ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சென்னையில், 50 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது: ஆய்வில் கண்டுபிடிப்பு
August 23, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை, ஆக.23 சென்னையில் 12 ஆயி ரம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோத னையில் 50 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கரோனா சமூகத்தில் எந்த அளவு உள்ளது என்பதை கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆய்வு நடத்தியது. இந்தியாவின் பல் வேறு மாநிலங்களிலும் உள்ள 69 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத் தப்பட்டது. இதில் பொதுமக்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ‘எலிசா’ பரிசோதனை முறையில் சோதனை செய்யப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு கண்டறியப்படுகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் அறிவுறுத்தலின்படி நோய் கட்டுப்பாட்டுபகுதிகளில் வசிப்பவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையி னர், பத்திரிகையாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பல்வேறு இணை நோய் உள்ளவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தேசிய காச நோய் நிறுவனம் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, சென்னையில் 12 ஆயிரம் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தது.

இதுகுறித்து ஆய்வு நடத்திய மருத் துவ நிபுணர் கூறுகையில்,

“இந்த ஆய்வின் முடிவில் 12 ஆயிரம் மாதிரிகளில் 50 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது கண் டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முழு மையாக முடிவடைந்த பிறகு தான் எத்தனை பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது என்பது தெளிவாகத் தெரியவரும்.

ஆய்வு விரைவில் முடிக்கப்பட்டு சென்னை மாநகராட்சியிடம் முழு விவ ரங்களும் ஒப்படைக்கப்படும். இந்தியா வில் 4- இல் ஒரு பகுதியினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. அதன் படி டில்லியில் 23 சதவீதம் பேருக்கும், மும்பையில் 57 சதவீதம் பேருக்கும், புனேவில் 50 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது'' என்றார்.