ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஜூலை 21இல் கறுப்புக்கொடி அறப்போராட்டம்!
July 19, 2020 • Viduthalai • தமிழகம்

கறுப்புக் கொடி ஏற்றுவோம்; கண்டன முழக்கம் எழுப்புவோம்!

தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அழைப்பு

சென்னை, ஜூலை 19, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 21.7.2020 அன்று கறுப்புக்கொடி ஏற்றி கோரிக்கை ஒலி முழக்கம் எழுப்பும் அறவழிப் போராட்டத் துக்கு தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

கரோனா பரவலை முழுவதுமாகக் கட்டுப்படுத்தி, சிகிச்சை அளித்து மக்களைக் காப்பாற்றும்  திறனும் செயலும் அற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நோய்த் தொற்று பரவிப் பாதிப்பு ஏற்படக் காரணமானதுடன், தமிழகத்தின் ஒட்டுமொத்த பொரு ளாதார நிலைமையையும் உருக் குலைத்துப் பாழ்படுத்திவிட்டது. 100 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் ஊரடங்கு - அந்த ஊரடங்குக்குள் ஊரடங்கு - முழு ஊரடங்கு - அரை வேக்காடு ஊரடங்கு - டாஸ்மாக் திறப்பு உள்ளிட்ட தளர்வுகள் - என அடுத்தடுத்து  புதுப்புதுக் குழப்பத் துடன் எடுக்கும் அரைகுறை முடிவு களால் தமிழ்நாட்டு மக்கள் ஒட்டு மொத்தமாகப் பாதிக்கப்பட்டுள் ளனர். தமிழ்நாட்டை ஆளும் அதி காரத்தில் அ.தி.மு.க. இருந்தாலும், மக்களின் மனதில் நம்பிக்கைக்குரிய இயக்கமாக இருப்பது எதிர்க் கட்சியான தி.மு.க.தான்.

பத்து தீர்மானங்கள்

ஜூலை 16ஆம் நாள் காணொலி வாயிலாக நடைபெற்ற தி.மு.கழக மாவட் டச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பயன் தரும் பத்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இரண்டாயிரத்துக்கும் அதிக மான உயிர்களைப் பறித்திருக்கும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை செலுத்த வேண்டிய தமிழக ஆட்சியாளர்கள் கிருமிநாசினி வரை ஊழல் செய்வதில் முனைப்பாக இருப்பதைக் கைவிட்டு, மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிட வேண்டும்.

மத்திய தொகுப்பிற்கு வழங்கப் பட்டுள்ள முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இதர பிற் படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு மறுக்கப் பட்டிருக்கும் நிலையினை மாற்றி, அவர்களுக்கான ஒதுக்கீடு வழங் கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற் படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டு, வரும்காலத்தில் மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் மருத்துவக் கல்வி இடங் களை அளித்திடும் முறையை ஒழித் திட வேண்டும்.

நகர்ப்புற ஏழை - எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத் துவக் கல்விக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை இந்த கரோனா காலத் தில் நடத்துவதை ரத்து செய்யும் வகை யில் அவசரச் சட்டம் கொண்டு வந்து, பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களை மட்டு மின்றி, இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாத்தான்குளம் வணிகர் களான  தந்தை - மகன்; ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலைய சித்ரவதையால் படுகொலை யானதற்கு விரைந்து நீதி கிடைத்திடும் வகையில் விசாரணை நடைபெற்று, குற்றம் செய்த எவரும் தப்பிக்காதபடி தாமதமில்லாமல் தண்டனை வழங் கப்பட வேண்டும்.

மாநில அரசின் உரிமைகளைப் பறித்து - விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும்  மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்ட மசோதா 2020 உடனடியாகத் திரும் பப் பெறப்பட வேண்டும்.

மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி யாக விளங்கும் தமிழகத்தின் கூட் டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல் லும் மத்திய பா.ஜ.க. அரசின் அவசரச் சட்டத்திற்கு மவுன சாட்சியாக அ.தி.மு.க அரசு இருக்கின்ற நிலையிலிருந்து மீண்டு, கூட்டுறவு நகைக் கடன்களை வழங்கக்கூடாது என்கிற வாய்மொழி உத்தரவின் பின்னணியை விளக்கி, விவசாயத் தொழிலாளர் களை மீட்டிடும் வகையில் ஏற்கெ னவே உள்ள நகைக்கடன் மற்றும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திட வேண்டும்.

