ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஜிஎஸ்டி இழப்பீடு வழங்காவிட்டால் மாநிலங்களின் நிலை மோசமாகும்- அடிப்படை வளர்ச்சித் திட்டங்கள் முடங்கும்!
September 12, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி, செப்.12 ஜிஎஸ்டி இழப் பீட்டுத் தொகையை, மத்திய அரசு முழுமையாக வழங்காவிட்டால் மாநில அரசுகளின் நிதிப் பற்றாக் குறை மிகமோசமான பாதிப்பைச் சந்திக்கும் என்று ‘இக்ரா’ (Investment information and Credit Rating Agency - ICRA) நிறுவனம் தனது ஆய்வில் எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை என்ற பெயரில், கடந்த 2017 ஜூலை 1 முதல் புதிய ‘சரக்கு மற்றும் சேவை வரி'யை (ஜிஎஸ்டி) நரேந்திர மோடி அரசு அமல்படுத்தியது. அதா வது அதுவரை மாநிலங்களுக்கு நேரடியாக வந்துகொண்ட வரி வருவாயில்பெரும்பகுதியைத்தன் வசம்எடுத்துக்கொண்டது. இதற்கு எதிர்ப்புக்கள் எழுந்த நிலையில், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பு களை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசே ஈடுகட்டும் என்று அப் போதுசமாளிக்கப்பட்டது.மாநிலங்களின் ஆண்டு வருவாய் வளர்ச்சி 14 சதவிகிதத்தை விடக் குறைவாக இருந்தால் மத்திய அரசு அதற்கான இழப்பீட்டை வழங்கும். ஆனால், உறுதியளித்தபடி இந்த இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்குவதில்லை. ஒவ்வொரு முறையும் பெரும் போராட்டத்திற்குப் பிறகே மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற்று வருகின்றன.

இதனிடையேகரோனாபிரச் சினைவந்தது, மோடி அரசுக்கு மிகவும் வசதியாகிப் போனது. இதனைக் காரணமாக காட்டி, ஒரேயடியாக ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க முடியாது என்று அண்மையில் கூறிவிட்டது. இது மாநிலங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்நிலையில், மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாக வழங்காமல் இருந்தால் மாநிலங்களின்செலவுகளில்ரூ.3 லட்சம் கோடி வரை குறையும் என்று ‘இக்ரா’ நிறுவனம் தனது ஆய்வில் எச்சரித்துள்ளது.

இழப்பீட்டுத் தொகையைப் பெறு வதற்குப் பதிலாக மாநில அரசுகள் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு வழங்கியுள்ள ‘சலுகை’யால் மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை 4.25 சதவிகிதம் முதல் 5.52 சதவிகிதம் வரை உயரும்; இதனால் நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகள் தங்களின் மிக முக்கியமான மூலதனச் செலவுகளை மேற்கொள்ள முடியாது; அடிப்படை வளர்ச்சித் திட்டங்கள் அடியோடு முடங்கும். இது பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்று இக்ரா கூறியுள்ளது.