ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்....!
October 20, 2020 • Viduthalai • மற்றவை

அவாளுக்கே தெரியுது!

சங்கீதத்துக்கு தெலுங்கையும், இனிமைக்கு மலையாளத்தையும், பக்திக்கு மராட்டியத்தையும், வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஹிந்தியையும் மூன்றாவது மொழியாகத் தேர்ந்தெடுப்பேன்: - ‘துக்ளக்' கு.மூர்த்தி.

தப்பித் தவறிகூட இந்தப் பட்டியலில் சமஸ்கிருதம் கிடையாது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அவாளுக்கே தெரிகிறது - செத்த மொழியால் எந்தவிதப் பயனும் கிடையாது என்பது.

‘ஆமையைத் திருப்பிப் போட்டு அடி!'

தங்களது ஆட்சியில் அமல்படுத்திய ‘நீட்' தேர்வு, ஜி.எஸ்.டி., வேளாண் சட்டங்களை இன்று  எந்தத் தைரியத்தில் காங்கிரஸ் எதிர்க்கிறது?

நரந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது எதிர்த்த இவற்றை எந்தத் தைரியத்தில் கொண்டு வருகிறது - கொண்டாடியும் வருகிறது என்று அல்லவா கேள்வி அமையவேண்டும்?

நாட்டின் ஒற்றைத் தலைவலி எது?

ஒற்றைத் தலைவலியை ஒழிக்க விழிப்புணர்வு தேவை: - டாக்டர் அ.பன்னீர் நரம்பியல் மருத்துவர்.

நாட்டில் இப்பொழுது ஒரே ஒற்றைத் தலைவலி- இன்றைக்கு மத்தியில் இருக்கக் கூடிய மதவாத பி.ஜே.பி. ஆட்சிதான்.

எது

பெரிய குற்றம்?

பா.ஜ.க. எம்.எல்.ஏ., தன் மகனுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று பாலியல் வழக்கில் கைதானவரை மீட்டுச் சென்றார். எந்தத் திட்டத்தின்கீழ் இது நடந்தது என்பதை, உ.பி. முதலமைச்சர் கூறவேண்டும். பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டமா? அல்லது குற்றவாளிகள் பாதுகாப்புத் திட்டமா? - பிரியங்கா தேசிய பொதுச்செயலாளர், காங்கிரஸ்

கொலைக் குற்றவாளிகளையே மாலை போட்டு பாஜ.க. மந்திரிமார்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லுகிறார்கள் - அதைவிடவா இது பெரிய குற்றம்?

களை

எடுக்கப்படும்!

களைகட்டிய நவராத்திரி - பொம்மைக் கடைகளில் விற்பனை சூப்பர்.

இந்துத்துவா கட்சி என்று பெயர் எடுத்த சிவசேனா ஆளும் மராட்டியத்தில் மத நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்துள்ளது. ஆனால், அண்ணா பெயரில் கட்சியையும், ஆட்சியையும் வைத்திருக்கும் அ.தி.மு.க. ஆட்சியிலோ நவராத்திரி களை கட்டுகிறதாம்!

இது வேறா?

‘நீட்' தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒருமுறை தேர்வு எழுதுவதற்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்: - கல்வியமைச்சர் செங்கோட்டையன்.

அ.தி.மு.க. அரசு நடத்திய 412 பயிற்சி மய்யங்களில் ஒரு மாணவர்கூட ‘நீட்' தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில், இந்த அறிவிப்பு வேறா?.