ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஜாதி பாகுபாடு காரணமாக மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சியில் இறந்த பெண்ணின் உடல் அவளது பெற்றோர் இல்லாமல் நிருவாகத்தினரால் எரிக்கப்பட்ட கொடுமை - 3
October 8, 2020 • Viduthalai • மற்றவை

அனுஜ் குமார்

நேற்றைய (7.10.2020) தொடர்ச்சி

உச்சம் தொட்ட காட்டுமிராண்டித்தனம்

குரல்வளை முதுகுத் தண்டில் ஓர் எலும்பு முறிவாலும், நாக்கில் ஒரு பிளவினாலும்  அந்தப் பெண் துன்புற்று வந்ததாக ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாதிக் சித்திக் கூறினார். பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டபோது அவள் கடித்துக் கொண்டதால் அந்த நாக்கு பிளவு ஏற்பட் டிருக்கக் கூடும் என்றும் அவர் கூறினார். "பாலியல் வன்கொடுமை பற்றி அவளோ அவளது தாயோ எதுவும் சொல்லாததால்,  அதைப் பற்றிய சோத னையை நாங்கள் செய்யவில்லை. அவளது முழங் கால்கள் செயலிழந்து போயிருந்தன. முதலில் பொதுப் பிரிவில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண் பின்னர் உயர் மருத்துவ சிகிச்சை பிரிவுக்கும், அதன் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் மாற்றப்பட்டு, அங்கு மானிடர் மூலமாக அவரது உடல் நிலை கண் காணிக்கப்பட்டது" என்று அவர் கூறினார். பதட்டம் நீங்கி நோயாளி சம நிலையை அடைவதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். "முதலாவதாக, அந்தப் பெண் ஓர் உயர்ந்த சிகிச்சை மய்யத்திற்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும். கடைசி நேரத்தில் அவளை அத்தகைய உயர் சிகிச்சை மய்யத்துக்கு அனுப்புவதில் பயனேது மில்லை.  தேவையான அனைத்து வசதிகளும் எங்க ளிடம் உள்ளன" என்று அவர் கூறினார்.

அவர்கள் அனைவரும் கீழ்மக்கள்

ராம் லால் வீட்டிற்கு எதிரே சந்தீபின் வீடு இருக்கிறது.  ரவி, ராம் சிங் என்ற தனது மாமாக்களுடனும், நண்பன் லவ குசனுடனும் சேர்ந்து கும்பலாக பாலியல் வன் கொடுமையிலும், கொலை முயற்சியிலும் சந்தீப் ஈடு பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளான். சந்தீப்பும் லவகுசனும் 18-19 பதின்ம வயதினர். சந்தீபின் மாமாக்கள் 30 வயதை சார்ந்த திருமணமானவர்கள். பானு என்ற சந்தீபின் பதின்ம வயது சகோதரியைத் தவிர வேறு ஆண் உறுப்பினர்கள் அந்த வீட்டில் இல்லை. சகோ தரர்களுக்கு மூன்று பிகாஸ் அளவுக்கு மேல் விவசாய நிலம் ஏதுமில்லை. தங்கள் வீட்டு ஆண்கள் தவறு செய்தார்கள் என்ற கதையை அந்த வீட்டுப் பெண்கள் வாங்குவதற்கோ, நம்புவதற்கோ மறுக்கிறார்கள். அவர்கள் கெட்ட நடத்தை உடையவர்கள் அல்ல என்று சந்தீபின் அத்தை மனோரமா கூறுகிறார்.

ராம்லாலின் தந்தையைத் தாக்கிய குற்றத்துக்காக சந்தீபின் தந்தை நரேந்திர சிங் குட்டும், ரவியும் 2001 ஆம் ஆண்டில் சிறிது காலம் நீதிமன்றக் காவலில் இருந்துள்ளனர். "அருகில் உள்ள கிராமத்தில், ரவி சைவ பிரியாணி செய்து விற்றுக் கொண்டிருக்கிறான். செம்பம்பர் 14 அன்று அந்த சம்பவம் நடக்கும்போது, பிரியாணி தயாரிக்கும் வேலையில் அவன் முழுமையாக ஈடுபட்டிருந்தான். அன்று போட்ட அரிசி எல்லாம் வீணாகப் போய்விட்டது"  என்று அவனது தாய் ரஜ்வந்தி கூறினார். நிகழ்ச்சியின் போது கிராமத்துக்கு வெளியே இருந்த ஒரு பால்பண்ணையில் தனது மகன் ராம் சிங் இருந்ததாக அவனது தாய் சாந்திதேவி கூறுகிறார். ராம்லாலின் குடும்பம் பேராசை கொண்டதாக ஆகிவிட்டது என்றும், தனது மகளின் சாவு மூலம் பணம் சம்பாதிக்க அவர்கள் விரும்புவதாகவும் கூறப் படுகிறது. "2001ஆம் ஆண்டில் நடைபெற்ற தாக்குத லுக்கு அவர்கள் இப்போது பழி தீர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள்" என்று ராஜ்வந்தி கூறுகிறார்.

