ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சுற்றுச்சூழல் விதிமுறைகளைச் சீர்குலைக்க வேண்டாம் சோனியா காந்தி வலியுறுத்தல்
August 14, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி, ஆக. 14- மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப் பீட்டு வரைவு அறிக்கை-

2020 பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிக்கையைக் கடுமையாக எதிர்த்துவருகி றார்கள்.

மார்ச் மாதம் வெளியி டப்பட்ட இந்த வரைவு அறி விக்கை பல்வேறு திட்டங்க ளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறைகளைக் கொண்டுள்ளது. இதற்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம் பியுள்ளன.

இந்த நிலையில் சுற்றுச் சூழல் விதிமுறைகளை சீர் குலைக்க வேண்டாம் என் றும், சுற்றுச் சூழலை பாது காக்க வேண்டிய சமூகக் கடமை மத்திய அரசுக்கு உள்ளதாக வும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சுற்றுச் சூழல் தாக்க மதிப் பீடு வரைவு அறிக்கை 2020-அய் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வறுமையை ஒழிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியாது ஆத லால் சுற்றுச்சூழல் விதிமுறை களைச் சீர்குலைக்க வேண் டாம்’’ என்று தெரிவித்துள் ளார்.

பொதுச் சுகாதாரம், சுற் றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று ஒருங்கிணைந்தது என்று சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் கடந்த  6 ஆண்டுகளாக எந்தவித சிந்தனையும் இன்றி மத்திய அரசு பல நடவடிக் கைகளை எடுத்து வருவதாக சோனியா காந்தி, மோடி அரசைச் சாடியுள்ளார்.