ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சுதந்திரமாக செயல்பட்டு வந்த நீதித்துறை அரசு நிர்வாகத்துறைக்கு ஆதரவாக மாறிவிட்டது
September 16, 2020 • Viduthalai • மற்றவை

 (புரிந்து கொள்வதற்கு எளிதாக இல்லாத, வழக்குகளை நீதிபதிகளுக்கிடையே பகிர்ந்து அளிக்கும் தலைமை நீதிபதியின் தனித்த

அதிகாரம் கொண்ட நடைமுறையும், ஒரு மாதிரியான நீதிபதியும், நீதித்துறையின் சுதந்திரத்தை அழிப்பதற்குப் போதுமானவை)

இந்திய நீதித் துறையுடன் தொடர்புடைய இரண்டு மிகமிக முக்கியமான நிகழ்வுகளை கடந்த 15 நாட்களில் நாடு சந்தித்துள்ளது. முதலாவது, பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.  இரண்டாவது, நீதிபதி அருண் மிஷ்ரா ஓய்வு பெற்றது. உச்ச நீதிமன்றத்தின் போர்த் தளவாட பாசறை யில் உள்ள ஆயுதங்களை இந்த நிகழ்வுகள் அவற்றின் சொந்த வழியில் உருப் பெருக்கிக் காட்டியுள்ளன.

பிரசாந்த் பூஷன் வழக்கு

முதல் நிகழ்வில், தனது பெருந்தன்மையை உச்ச நீதி மன்றம் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டு, பிரசாந்த் பூஷன் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம் விதித்து விட்டு விட்டது. அந்த அபராதத்தை செலுத்தத் தவறினால், அவருக்கு மூன்று மாத சாதாரண சிறை தண்டனையும், மூன்று மாத காலத்துக்கு வழக்குரைஞர் தொழில் புரிவதற்கான தடையும் விதிக்கப்படும் என்றும் உச்சநீதி மன்றம் ஆணையிட்டது. அவரது நடத்தைக்காக அவரைக் கண்டித்த நீதிமன்றம், பெருமை வாய்ந்த தொழிலான நீதி பரிபாலனத் துறை நடைமுறையில் இடம் இல்லாத பிடிவாதம் மற்றும் தன்முனைப்பு ஆகியவற்றை எதி ரொலிப்பதாக அவரது நடத்தை உள்ளது என்றும், தான் சார்ந்திருக்கும் அமைப்புக்கு தீங்கிழைத்ததற்காக அவர் சிறிதும் வருத்தப்படவே இல்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.  பிரசாந்த் பூஷன் மீது சளைக்காமல்  உச்ச நீதிமன்றம் மேற்கொண்டு வந்த நடவடிக்கை, அதன் சில்லறைத்தனமான அகங்காரத்தையே காட்டுவதாக இருப்பதால், நீதிமன்றத்தின் சொற்கள் உண்மையான உணர்வில் கூறப் பட்டவை அல்ல என்று சொல்லுவதே பொருத்தமாக இருக்கும். விசாரணைக் காலம் முழுவ திலும், தனது செயலுக்காக பூஷன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரும்பத் திரும்பக்  கூறி, ஒரு சில நாட்கள், ஒரு சில மணி நேரம் என்று கால அவகாசத்தை அவருக்கு  கொடுத்து, அவரை மன்னிப்பு கேட்க வைப்பதற்கு உச்சநீதிமன்றம் முயற்சி செய்து பார்த்தது. நீதிமன்றம் இவ்வாறு நடந்து கொண்டது வியப்பாக இருப்பதாக விவாதிக்கப்படுவதுடன், வேறு எதனையும் விட, வியப்பிலாழ்த்தும் வகையில் நியாயமற்ற வழியில் உச்ச நீதிமன்றம் பேரம் பேசியது அதன் பங்கிற்கு அதனை தலை குனியச் செய்துள்ளது போலவே தோன்றுகிறது.

தற்போது நிலவும் சூழ்நிலைகளில் தான் கேட்கும் மன்னிப்பு எந்த வழியிலும் உண்மையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்காது என்று நேர்மையாக கண்ணியத்துடன் பூஷன் ஒப்புக் கொண்டார்.