நிகழ்ச்சி நடைபெற்றபோது சந்தீப் வீட்டில் இருந் ததாக பானு கூறுகிறாள். அந்தப் பெண் மூச்சு திணரும் போது, தண்ணீர் எடுத்துச் சென்று கொடுத்ததே லவகுசன் தான்என்று பானு கூறுகிறாள். அந்தப் பெண் காணப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள நிலத்தில் அவன் இருந்தான். இப்போது அவனும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளான் என்றும் குறை கூறப்படுகிறது.

தங்களது அண்டை வீட்டினர் கீழ் மக்கள் என்றும், அவர்களை ஒரு குச்சியினாலும் நாங்கள் தொடமாட் டோம் என்றும்  அந்தக் குடும்பத்தினர் கூறுகின்றனர். வால்மீகிக்கு ரவி பிரியாணி விற்பானா என்று கேட்ட போது சப்பு கொட்டிய பானு "பிளாஸ்டிக் தட்டில் நாங்கள் பிரியாணி விற்கிறோம். வியாபாரத்தை நாங்கள் ஜாதியுடன் சேர்த்து பார்ப்பதில்லை" என்று பானு கூறினாள். கிராமப்புறங்களிலும் தொலைக்காட்சி, குளிர் பதனப் பெட்டி போன்ற நவீன நாகரிகம் பரவியிருக்கும் இந்த நாட்களிலும் கூட ஜாதிப் பாகுபாட்டு நம்பிக்கை எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை இந்த உரையாடல் வெளிப்படுத்துகிறது.

போராட்டம் வெடிக்கும் ஒரு சூழ்நிலையைத் தவிர்த்தல்

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டைச் சேர்ந்த,  முகத்தை முக்காடிட்டு மறைத்திருந்த  பெண்கள் அழுது கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அவர்கள் இந்து மதக் கடவுள்களாகவே பார்க்கப்படுகின்றனர். டில்லியில் இருந்து அந்தப் பெண்ணின் உடல் கிராமத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது,  மற்ற கிராமங்களில் இருந்து ஏராளமான மக்களும், பீம் சேனா உறுப்பினர்களும் ஹத்ராசில் குவிந்தனர். இந்த குடும்ப உறுப்பினர்கள் வழி தவறிப் போய்விட்டனர். அவர்களை நாம்தான் சரியான பாதைக்குத் திரும்பவும் கொண்டு வரவேண் டும் என்று பல இளைஞர்கள் கூறுவதைக் கேட்க முடிந்தது. இது எதனைக் குறிக்கிறது என்றால்,  இந்து மதத்தில் நீடித்து இருப்பதன் மூலம், அம்பேத்கரின் பாதையில் இருந்து அவர்கள் விலகிச் சென்றுவிட் டார்கள் என்பதுதான். இந்த கிராமத்தில் நுழைந்திருக்கும் இந்த மனிதர்கள் ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி விடுவார்கள் என்று உள்ளூர் நிர்வாகம் அஞ்சுகின்றது. இதற்கிடையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என்ற கூடுதல் பொது காவல் துறை இயக்குநர் உறுதியாகக் கூறியதன் அடிப்படையில்,  அகில இந்திய சத்திரிய மகாசபையினர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது  சாட்டப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு நீக்கப்பட வேண்டும் என்று கிராமத்துக்கு வெளியே ஒரு போராட்டத்தை நடத்தினர்.

சமூகத்தின் மேலான ஒரு களங்கமே!

ஹத்ராஸ் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாழ்த்தப் பட்ட பிரிவு மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதியாகும். பா.ஜ.கட்சியின் ரஜ்வீர் டைலர் இந்த சட்டமன்ற உறுப்பினராக இப்போது உள்ளார். இந்த மாவட்டத்தில் உள்ள அய்ந்து சட்டமன்றத் தொகுதி களில் 4 தொகுதிகளை பா.ஜ.க.பெற்றிருக்கிறது. டைலர் மீதான கிராம மக்களின் கோபம் வெளிப்படையாகவே தெரிகிறது. டைலரும் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவ ராக இருந்த போதிலும், கட்சியின் உயர் ஜாதித் தலை வர்களின் அடிமையாகவே மக்கள்  அவரைப் பார்க்கின் றனர். அவரது தந்தை கிஷன் லால் டைலர் போலவே, கல்யாண் சிங் மாநில அரசில் ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் இருந்து இந்த ஒதுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் இடத்தை பா.ஜ.கட்சிக்காகவே போற்றி பாது காத்து வளர்த்து வருகிறார். ஓர் உயர் ஜாதி குடும்பத் தினரைப் பார்ப்பதற்கு போகும்போது தண்ணீர் அருந்த தனது சொந்த கிளாசை தன்னுடன் எடுத்துச் செல்லும் டைலரின் கதைகளை இன்னமும் மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

