ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சுற்றுச் சூழல் கட்டுப்பாடுகள் பலவீனப்படுத்தப் படுகின்றனவா
September 8, 2020 • Viduthalai • மற்றவை

சுற்றுச் சூழல் கட்டுப்பாடுகள் பலவீனப்படுத்தப் படுகின்றனவா?

ஜி. அனந்தகிருஷ்ணன்

தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிவிக்கை, முந்தைய கால அறி விக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதில் என்ன முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?

இதுவரை நடந்த கதை: 1986 ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட,  தற்போது நடைமுறையில் உள்ள  2006 சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிக்கையை மாற்றி அதனி டத்தில்   2020  சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறி விக்கையை மத்திய சுற்றுச் சூழல், மற்றும் காடுகள் அமைச்சரவை வெளியிட்டுள்ளது. இந்த இடைக் காலத்தில் அதில் செய்யப் பட்டுள்ள மாற்றங்களை அந்த அறிவிக்கையில் சேர்ப்பதற்கு அரசு விரும் பியது. சுரங்கம், நீர்ப்பாசன அணை,  தொழிற்சாலை அல்லது கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிற் சாலைகள்  போன்ற திட்டங்கள் ஏற்படுத்தும் சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றிய அறிவியல் பூர்வமான ஒரு மதிப்பீடுதான் இது. இந்த செயல்திட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் அத்திட்டம் நடை முறைப்படுத்து வதற்கு உள்ள ஆட்சேபனைகளை தெரிவிக்கவும், தங்களது கருத்துகளைத் தெரிவிக்கவும்,  உள்ளூர் மக்களுடன் மேற்கொள்ளும் ஒரு கலந்தாய்வு உள் ளிட்ட பொது மக்களுடன் கலந்தாலோசிப்பதற்கான விதிகளும் இந்த சட்டங்களில் உள்ளன.

தற்போது நடைமுறையில் உள்ள சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிவிக்கையில் இருந்து இந்த புதிய அறிவிக்கையின் வரைவு எவ்வாறு மாறுபட்டு உள்ளது?

தற்போது நடைமுறையில் இருக்கும் அறி விக்கையில்  செய்யப்படுவதற்கு உத்தேசிக்கப்பட் டுள்ள மிகப் பெரிய மாற்றங்களில் ஒன்று பொது மக்களுடனான கலந்தாலோசனையின் கீழான பல நடவடிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதுதான். சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு சட்டத்தின் விதி 23 - உபவிதி 11 பி-2 பிரிவின் கீழ் பொதுமக்களுடன் கலந்தாலோ சனை செய்யவேண்டும் என்ற தேவையில்,  நிபந்த னையில் இருந்து குறிப்பாக விலக்கு அளிக்கப்பட் டுள்ள செயல் திட்டங்கள் பி-2 பட்டியலில் சேர்க் கப்பட்டுள்ளன.

இந்தப் பிரிவின் கீழ் சேர்க்கப்பட்ட செயல் திட்டங்களில், நிலப்பகுதி மற்றும் கடல் பகுதியில் எண்ணெய் வளம் தேடும் ஆழ்துளை திட்டங்கள், 25 மெகாவாட் வரையிலான நீர் மின்சார திட்டங்கள், ஒரே பகுதியில் 2,000 முதல் 10,000 எக்டேர் வரையிலான விவசாய நீர்பாசன திட்டங்கள், சிறிய மற்றும் நடுத்தர கனிமவள சுரங்கங்கள்,  உலைக் களம் உள்ள சிறு இரும்புத் தொழிற்சாலைகள், செங்கற்களை பலம் பொருந்தியவைகளாக ஆக்கும் சிறு தொழிற்சாலை கள், சிறு பிரிவுகளைச் சேர்ந்த ரோலிங் தொழிற் சாலைகள்,  பாஸ்பரிக், அம்மோனியா, சல்பூரிக் அமி லங்கள் நீங்கலான இதர அமிலங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சிறு நடுத்தர சாயத் தொழிற் சாலைகள், மொத்த அளவிலான மருந்துகள்,  செயற்கை ரப்பர்கள், நடுத்தர வண்ணப் பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலைகள், அனைத்து உள்நாட்டு நீர் வழி போக்குவரத்து செயல்திட்டங்கள்,  25 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையில் தற்போதுள்ள சாலைகளை விரிவு படுத்தி அகலப்படுத்தும் செயல்திட்டங்கள், அவற்றின் நிதி மன்றும் இதர எல்லைகளுக்குள் செயல்படும்  செயல்திட்டங்கள், சுற்றுச் சூழல் ரீதியில் உணர்வு பூர்வமான பகுதிகளில் கயிற்று வழி கார் போக்குவரத்து,  குறிப்பிட்ட கட்டடங்களின் கட்டு மானம் மற்றும் பகுதி மேம்பாட்டு திட்டங்கள் ஆகிய இந்த செயல் திட்டங்கள் எல்லாம் இந்த பி-2 பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இப்போது உள்ள செயல் திட்டங்கள் தற்போதுள்ள  நிபந்தனைகளின்படி  மதிப்பீட்டு வல்லுநர் குழுவால் அடையாளம் காணப்பட்டு சேர்க்கப்பட்டவையே அன்றி,  இந்த பி-2 இணைப்பில் பட்டியலிடப்பட்டதால் விலக்கு அளிக்கப்பட்டவை அல்ல. மேலும், நிலக்கரி மற்றும் நிலக்கரி அல்லாத கனிமவள மேம்பாட்டு திட்டங்களுக்கும், சூரிய ஒளியில் மின்சாரம் தயா ரிக்கும் கருவிகளைத் தயாரிக்கும் செயல் திட்டங் களுக்கும், சுற்றுச் சூழல் கட்டுப்பாட்டு அமைப்பின் முன் அனுமதி பெறத் தேயில்லை.

