ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகம்
August 22, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை,ஆக.22- தமிழகத் தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் செப் டம்பர் 30ஆம் தேதிக்குள் பயோமெட்ரிக் முறை அறி முகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள் ளது. தமிழகத்தில் மொத்த முள்ள சுமார் 35 ஆயிரம் நியாயவிலைக் கடைகளில் தற்போது ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொதுமக்க ளுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறன. இந்த நடை முறையில் சில முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்தது. புகாரின் அடிப் படையில் கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் நியாய விலைக் கடை ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் நிலை இருந்தது. இதனால், பயோ மெட்ரிக் முறையை நியாய விலைக்  கடைகளில் அறிமு கப்படுத்த வேண்டும் என்று நியாயவிலைக் கடை ஊழியர் கள் அரசுக்கு கோரிக்கை வைத் தனர். அரசுக்கும் இதன்மூலம் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்று கூறப்பட் டது.  இந்த நிலையில் முதல் கட்டமாக திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பயோமெட் ரிக் முறை கடந்த ஜூலை மாதம் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 300 கடைகளில் பயோமெட்ரிக் கருவி மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட் டங்களிலும் பயோமெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சஜன்சிங் சவான் அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுக்கு நேற்று அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து நியாய விலை கடைகளிலும் தற்போது பயன்பாட்டில் உள்ள பயோமெட்ரிக் கைரேகை பதிவு மிஷினின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே நியாய விலைக் கடைகளில் பயன் பாட்டில் உள்ள பாயிண்ட் ஆப் மிஷினை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த பணி முடிக்கப்பட்டுள்ளது. நாகப் பட்டினம், கரூர் மாவட்டங் களிலும் முடியும் தருவாயில் உள்ளது. மற்ற மாவட்டங் களிலும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து நியாய விலை கடைகளில் பயோ மெட்ரிக் பொருத்தும் பணி முடிவடையும். எனவே, புதிய பயோமெட்ரிக் மேம்பாட்டு கருவியை நியாயவிலை கடை களில் பொருத்துவது தொடர் பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அது தொடர்பான விவரங் களை மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவும் என்பதால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதி வேட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்த சூழ்நிலை யில், நியாயவிலைக்  கடைக ளுக்கு பயோமெட்ரிக் முறையை கொண்டுவர அரசு ஏன் அவசரம் காட்ட வேண் டும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் 2021க்கு பிறகு பயோ மெட்ரிக் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.