செப்டம்பர் 30 அன்று அவர் வால்மீகி சமூகத்தின் மேலான ஒரு களங்கம் என்ற கூச்சல் எழுந்தது.   "டைலர் உட்காருவதற்கு ஒரு நாற்காலியை ஒரு தாகூர் தந்தால், அவர் நாற்காலியில் உட்காராமல் தரையில்தான் உட்காருவார். இன்று ஒரு வால்மீகியின் வீட்டுத் தரை யில் அவரை உட்கார வைத்தோம்" என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனி கூறினாள்.  இந்த நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு இந்தக் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதற்கு அவருக்கு ஒரு வாரத்துக்கு மேலானது என்றும் அவள் கூறினாள். பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக டில்லிக்கு நான்தான் மாற்றினேன் என்று டைலர் பெருமைப் பட்டுக் கொண்ட போதிலும், அவர் செய்த உதவி மிகவும் காலம் கடந்தது என்று பாதிக்கப் பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

நிருவாகம் தன்னைக் கைவிட்டுவிட்டது என்று தன் பங்குக்கு டைலரும் கூறி வைத்துள்ளார். "அந்தப் பெண் ணின் உடல் கிராமத்துக்குக் கொண்டு வந்த அன்று இரவு சந்தபா காவல் நிலையத்தில் நான் தடுத்து நிறுத் தப்பட்டேன். மாவட்ட மாஜிஸ்டிரேட்டும், முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் இல்லாமலேயே அந்தப் பெண்ணின் உடலை எரித்து விட்டனர். அங்கு செல்வ தற்கு என்னை அழைத்திருந்தால், மய்யமான தீர்வு ஒன்றை நான் கண்டு பிடித்து இருந்திருப்பேன்" என்று அவர் கூறினார். அதிகாரிகளின் எதேச்சதிகாரத்தைப் பற்றி தான் முதலமைச்சர் யோகி ஆதித்தியானந்திடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடரும் ஜாதியப் பாகுபாடு

ஷியோராஜ்ஜீவன் என்னும் அப்பகுதி மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது எதிரியான டைலரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறார். "நிர்வாகத்துக்கு முதிர்ச்சி இல்லை. அந்தக் குடும்பத்துடன் தொடர்பு கொள்வதற்கு எங்களைப் போன்ற மக்களை நிருவாகம் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். இன்றைய தாழ்த்தப்பட்ட இளைஞன் தனது உரிமைகள் பற்றி உணர்வு பூர்வமான கோரிக்கையை முன்வைக்கக் கூடியவன் என்பதை மறந்துவிட்டு,  ஒரு மாபெரும் போராட்டம் வெடிப்ப தற்குக் காரணமாக இருக்க இயன்ற ஒரு சூழ்நிலையைக் கையாள்வதற்கு அவர்கள் முயன்றுள்ளனர்" என்றார்.

அன்றாட வாழ்வில் தங்கள் மீது பாகுபாடு காட்டப் படும் நிகழ்ச்சிகளில் தாங்கள் பெற்ற அனுபவங்களைப் பற்றி அந்தப் பெண்ணின் வீட்டின் பின்புறத்தில் அவளது உறவினர்கள் விவாதித்துக் கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது. நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து விஷயங்கள் எந்த வித மாற்றமும் அடையாமல் அப் படியேதான் இருக்கின்றன என்று அவர்கள் கூறுகின்றனர்.

உத்தரப் பிரதேச சாலைப் பணியில் சில காலம் வேலை செய்த சுரேந்திர சிங் என்பவர் தான் பணியில் சேர்ந்தபோது தனது அழகான தோல் நிறத்தைக் கொண்டு நான் கேலிக்கும் கிண்டலுக்கும்  ஆளாக்கப் பட்டேன். வேலை வாங்குவதற்காக  தாழ்த்தப்பட்ட பிரிவினரைச் சேர்ந்தவன் என்ற ஒரு போலி சான்றிதழை நான் பெற்றுவிட்டதாக எனது உயர் அதிகாரி அடிக்கடி கூறுவார். ஒரு வால்மீகி அழகாக இருக்க முடியும் என்பதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடிய வில்லை. அது அலுவலகத்தில் பல விஷமங்களுக்கும் வழி கோலியதையடுத்து, இறுதியில் நான் வேலையை விட்டு வரவேண்டியதாயிற்று என்று அவர் கூறினார்.

முற்றும்

நன்றி: ‘தி இந்து', 03-10-2020

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்