ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஜாதி பாகுபாடு காரணமாக மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சியில் இறந்த பெண்ணின் உடல் அவளது பெற்றோர் இல்லாமல் நிருவாகத்தினரால் எரிக்கப்பட்ட கொடுமை - 2
October 7, 2020 • Viduthalai • மற்றவை

அனுஜ் குமார்

நேற்றைய (6.10.2020) தொடர்ச்சி

ஒரே நிகழ்ச்சி பற்றி பல்வேறு

வழிகளில் கூறப்பட்ட செய்திகள்

இந்த நிகழ்ச்சி பற்றி இரண்டு விதமான செய்தி களை மாவட்ட நிர்வாகமும், பாதிக்கப்பட்ட பெண் ணின் குடும்பமும் காணொலி காட்சிகள் மூலம் வெளியிட்டன. அந்த இளம் பெண் சந்தபா காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த ஒரு கல்லின் மேல் படுக்க வைக்கப்பட்டு இருந்தபோது இந்த காணொலிகளில் சில பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தனது மகள் ஒரு கும்பலால் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக காயத்ரி கூறியபோது, தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதற்கு சந்தீப் முயன்றான் என்றும், அத னைத் தவிர்க்க தான் முயன்றதாகவும் பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறிய காணொலி காட்சியை சுற்றுக்கு விட்ட மாவட்ட நிர்வாகம், காயத்ரியின் குற்றச் சாட்டை மதிப்பிழக்கக் செய்ய முயன்றது.

சந்தீப் மட்டுமே இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக காயத்ரி கூறும் ஒரு காணொலி காட்சியையும் மாவட்ட நிர்வாகம் பகிர்ந்து கொண்டது. என்றாலும், குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட ஒரு காணொலி காட்சியில்,  குறைந்தது இருவர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும், மற்ற இரு வரும் தனது தாயைப் பார்த்தவுடன் ஓடிச் சென்று விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். அவள் அலிகார் மருத்துவ மனையில் இருந்தபோது இந்த காணொலி காட்சியை அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவர் பதிவு செய்திருந்தார்.

கும்பலாக சேர்ந்து செய்த

பாலியல் வன்கொடுமை

பாதிக்கப்பட்ட பெண் தனது மரண வாக்கு மூலத்தில் நான்கு பெயர்களைக் குற்றவாளிகளாக  குறிப்பிட்டுள்ளாள் என்றும், இந்தக் குற்றச் செய லுக்குக் காரணமே இரு குடும்பத்தினரிடையே நிலவி வந்த பகைதான் என்றும் அவள் கூறியதாக மருத்துவ மனை வட்டாரம் ஒன்று தெரிவிக்கிறது. ரவி, ராம்சிங், லவ் குஷ் ஆகியோரின் பெயர்களை அந்தப் பெண் குறிப்பிட்டாள் என்றும், அதனால் அவர்களது பெயர் கள், சம்பந்தப்பட்ட இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் பிரிவுகளில்  முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டதாகவும்  செப்டம்பர் 22 அன்று வாக்குமூலத்தைப் பதிவு செய்த  சதாபாத் வட்ட அதிகாரி பிரகாம் சிங் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்குத் தண்டனை யில் இருந்து காப்பாற்றுவதற்காகவே காவல் துறை முயற்சிப்பதாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் அந்த இளம் பெண்ணின் மாமா ஒருவர், "தனக்கு மயக்கம் தெளிந்தவுடன், எனது மைத்துனி,  தான் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதை தனது தாயிடம் கூறியிருக் கிறாள். சமூக நிர்பந்தங்கள் காரணமாகவே அவள் அதற்கு முன் அது பற்றி பேசாமல் மவுனமாக இருந் தாள். ஆனால், விசாரணை அதிகாரியிடம்,  கும்பலாக பாலியல் வன்கொடுமைக்கு தான் ஆளாக்கப்பட்ட தைப் பற்றி அவள் கூறியபோது,  அது அவளது முடிவென நாங்கள் ஏற்றுக் கொண்டோம்" என்று கூறினார்.

நம்பிக்கை இன்மை

குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரந்த் வீர் மறுக் கிறார், "அவ்வாறு மறைப்பதாக இருந்தால்,  (காவல் துறை ஹவுஸ் அதிகாரி) கொலை முயற்சி வழக்கை யும், பட்டியலினத்தவர், பழங்குடி இனத்தவருக்கு எதிரான வன்முறைச் சட்டத்தின் கீழான வழக்கையும் ஏன் நாங்கள் முதல் தகவல் அறிக்கையில் நிகழ்ச்சி நடைபெற்ற ஒரு மணி நேரத்துக்குள் பதிவு செய் திருக்க வேண்டும்? முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு, காவல் துறை ஹவுஸ் அதிகாரி தனது பணியிடத்தை ஒரு சில நாட்களுக்கு வேறொரு இடத்திற்கு ஏன் மாற்றிக் கொண்டு இருந்திருக்க வேண்டும்? காவல்துறை லைனுக்கு அவரை நான் மாற்றினேன். யாருக்கு அவர் சேவை செய்ய வேண் டுமோ அந்த மக்களின் நம்பிக்கையை அவரால் பெற முடியாது என்று நான் உணர்ந்ததே அதன் காரணம்" என்று கூறினார். அக்டோபர் 2 ஆம் தேதி வீரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற ஒரு சில நாட்களில் செப்டம்பர் 19 அன்று சந்தீப் கைது செய்யப்பட்டதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வீர் கூறினார். பாதிக்கப் பட்ட பெண் மற்ற மூன்று குற்றவாளிகளின் பெயர் களைக் கூறியதும் காவல் துறையினர் அவர்களையும் கைது செய்ததுடன், கும்பலாக பாலியல் வன் கொடுமை இழைக்கப்பட்ட குற்றச் சாட்டை இந்திய குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவின் கீழ் பதிவு செய்தனர் என்றும் அவர் கூறுகிறார்.

