ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செப்டம்பர் 17 - தந்தை பெரியார் பிறந்த நாளில் பொதுத்துறை காப்போம் என நாடு தழுவிய போராட்டம்
September 9, 2020 • Viduthalai • இந்தியா

அகில இந்திய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட கூட்டு இயக்கம் முடிவு

புதுடில்லி, செப். 9- ரயில்வே, ஆயுள் காப்பீட்டுக் கழகம், ஏர் இந்தியா, எண்ணெய் துறை (Oil Sector) நிலக்கரி  (Coal), வங்கிகள் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மய மாக்கும் மத்திய அரசின் நடவடிக் கையைக் கண்டித்து அதற்கு எதிரான செயல்பாடுகள் குறித்து விவாதிக்க, அகில இந்திய தாழ்த்தப்பட்ட, பழங் குடியின, இதர பிற்படுத்தப்பட்ட கூட்டு இயக்கத்தின் சார்பில் செப்டம் பர் 1-ஆம் தேதி இணையம் வழியே முக்கிய பொறுப்பாளர்களின் கூட் டம்  நடைபெற்றது. தொடர்ந்து செப் டம்பர் 3, 4 தேதிகளில் ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகளுடனும் இது குறித்து அமைப்பின் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனை கூட்டங்களின் முடி வில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடர்ச்சி யான போராட்டங்களை நடத்திட முடிவு செய்யப்பட்டது.

கூட்டு இயக்கத்தின்

முடிவுகள்:

  1. தனியார்மயமாக்கலை எதிர்த்து அனைத்து சமூக அமைப்புகள் சார் பில் கூட்டு அறிக்கை வெளியிடுவது.
  2. குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இணையம் வழியே மனு அனுப்புவது.
  3. செப்டம்பர் 10 முதல் 16 வரை, ரயில்வே துறையை, தனியார்மயமாக்கு வதை எதிர்த்து பிரதமருக்கும், ரயில்வே அமைச்சருக்கும், நாடு முழுவதும் அந்தந்த ரயில் நிலைய அதிகாரி (ஸ்டேஷன் மாஸ்டர்) மூலமாக மனு அளிப்பது. அவ்வாறு ரயில் நிலைய அதிகாரிக்கு தரப்படும் செய்திகளை புகைப்படத்துடன் சமூக வலைத் தளங்களில் வெளியிடுவது. அதே போன்று, எல்.அய்.சி. உள்ளிட்ட பொதுத்துறைகளைத் தனியார்மய மாக்குவதை எதிர்த்து அந்தந்த அலு வலகங்கள் மூலமாக பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் மனு அனுப்பு வது.
  4. செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 16 வரை,#Stop Privatisation_ Save Public Sector #Stop Privatisation_ Save Reservation  என்ற ஹேஷ்டேக் குடன் சமூக ஊடகங்களில் 2 நிமிட காணொலிகளை இடுகையிடுதல்.
  5. தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, அவரவர் இல்லம் / அலுவலகம் அல் லது அப்பகுதியில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில், பொதுத்துறை யைக் காப்போம், தனியார்மயமாக் கலை எதிர்ப்போம் என்ற பதாகை களுடன் ஆர்ப்பாட்டம் நடத்துவது #Stop Privatisation_ Save Public Sector #Stop Privatisation_ Save Reservation.   தனியார்மயமாக்கலை எதிர்க்கும் தொழிற்சங்கங்கள், அமைப்புகளை யும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்துவது.

ஆர்ப்பாட்ட செய்திகளை நிழல் படத்துடன் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது.

  1. தனியார்மயமாக்கலை எதிர்ப் போம் என்ற முழக்கத்துடன் டிவிட்ட ரில் செப்டம்பர் 12-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 9 மணி வரை தொடர் பதிவிடுதல் (Twitter Storm).
  2. செப்டம்பர் 17-ஆம் தேதிக்குப் பிறகு, கூட்டு இயக்கத்தின் நிர்வாகிகள் மீண்டும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க விவாதிப்பது.

கூட்டு இயக்கத்தின் நிர்வாகி முனைவர் சுதன்சு குமார் (டில்லிப் பல்கலைக்கழகம்) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.