கரோனா பாதிப்பு உச்சக்கட்ட நிலையில் உள்ளதால் பல்கலைக் கழகங்களின் இறுதி செமஸ்டர் உள் ளிட்ட அனைத்து செமஸ்டர் தேர்வு களையும் ரத்து செய்திட வேண்டும்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப் புகளைப் பலவீனப்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து, தி.மு.க.,வினர் வெற்றிபெற்றுப் பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படைத் தேவை களை  நிறைவேற்றுவதற்கான நிதி யினைக் கூட வழங்காமல் பறக்கணிக் கும் போக்கிலிருந்து அ.தி.மு.க. அரசு திருந்திடத் தவறினால் நீதிமன்றத்தை நாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நிலத்தை ஆக்கிரமிக்கும் கும்பலை எதிர்த்து மக்கள் நலனுக்காகச் செயல் பட்ட திருப்போரூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்ததற்குக் கண் டனம் தெரிவித்து, உண்மைக் குற்ற வாளிகளை நீதி மன்றம் முன் நிறுத்தித் தண்டிக்கும் வகையில் இந்த வழக்கை சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு ஒப்படைக்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டது.

மின் கட்டண கொள்ளை

 10ஆவது தீர்மானமாக, கரோனா ஊரடங்கு காலத்தில் மக்களை வஞ்சித்து - கொள்ளையடிக்கும் மின் கட் டண முறைக்கு எதிரான தீர்மானம் மாவட்டக் கழகச் செய லாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப் பினர்களின் விரிவான ஆலோச னையுடன் நிறைவேற்றப்பட்டது.

ஊரடங்கு காலத்தில் அத்தியா வசியத் தேவைகளுக்காக வெளியே செல்லும் மக்களுக்கும் அபராதம் விதிப்பு - வாகனங்கள் பறிப்பு எனத் தண்டனை வழங்கி வரும் அ.தி.மு.க .அரசு, வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்களிடம், மின்சாரத்தை கூடுத லாகப் பயன்படுத்தியதாகப் பல மடங்கு கட்டணம் வசூலிப்பது தமிழ் நாடு முழுவதும் மின்சார ஷாக்கை விட பேரதிர்ச்சியை ஏற்படுத் தியிருப்பதை கூட்டத்தில் பங்கேற்ற வர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

மின்சாரக் கணக்கீட்டு முறையில் ஏற்பட்ட குளறுபடிகள் - அவற்றைப் பகுப்பதில் ஏற்பட்ட கோளாறுகள் எல்லாமும் சேர்ந்து மக்கள் மீது அதிக சுமையை ஏற்றியிருப்பதைத் தனது சொந்த அனுபவத்தின் வாயிலாகப் பல துறைசார்ந்த பிரபல ங்களும் சமூக வலைதளங்களில் பதி விட்டு வருகிறார்கள். பிரபலங்கள் முதல் சாதாரண சாமானியர்கள் வரை பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்த மின்கட்டணக் கொள்ளையைப் பிடிவாதமாக நியாயப்படுத்தும் அ.தி. மு.க. அரசு, பழி முழுவதையும் மின்நுகர் வோரான மக்கள் மீதே சுமத்துகிறது.

ஊரடங்கினால் தொழில்கள் முடக்கப்பட்டு, வணிகம் பாதிக்கப் பட்டு, அன்றாட வேலைவாய்ப்புகள்  அற்றுப் போயுள்ள நிலையில், கரோனா காலத்தைச் சிறப்பு நேர் வாகக் கருதி மின்கட்டணச் சலுகை அளிக்கவேண்டிய அ.தி.மு.க அரசோ, நாங்கள் முறையாகக் கணக்கீடு செய்துள்ளோம் என நீதிமன்றத்தில் தெரிவித்து, அதனையே செய்திக் குறிப்பாகவும் வெளியிட்டு, மக்களி டம் கட்டணக் கொள்ளை அடிப்ப திலேயே கவனம் செலுத்துகிறது. நுகர்வோருக்கு நியாயமான மின் கட்டணத்தை வழங்குவது மிக முக்கியம் என வலியுறுத்தும் மின் சாரச் சட்டத்தின் கீழ்தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியம் இயங்கி வருகிறது என்பதை இந்த அரசு மறந்துவிட்டது.