இந்த புதிய அறிவிக்கையின் வரைவிலிருந்து பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சங்கள் யாவை?

சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு நடைமுறையில் இருந்தும்,  பட்டியலிடப்பட்டுள்ள பி-2 வகையைச் சேர்ந்த தொழில்களை விரிவுபடுத்தவும், நவீனப் படுத்தவும், பொது மக்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்தும் விலக்கு அளித்திருப்பது சுற்றுச் சூழலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. அத்துடன், சுற்றுச் சூழல் கட்டுப் பாட்டு அமைப்பின் முன் அனுமதி இன்றி தொழில்களை விரிவுபடுத்துவது, நவீனப்படுத்துவது ஆகிய செயல் பாடுகளை இணைந்து மேற்கொள்வது இந்த கட்டுப் பாடுகளை மேலும் பலவீனப்படுத்துவதாகவே அமையும். மேலும், பொதுமக்களுடனான கலந்துரை யாடலுக்காக அளிக்கப்பட வேண்டிய தாக்கீதின் காலம்  30 நாட்களில் இருந்து 20 நாட்களாகக் குறைக் கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிக்கையின் நகல் பரவலாகக் கிடைக்காத நிலையும், மாநில மொழிகளில் போதிய அளவு அளிக்கப் படாததும், இந்த அறிவிக்கையை படித்து ஆராய்ந்து பார்ப்பது என்பதை மக்களுக்கு மிகவும் கடினமான ஒரு செயலாகவே ஆக்கிவிடுகின்றன.

அதே போல, செயல்திட்டங்களை விரிவுபடுத் துதல் மற்றும் நவீனப்படுத்தலுக்கான அறிவிக்கையில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள், 25 சதவிகித  சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வழக்குகளிலும்,  50 சதவிகித  பொது மக்கள் கலந்துரையாடல்கள் தேவைப்படும்  வழக்குகளிலும்  மட்டுமே தாராளமாக இருக்கின்றன.

உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களின் கீழ், செயல் திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஆண்டு ஒன்றுக்கு,  தற்போது அளிக்கப்பட வேண்டிய  இரண்டு அறிக்கையை இனி  ஒரு ஆண்டுக்கு ஒன்று என்ற முறையில்   அளித்தால் போதுமானது என்பதும் ஒன்று. இந்த நடவடிக்கை மிகவும் பிற்போக்குத்தன மானதாக இருப்பதாகும். இதன் காரணம், ஆண்டுக்கு இரு முறை அறிக்கை அளிப்பது என்பது  45 மற்றும் 75 சதவிகித அளவுகளுக்கு இடையில்  2016 ஆம் ஆண்டில் குறைவாக இருந்தது என்றும்,  நிபந்தனை கள் நிறைவேற்றப்படாத வழக்குகள், குறிப்பாக தனி பள்ளத்தாக்கு மற்றும் நீர் மின் உற்பத்தி செயல்திட் டங்களிலும், தெர்மல் மின் உற்பத்தி திட்டங்களிலும், அறிக்கை அளிக்கத் தவறியது 5 முதல் 57 சதவிகிதம் வரை இருந்தது என்றும் கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் கண்டு கொண்டதேயாகும். அறிக்கை அளிக்கும் இந்த நிபந்தனை, குறிப்பாக ஆற்று பள்ளத்தாக்கு மற்றும் நீர் தெர்மல் மின் விசை உற்பத்தி திட்டங்களில், நிறைவேற்றப்படாமல் இருந்தது எதிர்கொள்ளப்பட்டது. கடந்த மே 5 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் எல்.ஜி. எரிவாயு கசிந்த பிறகு,  இந்த தொழிற்சாலைக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தெரிவித்தது, விதிகள் எவ்வளவு தளர்வாக கடைப்பிடிக்கப்படுகின்றன என்பது வெளியே எடுத்துக் காட்டும் விதத்தில் அது இருந்தது.

அனுமதியின்றி தொழிற்சாலை துவங்கிய பிறகு சுற்றுச் சூழல் விதி மீறல்கள் இருப்பது எவ்வாறு வரைவு விதிகளில் கண்டுபிடிக்க முடிகிறது?

உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களின் கீழ், செயல் திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஆண்டு ஒன்றுக்கு,  தற்போது அளிக்கப்பட வேண் டிய  இரண்டு அறிக்கையை இனி  ஒரு ஆண்டுக்கு ஒரு என்ற முறையில்   அளித்தால் போதுமானது என்பதும் ஒன்று. இந்த நடவடிக்கை மிகவும் பிற் போக்குத்தனமானதாக இருப்பதாகும். இதன் கார ணம், ஆண்டுக்கு இரு முறை அறிக்கை அளிப்பது என்பது  45 மற்றும் 75 சதவிகித அளவுகளுக்கு இடை யில்  2016 ஆம் ஆண்டில் குறைவாக இருந்தது என் றும்,  நிபந்தனைகள் நிறைவேற்றப்படாத வழக்குகள், குறிப்பாக தனி பள்ளத்தாக்கு மற்றும் நீர் மின் உற்பத்தி செயல்திட்டங்களிலும், தெர்மல் மின் உற்பத்தி திட்டங்களிலும், அறிக்கை அளிக்கத் தவறியது 5 முதல் 57 சதவிகிதம் வரை இருந்தது என்று கம்ப்ட் ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் கண்டு கொண்ட தேயாகும். அறிக்கை அளிக்கும் இந்த நிபந்தனை, குறிப்பாக ஆற்று பள்ளத்தாக்கு மற்றும் நீர் தெர்மல் மின் விசை உற்பத்தி திட்டங்களில், நிறைவேற்றப் படாமல் இருந்தது எதிர்கொள்ளப்பட்டது. கடந்த மே 5 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் எல்.ஜி. எரிவாயு கசிந்த பிறகு,  இந்த தொழிற்சாலைக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு, மத்திய சுற்றுச் சூழல் அமைப்பு கூறியுள்ளது.

அனுமதியின்றி தொழிற்சாலை துவங்கிய பிறகு சுற்றுச் சூழல் விதி மீறல்கள் இருப்பது எவ்வாறு வரைவு விதிகளில் கண்டுபிடிக்க முடிகிறது?

தொழிற் சாலை புதிதாக கட்டப்படும் அல்லது நவீனப்படுத்தும் இடங்களில் சுற்றுச் சூழல் அமைப்பின் முன் அனுமதி இன்றி துவங்கப்பட்ட பணிகள்  மேற்கொள்ளப்படும் போது, இந்த செயல்திட்டங்களில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன என்பதை சுற்றுச் சூழல்  அமைச்சகம் தனது 2017 ஆம் ஆண்டு  மார்ச் 14 ஆம் மாதம் 14 அன்று வெளியிட்ட தனது ஆணையிலேயே குறிப்பிட்டுள்ளது. பொதுவான விதி மீறல்கள் அல்லாத சுதந்திரமான திட்டம் ஒன்றை தகுதியின் அடிப்படையில் நிபந்தனைகளை மீறிய வர்களுக்கு அளிக்கும்படி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தனது ஆணை ஒன்றில் கேட்டுக் கொண்டது.

