ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்...!
August 22, 2020 • Viduthalai • மற்றவை

கூட்டமோ கூட்டம்!

விநாயகர் சதுர்த்திக்காக கடைவீதிகளில் கூட்டம்!-

ஊரடங்கு உத்தரவின் நோக்கம் ஒரே நாளில் காலிதான்!

படியளக்கும் பெருமாள்?

கிராமக் கோவில் அர்ச்சகர்களுக்கு மாதம் தோறும் ரூ.2,300 உதவித் தொகை - ஓர் அறக்கட்டளை அறிவிப்பு.

படியளக்கும் பெருமாள் கடவுள் அல்ல - ஓர் அறக்கட்டளைதான்!

'நீட்' மட்டும் நெய்யில் பொரித்ததா?

எம்.பி.ஏ., படிப்பில் சேர இவ்வாண்டு நுழைவுத் தேர்வு இல்லை -  அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏ.அய்.சி.டி.இ.) அறிவிப்பு.

அது என்ன எம்.பி.ஏ.,க்கு மட்டும் - கரோனா இதற்கு மட்டும்தானா?

'நீட்' மட்டும் நெய்யில் பொரித்ததா?

ஆகமத்தின் எத்தனையாவது விதியின்கீழ்?

பக்தர்களுக்கு யூடியூப் வழியாக பிள்ளையார்பட்டி விநாயகனைத் தரிசிக்க ஏற்பாடு.

எந்த ஆகமத்தில், எத்தனையாவது விதியின்கீழ் இது வருகிறதாம்?

விலக்கா - விதியா?

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க தனி நபருக்கு அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

விதிவிலக்கு விதியாகவே மாறிவிடாதா? ஒவ்வொருவரும் கிளம்பினால், நோக்கம் என்னாவது!

அந்தோ, பரிதாபம்! நீர் நிலைகள்!

குதிக்கவேண்டாம்!

ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர்கள் ஆற்றில் குளிக்கச் சென்றபோது மரணம். அவர்களின் உடல்கள் சென்னை வந்து சேர்ந்தன.

படிக்கப் போங்கள் - குதிக்கப் போகாதீர்கள்!

பணம் இருந்தால்தானா?

கட்டணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் - அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பணம் இருந்தால்தான் படிப்பா?