மத்தியப் பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநி லங்கள் கரோனா கால மின்கட்டணச் சலுகையை அளித்துள்ள நிலையில், அ.தி.மு.க. அரசு மட்டும் மின் கணக் கீட்டின் அடிப்படையில் கட்ட ணத்தைச் செலுத்தியே ஆகவேண்டும் என்று சுமையை ஏற்றுவது கருணை யற்ற போக்காகும்.

ஜூலை 21 - கறுப்புக்கொடி அறப்போராட்டம்!

இதனைக் கண்டிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ரீடிங் எடுத்ததில் உள்ள குழப்பங்களை நீக்கி, மின் நுகர்வோருக்குச் சாதக மான முறையில் கணக்கிட்டு _- ஊரடங்கு கால மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும். குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை எளிய மாதத் தவணையாகச் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கக் கோரி யும் 21-.7.-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தமி ழகத்தில் உள்ள அனைத்து விடுகளின் முன்பும் கறுப்புக் கொடி ஏற்று வதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

திமுக அறிவித்துள்ள போராட் டத்தின் அடிப்படை நியாயத்தை, மின்கட்டணக் கொள்ளையால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் உணர்ந் துள்ளனர். அதனால்தான் தன்னிச் சையாக அவர்களிடமிருந்து ஆதரவுக் குரல்கள் பெருகி வருகின்றன. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆட்சியாளர்கள், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தி.மு.க. போராட் டம் அறிவித்திருப்பதுபோலக் கயிறு திரிக்கிறார்கள். மின் கணக்கீடு  குறித்த  தமிழக அரசின் நடைமுறையை ஏற்றுக்கொண்டுள்ள உயர்நீதிமன்றம், இதில் நுகர்வோருக்கு ஏற்படும் சிக்கல்களை அரசும் மின்வாரியமும் தீர்த்திட வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளது.

கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குழப் பங்களையும், பிழைகளையும் நீக்கி, கரோனா காலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் வருமானம் குறைந் துள்ள சூழலில் மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வலியுறுத்தியும் வெகுமக்கள் பக்கம் நின்று திமுக போராடுகிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்பு  பற்றி திமுகவுக்கு வகுப்பெடுக்க நினைக்கும் இதே அ.தி.மு.க. அரசு தான், கரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண் டும் என உத்தரவிட்டபோது, அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம்வரை  சென் றது. டாஸ்மாக் மதுபானக் கடை களைத் திறப்பது தங்களின் கொள்கை முடிவு என வாதாடி, மதுக்கடை களைத் திறந்து கரோனா பரவலுக்குக் காரணமாக இருந்தது. டாஸ்மாக் விற்பனைக்காகக் கொள்கை முடிவு எடுக்கும் அ.தி.மு.க அரசு, மக்களை வதைக்கும் மின்கட்டணக் கொள் ளையைத் தவிர்க்கக் கொள்கை முடிவு ஏதேனும் வைத்திருக்கிறதா? அல்லது கொள்ளைக்கணக்கு  ஒன்றை மட்டுமே முடிவாகக் கொண்டிருக்கிறதா? என்பதே மக்கள் எழுப்பும் வினா.

மக்களின்  அந்தக் கேள்விக்குப் பக்கபலமாக, அவர்களின் கோரிக்கை களுக்குப் பாலமாக, பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. ஜூலை 21ஆம் நாள் நடத்துகின்ற கறுப்புக் கொடி அறப்போரில், தி.மு.க. நிர் வாகிகள் அனைவரும் பங்கேற்ப துடன், பொதுமக்களிடமும் அதற் கான ஆதரவைத் திரட்டும் வகையில் துண்டறிக்கைகளை வழங்கிட வேண் டும். ஒவ்வொரு வீட்டிலும் கறுப்புக் கொடி பறந்திடும் வகையில் மக்களின் பங்கேற்பு அமைந்திட வேண்டும்.

கரோனா கால ஊரடங்கில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தனி மனித இடைவெளியுடனும் முகக் கவசம் - சானிடைசர் போன்ற பாது காப்பு வசதிகளுடனும் பொது மக்களின் பங்கேற்புடன் மேற் கொள் ளப்படும் அறப்போரில், அ.தி.மு.க. ஆட்சியின் அவலத்தை எடுத்துரைக் கும் வகையில்,  இல்லங்கள் தோறும் கறுப்புக்கொடிகள் பறக்கட்டும்! அனைத்துத் திசைகளிலும் கண்டன முழக்கங்கள் அதிரட்டும்!

இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.