ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செ.சிலம்பரசன்- வி.சங்கீதா இணைய வழி வாழ்க்கை இணையேற்பு விழா
October 23, 2020 • Viduthalai • மற்றவை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நடத்தி வைத்தார்

விருத்தாசலம், அக். 23- திராவிடர் கழக விருத்தாசலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.சிலம் பரசன் - வி.சங்கீதா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவை இணையவழியாக உறுதிமொழிக் கூறி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் நடத்தி வைத்தார்.

விருத்தாசலம் கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் சின்ன வடவாடி கிராமத்தைச் சேர்ந்த க.செல்வம்-செல்வி ஆகியோரின் மகன் செ.சிலம்பரசன், கச்சிராய நத்தம் கிராமம் சு..விஜயகுமார் -இராஜகுமாரி ஆகியோரின் மகள் வி.சங்தீதா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா விருத்தாசலம் மணவாளநல்லூர் எருமனூர் சாலை யில் உள்ள மகாலட்சுமி திரு மண மண்டபத்தில் அக்டோபர் 18 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.

வாழ்க்கை இணையேற்பு விழா வில் திராவிடர் கழக மாநில இளை ஞரணி செயலாளர் த.சீ.இளந் திரையன் வரவேற்புரையாற்றினார். மணமக்கள் பெற்றோர் க.செல்வம், செல்வி, சு.விஜயகுமார், ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தலைமை வகித்தார்.

தமிழர் தலைவர் வாழ்த்து

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 7.05 மணிக்கு இணைய வழியாக வாழ்க்கை இணையேற்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பு ரையாற்றினார். காலை 7.45 மணிக்கு வாழ்க்கை இணையேற்பு விழா உறுதிமொழிக்கூறி, இணைய வழியில் முதல் சுயமரியாதைத் திரு மணத்தை நடத்தி வைத்தார். அப் போது, மணமகள் சங்கீதா மணமக னுக்கு பொன்நகை அணிவித்தார். இதனைத்தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகூறி தலைமை உரை நிகழ்த்தி மணமக்களை வாழ்த்தினார். மண விழா முடியும்வரை தமிழர் தலை வர் இணைய வழியாக கலந்து கொண்டார்.

வாழ்த்துச் செய்தி

கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ் ஆகியோர் வாழ்த் துச் செய்தி அனுப்பிவைத்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மணமகன் செ.சிலம்பரசனின் கழக செயல்பாடுகள், அவரின் இயல்பு கள் குறித்து கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார் எடுத் துக்கூறி வாழ்த்துரை வழங்கினார். விருத்தாசலம் கழக மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், மாவட் டச் செயலாளர் ப.வெற்றிச் செல் வன், எழுத்தாளர் இமையம், கவி ஞர் கரிகாலன், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் ம.அகர்ச்சந்த் சோர டியா, கோட்டேரி ஊராட்சித் தலை வர் முத்து.கதிரவன், ரூப நாராயண நல்லூர் ஊராட்சித் தலைவர் சி. கிருட்டினமூர்த்தி, கழக மாவட்ட அமைப்பாளர் வை. இளவரசன், கழக விருத்தாசலம் ஒன்றியச் செய லாளர் கா.குமரே சன், விருத்தாசலம் நகர செயலாளர் த.சேகர் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.

பங்கேற்றோர்

நிகழ்ச்சியில், விருத்தாசலம் மாவட்ட துணைத் தலைவர் ம. கோவிந்தராசு, கடலூர் மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பரணிதரன், கடலூர் மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர் தா.இளம்பரிதி, புதுச் சேரி இளைஞரணித் தலைவர் தி. இராசா, பொதுக்குழு உறுப்பினர் தங்க.இராஜமாணிக்கம், விருத்தா சலம் நகரத் தலைவர் நா.சுப்பிர மணியன், பெண்ணாடம் நகரச் செயலாளர் செ.கா.ராஜேந்திரன், திட்டக்குடி நகரத் தலைவர் வெ. அறிவு, வேப்பூர் வட்டார செய லாளர் அ.பன்னீர்செல்வம், விருத் தாசலம் ஒன்றியத் தலைவர் கி. பாலமுருகன், மங்களூர் ஒன்றியச் செயலாளர் சி.சுப்பிரமணியன், மங்களூர் ஒன்றிய அமைப்பாளர் தொண்டங்குறிச்சி மு.நடராசன், கம்மாபுரம் ஒன்றியத் தலைவர் பாவேந்தர்விரும்பி, ஒன்றியச் செய லாளர் த.தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன், விருத்தாசலம் மாவட்ட இளை ஞரணி செயலாளர் சே.பெரியார் மணி, விருத்தாசலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங் கட.ராசா உள்பட ஏராளமானத் தோழர்களும், பல்வேறு அரசியல் கட்சி பொறுப்பாளர்களும், உற வினர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். மேலும், இணைய வழியாக பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண நிகழ்வின் போது கருங்குயில் கணேஷ் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிட மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என் னாரெசு பெரியார், விழுப்புரம் ராயல்வால் எல்.ஈடி குழுவினர் அசன், விக்டர் மற்றும் மாலிக் ஆகி யோர் இணைய வழி ஒருங்கி ணைப்பில் ஈடுபட்டனர்.

நிறைவாக விருத்தாசலம் கழக மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.இராமராஜ் நன்றி கூறினார்.