ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஜெயின் கோயிலில் வெள்ளி கிரீடம் கொள்ளை
October 12, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை, அக். 12- சென்னை புரசைவாக்கத்தில் ஜெயின் கோயிலில் உள்ள சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளி கிரீடம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 600 கிராம் எடை கொண்ட வெள்ளி கிரீடம் கொள்ளையடிக்கப்பட்டதாக கோவில் நிர்வாகி அசோக் குமார் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். வெள்ளி கிரீடம் கொள்ளை குறித்து வேப்பேரி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்


தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க 8 பேர் குழு

சென்னை, அக். 12- திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று (11.10.2020) வெளியிட்ட அறிவிப்பு:  நடைபெறவுள்ள சட்ட மன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், திமுக  மக்களவைகுழு துணைத் தலை வர் கனிமொழி எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, பேராசிரியர் அ.இராமசாமி இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்றத்தில் 4 நீதிபதி காலியிடம்

புதுடில்லி, அக். 12- உச்சநீதிமன்றத்தில் 4 நீதிபதிகள், உயர்நீதி மன்றத்தில் 3 தலைமை நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இவற்றை நிரப்ப கொலிஜியத்தின் பரிந்துரைக் காக அரசு காத்திருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் கடந்த ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, மூத்த நீதிபதிகள் தீபக் குப்தா, பானுமதி மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதனால்,  நிர்ண யிக்கப்பட்ட 34 நீதிபதிகளுக்கு பதிலாக 30 நீதிபதிகளுடன் உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதே போல், கவுகாத்தி, மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. நிர்வாக தேவைக்காக அங்கு தற்காலிக தலைமை நீதிபதிகள் பொறுப்பு வகிக்கின்றனர். நீதிபதிகள்  நியமனத்தை பொறுத்த வரையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 மூத்த நீதிபதி கள் கொண்ட கொலிஜியம், நீதிபதிகளை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யும். கடந்த ஓராண்டாக இந்த பணியிடங்கள்  நிரப்பப்படாதநிலையில், இதுவரை கொலிஜியம் எந்த பரிந்துரை யையும் அரசுக்கு வழங்கவில்லை. எனவே, நீதிபதிகள் பணியி டத்தை நிரப்புவதில் கொலிஜியத்தின் பரிந்துரையை எதிர்பார்த்து இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வினாடிக்கு அதிகரிப்பு

மேட்டூர், அக். 12- மேட்டூர் அணையின் நீர்மட்டம் வினாடிக்கு 24,036 கனஅடியில் இருந்து 26,102 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.11 அடியாகவும் நீர் இருப்பு 63.69 டி.எம்.சியாகவும் உள்ளது. டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 16,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.