இந்தத் தீர்ப்பு நீதிமன்ற அவமதிப்பு சட்டத்திற்கு எந்த வழியில் நீதிபரிபாலனத்திற்கு பங்களித்துள்ளது என்பது பற்றி பின்வரும் ஆண்டுகளில் நிச்சயமாக ஆய்வு செய்யப்படும். ஆனால்,  நீதிமன்றம் கருதும் காரணங்களுக்காக அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட மாட்டாது. ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறைக்கு இந்த சட்டம் எவ்வாறு முற்றிலும் தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்வதாக இருக்கிறது என்று பேரறிவு கொண்ட நீதித்துறை, சட்டமன்றத் துறை சமூகம் என்றாவது ஒரு நாள் உணர்வதுடன், அந்த சட்டத்தை மாற்றி அமைக்கவும் செய்யும்.

புகழ் வெளிச்சத்தில் ஒரு நீதிபதி

கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று ஓய்வு பெறுவதற்கு முன்னர், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மிஸ்ரா இறுதியாக அளித்த தீர்ப்புகளில் இதுவும் ஒன்று. அதனால், 2014 ஆம் ஆண்டு முதல் 2020 வரை அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் அவருடைய முடிவுகளின் மீது குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்பட்டது. அவரது பணிக்காலம் முழுவ திலும் தொடர்ந்து வெளிப் படுத்தப்பட்ட ஓர் தொடர் அம்சம் என்னவென்றால்,  அவர் இருந்த அமர்வுக்கு அளிக்கப்பட்ட வழக்குகளின் தன்மை மற்றும் அவர் அளித்த தீர்ப்புகளின் தன்மையும்தான்.  இரண்டு ஆண் டுகளுக்கு முன்பு நடைபெற்ற நீதிபதிகளின் பத்திரிகை யாளர் சந்திப்பில் முக்கியமாக தெரிவிக்கப்பட்ட குறை, வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்குவதில் தலைமை நீதிபதிக்கு இருக்கும் தனிப்பெரும் அதிகாரம் அளிக்கும் நடைமுறை பற்றியதுதான். அதிலும் அரசியல் உணர்வு கொண்ட (அரசு நிர்வாகத் தொடர்பான) வழக்குகள் நீதிபதி மிஸ்ராவின் அமர்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தில் உள்ள குறிப்பிட்ட கவலை வெளிப்படுத்தப்பட்டது. (அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும்,  நீதிபதி லோயாவின் வழக்கு பற்றி அது குறிப்பிடுகிறது என்பது தெளிவாக ஊகிக்கப்பட இயன்றதாக உள்ளது.) அபர்ணா சந்திரா, அனுப் சுரேந்திரநாத் மற்றும் வி.வெங்கடேசன் போன்ற விமர்சகர்கள் நீதிபதி அருண் மிஸ்ராவின் தீர்ப்புகளை பகுத்தாய்வு செய்து,  அரசு நிருவாகத்துக்கு ஆதரவாகவே அவை இருந்தன என்ப தைக் கண்டு வெளிப்படுத்தியுள்ளனர். உரிமைகளின் அடிப்படையிலான நீதிமன்றம் என்ற நிலையில் இருந்து அரசு நிருவாக ஆதரவு நீதிமன்றம் என்ற நிலைக்கு உச்ச நீதிமன்றம் நகர்ந்து சென்றுள்ளது என்று பல பத்திரிகையாளர்களும், முன்னணி கல்வியாளர்களும், சட்ட நிபுணர்களும் உறுதிபடக் கூறுகின்றனர். அத்த கைய நீதிமன்றம் செயல்படுவதற்கு அரசியல் உணர்வு பூர்வமான வழக்குகளை விசாரிப்பதற்கு எப்போது வேண்டுமானாலும் தயாராக இருக்கும்  ஒரு நீதிபதி, அரசு நிருவாகத்திற்கு ஆதரவாக தீர்ப்புகள் வழங்குவார் என்று நம்பப்படும் ஒரு நீதிபதி எப்போதுமே அரசுக்கு பயன் மிகுந்தவராக இருப்பவர் ஆவார். எவ்வாறு இருந் தாலும்,  நீதிபதி மிஸ்ரா போன்ற ஒரு நீதிபதி மீது  புகழ் வெளிச்சம் காட்டப்படும் இது போன்ற சந்தர்ப்பங்களில், அரசு நிருவாக ஆதரவு நீதிமன்ற அமர்வு ஒன்றை உரு வாக்குவதற்கு உதவுவதில் தலைமை நீதிபதி அலுவல கத்தின் பங்கு கவனிக்காமல் அலட்சியப்படுத்தப்படக் கூடிய ஒன்றல்ல.

