ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும், சிந்தனையும்....!
September 23, 2020 • Viduthalai • மற்றவை

வி(அ)ஞ்ஞானமா?

20 கோவில்களில் 'ஆன்லைன்' தரிசன வசதி.

அஞ்ஞானத்தை விஞ்ஞானத்தின்மூலம் பரப்புகிறார்களோ!

முதலில்

கழிப்பறைகள் தேவை!

தனியார் பள்ளிகளில் படித்து வந்த இரண்டரை லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்: - கே.ஏ.செங்கோட்டையன், கல்வி அமைச்சர்.

மகிழ்ச்சியே! இதற்குக் காரணம் கட்டணம் அதிகம் என்பதாலா? தனியார் கல்வி நிறுவனங்களைவிட அரசுக் கல்விக் கூடங்கள் சிறப்பாக இயங்குவதாக நம்பியா?

கல்வியின் தரமும், வசதிகளும் தனியார்த் துறைகளைவிட சிறப்பாக இயங்குகிறது என்பதாலா? கரும் பலகை இல்லாதவை, மரத்தடியில் நடப்பவை, கழிப்பறை வசதிகள் இல்லாதவை என்று அரசு கல்வி நிறுவனங்கள் உள்ள நிலையை மாற்றி அமைப்பார்களா? மக்களின் எதிர்பார்ப்பு இதுதான்!

உயிருடன் விளையாட வேண்டாம்!

திருப்பூர் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்சாரத் துண்டிப்பால், ஆக்சிஜன் தடைபட்டு இரு கரோனா நோயாளிகள் மரணம்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே இந்த அவலமா? உ.பி.யில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணித்தது உண்டு.

உயிருடன் விளையாடும் போக்கு கண்டிக்கத்தக்கதே!

‘இந்தி தெரியாதா? போ!'

வாடிக்கையாளருக்கு இந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளர் இடமாற்றம் - இது நடந்தது கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்.

தமிழ்நாட்டில் மத்திய அரசு தொடர்புடைய அலுவலகங்களில் வடநாட்டுக்காரர்கள் குவிவதும், சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணியாற்றுவதும் அதிகரிக்கும் போக்கின் விளைவே இது. விமான நிலையத்தில் ஒரு எம்.பி.,க்கே இந்த நிலை ஏற்பட்டதுண்டே!

எந்தப் பட்டியலில் சேர்ப்பது?

'ழ'கரத்தை உச்சரிப்பவர்கள் மட்டுமே தமிழர்கள் என்றால், பாதி தமிழர்களை தமிழர்கள் என்று கூற முடியாது - 'துக்ளக்' 30.9.2020, பக்கம் 16.

அது இருக்கட்டும். அவா, இவா, சொல்றச்ச என்று உலகத்தின் எந்த மூலை முடுக்கில் உள்ள பார்ப்பனர்களும் ஒரே மாதிரி பேசுறாளே - இவாளை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?

வளர்ச்சி?

இந்தியாவின் கடன் ரூ.101 லட்சம் கோடி. ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.75 ஆயிரம் கடன் சுமை.

இதற்குப் பெயர்தான் மோடி ஆட்சியில் வளர்ச்சி என்பது.

பி.ஜே.பி. ஆட்சியில் கார்ப்பரேட்டுகளின் சொத்து 87 சதவிகிதம் ஊதிப் பெருத்திருக்கிறதே- இவையெல்லாம் வளர்ச்சியோ வளர்ச்சிதானா?

பொய் சொல்லுகிறார்களாம்!

விவசாயிகளிடம் எதிர்க்கட்சியினர் பொய் சொல்லி வருகின்றனர் - பிரதமர் மோடி.

பண மதிப்பிழப்பால் பொருளாதாரம் சீர்படும்;

ஜி.எஸ்.டி.யால் விலைவாசி குறையும் என்று சொன்னது எல்லாம் யார்? சொன்னபடி நடந்தனவா? இதில் பொய் சொல்வோர் யார் என்பது பொதுமக்களுக்குத் தெரிந்த செய்திதான்!