ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சூரப்பா பதவியில் நீடிக்கக் கூடாது; உடனே இடைநீக்கம் செய்க!
November 16, 2020 • Viduthalai • தமிழகம்

தொல். திருமாவளவன் எம்.பி., வலியுறுத்தல்

சென்னை, நவ.16 அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தராக சூரப்பா பதவியில் நீடிப்பது கூடாது என்றும், உடனே இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் தலைவரும், மக்களவை உறுப்பின ருமான  எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தொல்.திருமாவள வன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

"அண்ணாபல்கலைக்கழகத்துணை வேந்தர் சூரப்பாவின்மீது தெரிவிக் கப்பட்டுள்ள புகார்கள் குறித்து விசாரிப் பதற்குத் தமிழக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ள நிலையில், அவர் பதவியில் நீடிப்பது சரியானது அல்ல. எனவே, அவரை உடனடியாக இடைநீக்கம் செய்வதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பாவுக்கு எதிராகப் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் தற்போது தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலை யரசன் தலைமை யில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத் துள்ளது.

சூரப்பாவின் காலத்தில் பல்கலைக் கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அண்ணா பல்கலைக்கழகச் சட்டம் 1978க்கு உட்பட்டவையாக உள்ளனவா? அவர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக நியமனங்கள், முறையாகச் செய்யப்பட்டுள்ளனவா? பல்கலைக்கழ கத்தால் வசூலிக்கப்பட்ட கட்டணம், நன்கொடை, நிதி நல்கை போன் றவை சரியான முறையில் பயன்படுத்தப்பட் டுள்ளனவா? உள்ளிட்டவற்றை நீதிபதி கலையரசன் ஆணையம் விசாரிக்கும் என்று தமிழக அரசின் அரசாணை தெரிவிக்கிறது.

சூரப்பாவுக்கு எதிராக திருச்சியைச் சேர்ந்த சுரேஷ், 'சேவ் அண்ணா யுனிவர்சிட்டி' அமைப்பைச் சார்ந்த சி.வர தராஜன், செல்லதுரை மற்றும் ஆர்.ஆதி கேசவன் உள்ளிட்டோர் புகார்கள் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்ணாபல்கலைக்கழகத்துணை வேந்தரைப் பதவி நீக்கம் செய்யவேண்டு மெனில் அரசால் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் வேந் தராக இருக்கும் ஆளுநரே அதற் கான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.

அந்த விசாரணை ஆணையம் உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலோ அல்லதுதலைமைச்செயலாளர்தகுதி யில் உள்ள அதிகாரி ஒருவரின் தலைமை யிலோ இருக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகச் சட்டம்- 1978 இன் பிரிவு 4ஏ கூறுகிறது. அதன் அடிப்படையிலேயே இப்போது விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

நிர்வாகக் குளறுபடிகள் மட்டுமன்றி, நிதிமுறைகேடுகள் தொடர்பான புகார் களும் துணைவேந்தர் சூரப்பா மீது தெரி விக்கப்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது விசாரணைக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்.

எனவே, விசாரணை ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன்மீதான நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர் தாமே முன்வந்து பதவி விலக வேண்டும் அல்லது அவரை உடனடியாக இடைநீக்கம் செய்வதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களில் செய் யப்பட்டுள்ள நியமனங்கள், சிண்டிகேட், செனட் உறுப்பினர் நியமனங்கள் தமிழக அரசின் உயர்கல்வித் துறைக்குத் தெரிந்துதான் நடக்கின்றனவா? என்கிற அய்யமும் பலராலும் எழுப்பப்படுகிறது. இந்த அய்யத்தைக் களையவும் தமிழக அரசு முன்வர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட் டுக்கொள்கிறோம்".

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது.