்ப் பதோடு மகிழ்ச்சியாக இருப்பார்கள். வேதாந்திகள் ஓரவஞ்சனைகளையும், ஜாதி வெறுப்புணர்ச்சி களையும் சகித்துக் கொள்ளமாட்டார்கள். பகுத் தறிவுவாதி மதச் சடங்குகளைப் பின்பற்றமாட்டான். மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருக்க மாட்டான். அம்மாதிரியான பக்தி பயனற்ற வேலை யாகும். பகுத்தறிவுவாதி, ஏழை விதவைகளின் தலையை மொட்டையடிக்கமாட்டான். கற்களை யும், மரங்களையும், - உலோகங்களையும் வணங்க மாட்டான்."

ஜோதிராவிற்கு உரைநடையைக் காட்டிலும், கவிதையே நன்றாக வந்தது. இவருக்கு கவிதைகள் ஆற்றொழுக்காக வந்தன. இவரின் உரைநடை நல்ல காட்டுப்பழமாகும். அதில் இனிப்பு இல்லை. ஆனால், மருத்துவக் குணம் இருந்தது. அவர் உரைநடை கரடுமுரடாக இருந்தது. சில நேரங் களில் இலக்கணப் பிழையோடும், சில நேரங்களில் அநாகரிகமாகவும் இருந்தது. ஜோதிராவின் கவி தைகள் அவரின் ஞானத்தையும், மனிததேயத்தை யும் வெளிப்படுத்துவதாய் இருந்தன.