ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் சட்ட வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு!
August 22, 2020 • Viduthalai • இந்தியா

மத்தியத் தொழிற்சங்கங்கள் பிரதமருக்குக் கடிதம்

புதுடில்லி, ஆக.22 2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்டத் திற்காக முன்மொழியப்பட்டுள்ள வரைவு விதிகளுக்கு மத்தியத் தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை விலக்கிக் கொள்ள வேண்டும் என மத்தியத் தொழிற்சங்கங்கள், பிரதம ருக்குக் கடிதம் எழுதியுள்ளன.

மத்தியத் தொழிற்சங்கங்கள் சிஅய் டியு, ஏஅய்டியுசி, அய்என்டியுசி, தொமுச மற்றும் சங்கங்கள் அக்கடி தத்தில் கூறியிருப்பதாவது:

மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையாகிய நாங்கள், 2020 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப் பீட்டு சட்டத்திற்காக முன்மொழியப் பட்டுள்ள வரைவு விதிகளுக்கு எங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்திக் கொள் கிறோம். இந்தத் திருத்தங்கள், பன் னாட்டு புவி வெப்பமயமாதல் ஒப்பந்தத் திற்கு எதிரானதாகவும், நம் நாட்டிலும் சுற்றுச்சூழல் கூருணர்வு மிக்க மண்ட லங்களின் பாதுகாப்பு நலன்களுக்கு எதி ரானதாகவும் இருக்கின்றன.   2020 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்டம், 2006ஆம் ஆண்டு சட்டத்தி லிருந்து முற்றிலுமாக மாற்றுப்பாதையில் செல்கிறது. இது வர்த்தகரீதியான தனி யார் நிலக்கரி சுரங்கங்களுக்கும், இதர கனிமவள நிர்வாக மேலாண்மைக்கும் அரசாங்கத்தின் நிலங்களை சீர்திருத் தங்கள் என்ற பெயரில் தாரைவார்த் திடும் ஒன்றாகவே தோன்றுகிறது.

சுற்றுச்சூழல் நிலைமைகளில் ஏற் படக்கூடிய மாற்றங்கள்தான் பல்வேறு வடிவங்களிலான  இயற்கைப் பேரிடர் களுக்குக் காரணம் ஆகும். கார்ப்பரேட் டுகளின் பேராசை நடவடிக்கைகள், எவ் விதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்காமல், மனித குலத்திற்கு அழிவினை ஏற்படுத்தக்கூடிய விதத்தில்  இயற்கையை சூறையாடுவதற்கு இட்டுச்செல்லும் என்பதில் சந்தேக மில்லை. இது நாட்டின் பொருளாதா ரத்திற்கும் நல்லதல்ல, நாட்டின் உறுதியான நிலையான வளர்ச்சிக்கும் உதவாது. இந்தியா, உலக நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு உறுதி பூண்டிருக்கிறது. இப்போது அரசால் முன்மொழியப்பட்டுள்ள வரைவு இதற்கு எதிரானதாகும்.   மேலும் இத னால் பாதிக்கப்படுவோர், சமூகத்தில் மிகவும் வறிய நிலையில் வடுப்படத்தக்க நிலையில் உள்ள பழங்குடியினராவார் கள். எனவே,  இந்த விதிகள் முன் மொழிவை நாட்டு மக்கள் நலன் கருதி யும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கணக் கில் கொண்டும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று வலுவான முறையில் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங் களின் கூட்டுமேடை, பிரதமருக்குக் கடி தம் எழுதியுள்ளன. இதன் நகலை, சுற் றுச்சூழல், வனங்கள் மற்றும் புவிவெப்ப மயமாதல் அமைச்சர், பிரகாஷ் ஜவடே கருக்கும் அனுப்பியுள்ளனர்.