பொது மக்களால் புகார் தெரிவிக்கப்பட்ட சுற்றுச் சூழல் விதிமீறல்கள், விதிகள் பின்பற்றாத புகார்கள் பற்றிய அறிவிப்பு 2020 சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப் பீட்டு அறிவிக்கையில் சேர்க்கப்படவில்லை. அதற்கு மாறாக,  அது போன்ற பொது மக்களின் புகார்களைப் பற்றி, விதிகளை மீறிய தொழிலதிபர் மற்றும் செயல் பாட்டு மதிப்பீட்டு கட்டுப்பாட்டு அமைப்பு போன்ற  அரசு அமைப்புகளிலிருந்து பெறப்பட்ட அறிக்கை கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. அத்தகைய திட்டங்களுக்குப் பின்னர், சுற்றுச்சூழல் சீரழிவு  சரி செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட  சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கப்படலாம். இந்த நிபந்தனைகள் நிறைவேற் றப்பட்டனவா என்பது, மத்திய சுற்றுச்சூழல் கட்டுப் பாட்டு குழுமத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று கூறப்படுவது போல, தொடர்பற்ற ஒரு அமைப்பால் மதிப்பீடு செய்யப் படாமல்,  விதிமீறியவரின் அறிக்கையின் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்யப்படுகிறது.

எவ்வாறு வரைவு அறிவிக்கை உலகலாவிய நிபந்தனைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது?

தீங்கினைத் தவிர்ப்பது  மற்றும் அமைப்புகளி டையே உருவாக்கப் படும் சமத்துவம்  ஆகிய முன் நிபந்தனைக் கொள்கைகளின் தேவைகளை சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு விதிகள் நிறைவு செய்ய வேண்டும். ஒரு மிக நல்ல முன்னுதாரணமாக அய்ரோப்பிய ஒன்றியம் தனது சுற்றுச் சூழல் நடை முறைகளை 1998 ஹார்ஹஸ் மாநாட்டின் தீர்மானப் படி மாற்றி அமைத்துக் கொண்டுள்ளது.  சுற்றுச் சூழல் உரிமைகளும், மனித உரிமைகளும் இணைக்கப்படு வதாக அது அறிவித்துள்ளது. தற்போதைய தலை முறை எதிர்கால தலைமுறைக்கு ஆற்றவேண்டிய, விட்டுச் செல்ல வேண்டிய பொறுப்புகளும் கடமை களும் உள்ளன.  சுற்றுச் சூழல் பிரச்சினையுடன் தொடர்புடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல் படும் போதுதான் இந்த விஷயத்தில் ஒரு நீடித்த முன் னேற்றம் ஏற்பட முடியும். அரசு தனது கடமைகளை நிறைவேற்றி தனது செயல்பாடுகளுக்கு பொறுப் பேற்று பதில் சொல்வதும், சுற்றுச் சூழல் பாதுகாப்பும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தப்பட்டவையாகும். அதனால் பொது மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளி டையேயான செயல்பாடுகள் ஒரு ஜனநாயக அடிப் படையில் நடைபெறவேண்டியவையாகும். சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டுக்கான அய்ரோப்பிய ஒன்றிய இயக்குநர் சுற்றுச் சூழல் மாற்றத்தையும்,  உயிரினச் சீரழிவு பற்றிய கவலைகளையும் அறிவிக் கையில் சேர்த்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 2006 ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு உள்ளிட்ட விதிகள், பொது மக்களுடனான கலந்தாலோசனைகளைக் குறைத்துக் கொள்வது, தவறான-குறைகள் மலிந்த சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையை, வெளி ஆட்களின் செல்வாக்கு காரணமாகப்  பெற்றுக் கொண்டு திட்டத் துக்கு ஒப்புதல் அளிப்பது, திட்டத்தின் சக்தி ஆதா ரங்களை மறுசுழற்சிக்கு உள்ளாக்குவதைப் பற்றி அலட்சியப்படுத்திவிடுவது ஆகியவை  தொழில் திட்டத்தைத் துவங்குபவரின்  நலன்களுக்கு ஏற்ப அளிக்கப்பட வேண்டிய  சலுகைகள் என்றும் வாதாட இயலக் கூடும். அந்தக் கருத்தின் பாதிப்பை 2020ஆம் ஆண்டு அறிவிக்கை ஆழப்படுத்தவே செய்கிறது.

நன்றி: 'தி இந்து', 02.09.2020

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்