நிர்வாகம் நிர்ப்பந்திப்பது - ஏன்?

அந்தப் பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட நேரத் தில் எந்தத் தவறும் இல்லை என்று வீர் கூறுகிறார். "இரவு நேரங்களில் இறுதிச் சடங்குகள் நடத்துவது இந்தப் பகுதியில் சகஜமானதுதான். உடலை எரிப் பதை நீங்கள் தாமதப்படுத்தினால் ஆத்மா அந்த உடலைச் சுற்றி நடமாடும் என்று மற்றொரு அதிகாரி கூறினார். இதில் உள்ள முக்கியமான குறிப்பு என்ன வென்றால், இந்து வழியில் யாரும் இல்லை என்பது தான். பின்னால் நினைத்துப் பார்க்கும்போது யார் வேண்டுமானாலும் விவேகம் உடையவராகத் தோன் றலாம். அப்படியும்  மூன்று உறுப்பினர் டாஸ்க் போர்ஸ் ஒன்று எங்களை வழி நடத்திச் செல்ல வந்துள்ளது" என்று கூறினார்.

சுயநலமிகளால் அந்தப் பெண்ணின் தந்தை தூண்டிவிடப்படுவதாக வீரும், மாவட்ட மாஜிஸ்டிரேட் பிரவீன் லஸ்கரும் கூறுகின்றனர். தனது தந்தை ஒரு சாதாரணமான மனிதர் என்று கூறும் ராஜேஷ், நிர்வாகத்தினரால் அவர் ஏன் நிர்ப்பந்திக்கப் பட வேண்டும் என்று கேட்கிறார். அக்டோபர் 1 அன்று வைரலான ஒரு காணொலி காட்சியில், இரண் டொரு நாட்களில் ஊடகத்தினர் சென்று விடுவர் என்றும், ஆனால் நிருவாகத்தினர்தான் அக் குடும்பத் திற்கு ஆதரவாக நிற்பார்கள் என்றும் லஸ்கர் கூறு வதைக் கேட்க முடிந்தது. அதிகாரிகள் மாற்றப்படுவது போல அந்தக் குடும்பத்தினர் தங்களது அறிக்கை களை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது என்று அவர் கூறுவதையும் கேட்க முடிந்தது. காணொலியில் ஒளிபரப்பப்பட்டதை லஸ்கர் மறுத்த போதிலும், அந்தக் குடும்பத்துக்கும், நிருவாகத்துக்கும் இடையே ஒரு நம்பிக்கை இல்லாமல் இருப்பதை அந்த காணொலி காட்சிகள் காட்டுகின்றன.

செய்திருக்க முடியும்

உடற்கூராய்வு மற்றும் தடவியல் ஆய்வு அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பேசிய,  சட்டம்-ஒழுங்கு உதவிப் பொது காவல் துறை இயக்குநர் பிரசாந்த் குமார்,  பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என்று கூறுகிறார். அந்தப் பெண்ணின் உடலில் விந் தணுக்கள் ஏதும் இல்லை என்ற தடவியல் ஆய்வு அறிக்கையை அவர் சுட்டிக் காட்டுகிறார். இறந்த பெண்ணின் உடல் மீது மருத்துவ பரிசோதனையும், தடவியல் ஆய்வும் நிகழ்ச்சி நடந்து 8 நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 22 அன்றுதான் மேற்கொள்ளப் பட்டன என்று  ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல் லூரி கண்காணிப்பாளர்ஹரிஷ் கான் கூறுகிறார்.

அந்தப் பெண்ணின் உடல் மருத்துவப் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டதில் ஏற்பட்ட தாமதம் பற்றி கேட்கப்பட்டபோது, பாலியல் வன்கொடுமை நிகழ்ச்சி நடந்தது பற்றி பாதிக்கப்பட்ட பெண் கூறி யவுடன் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது என்று வீர் கூறுகிறார். அந்தப் பெண் காவல் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்ட நிலையைக் கருத்தில் கொண்டு 72 மணி நேரத்திற்குள் மருத்துவ சோதனையை செய்யப்படுவதற்கு காவல் துறை முயற்சி மேற்கொண்டிருக்க முடியுமா என்று கேட்கப் பட்டபோது, அதை செய்திருக்க முடியும் என்று வீர் ஒப்புக் கொண்டார். "நாங்கள் அனைவரும் ஒன்றி ணைந்து செயலாற்றுவதற்கான  நடைமுறையில் சில இடைவெளிகள் இருக்கின்றன. ஆனால் எங்களது நோக்கம் எல்லாம், அந்த இளம் பெண்ணுக்கு எப் போதும் மிகச் சிறந்ததை செய்ய வேண்டும் என்பதே ஆகும். மிகச் சிறந்த மருத்துவ சிகிக்கையை அந்தப் பெண் இலவசமாகப் பெறுவதை நான் உறுதிப்படுத்திக் கொண்டேன்" என்று அவர் கூறினார்.

- தொடரும்

நன்றி: ‘தி இந்து', 03-10-2020

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்