ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சென்னை விமான நிலையங்கள் பெயரில் அண்ணா, காமராசர் பெயர்களை இருட்டடிப்பதா
September 20, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை விமான நிலையங்கள் பெயரில் அண்ணா, காமராசர் பெயர்களை இருட்டடிப்பதா?

மத்திய அமைச்சருக்கு, ஆர்.எஸ்.பாரதி  எம்.பி., கடிதம்

சென்னை, செப்.20, மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நான், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகைபுரியும்போதும் அல்லது புறப்படும்போதும் தவறான முறையில் செய்யப்படும் அறிவிப்பு குறித்த விவரத்தினை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். 1989ஆம் ஆண்டு கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது, சென்னை உள்ளூர் விமான முனையத்தினை காமராஜர் விமான நிலையம் என்றும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தினை அண்ணா பன் னாட்டு விமான நிலையம் என் றும் அறிவித்தது பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வாறு பெயர் சூட்டப்பட்ட பின்னரும், பெரும்பாலும் சென்னை விமான நிலையம் என்றும், சென்னை பன்னாட்டு விமான நிலையம் என் றும் தற் போதும் அறிவிக்கப்பட்டு வரு கிறது. இத்தகைய சூழ் நிலையில், சென்னை விமான நிலைய பெயர்கள் குறித்த அறிவிப்புகளை முறையாக செய்யு மாறு சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு உரிய நெறிமுறைக் கட் டளைகள் வழங்குமாறு வேண் டிக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.