குற்றச்சாட்டுகள், சந்தேகங்கள் பற்றிய குரல் உச்சநீதி மன்றத்துக்குள்ளேயே எழுப்பப்பட்டது. நீதிபதி தீபக் மிஸ்ராவின் உச்சநீதிமன்ற நீதிபதி பணிக்காலத்தில் பணிப் பங்கீடு ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப் பட்டது என்று நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார். இந்த காலத்தில், தலைமை நீதிபதியே ஒரு வழக்காடியாக இருக்கும் இரண்டு வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புகள் மூலம், நீதி பதிகளிடையே வழக்குகளைப் பங்கீடு செய்தளிப்பதில் தலைமை நீதிபதிக்கு உள்ள தனி சிறப்பதிகாரம் அளிக் கும் நடைமுறையை  தலைமை நீதிபதி பாதுகாத்தபோது, இத்தகைய வழக்குப் பங்கீட்டில், தலைமை நீதிபதிக்கு கட்டுப்பாடற்ற, குறைக்க முடியாத அதிகாரம் உள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பிறகு இது பற்றி மறு பரிசீலனை மேற் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும்,  நடைமுறையில் எந்த ஒரு மாற்றமும் மேற்கொள்ளப் படவேயில்லை. அது முதற்கொண்டு இந்த விஷயங்கள் பழைய முறையிலேயே நடத்தப்பட்டு வந்தன. நீதிபதி களுக்கிடையே வழக்குகளைப் பங்கிட்டு அளிப்பதில் தலைமை நீதிபதிக்கு கட்டுப்பாடற்ற, முழுமையான அதி காரம் அளிக்கும் நடைமுறை வேறு ஒரு காலத்துக்காக வடிவமைக்கப்பட்டது; கடந்த காலத்தில் அது நன்றா கவே வேலை செய்திருக்கவும் கூடும். அப்போது நம் மிடம் மிகமிக உயர்ந்த நீதிபதிகள் இருந்தனர் என்பது டன், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பற்றிய சந்தேகம் மிகமிக அரிதாகவே எழுந்தது. ஆனால், இப்போதோ விஷயங்கள் முற்றிலுமாக மாறிப் போய்விட்டன.

தேசிய நீதித்துறை நியமன ஆணையம் உருவாக் கப்பட்ட நிகழ்ச்சியை மறுபடியும் நினைத்துப் பாருங்கள்.  நியமனத்திற்காக நீதிபதிகள்தேர்ந்தெடுப்பதில் அரசு நிருவாகத்தின் அதிகப்படியான குறுக்கீடு இருக்கிறது என்பதன் அடிப்படையில் நீதித்துறை நியமன ஆணைய சட்ட செல்லாது என்று கூறி உச்சநீதிமன்றம் தள்ளிவிட் டது. இன்னமும் மறைமுகமான வழிகளில் அரசு நிரு வாகக் குறுக்கீடு இருக்க முடியும் என்றால், இந்தத் தீர்ப்பி னால் எந்த விதப் பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

சுதந்திரமான நீதித்துறை மீது...

கோட்பாட்டின்படி, அரசின் இதர அங்கங்களை, குறிப்பாக ஒரு சுதந்திரமான நீதித்துறையின் மீதான கட் டுப்பாட்டைக் கைப்பற்றுவது என்பது அதற்கான வாய்ப் பினை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும், அனைத்து அதிகாரங்களும் கொண்டதொரு அரசு நிருவாகத்திற்கு மிகமிக எளிதான செயலாகும். இதற்காக அரசு ஆதரவு எண்ணம் கொண்ட  நீதிபதிகளைக் கொண்டு உச்சநீதி மன்றத்தை நிரப்ப வேண்டிய தேவை இல்லை. மேலும் ஒன்று போலவே சிந்திக்க இயன்ற 30 நீதிபதிகளைக் கண்டு பிடிப்பது இயலக்கூடியதுதான் என்றாலும், அவ் வளவு எளிதானதல்ல.

இதற்காக அரசு நிருவாகம் செய்யவேண்டியதெல் லாம், நீதிமன்றத்தில் அரசுக்கு ஆதரவான சில சூழ் நிலைகள் நிலவுவதை மட்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு நிருவாகத்துக்கு ஆதரவாக இருக்கும் தலைமை நீதிபதியம் நம்பிக்கைக்குரிய அய்ந்தாறு நீதிபதிகளும் இதில் அடக்கம். ஓய்வு பெற்ற பிறகு அரசியல் வண்ணம் பூசப்பட்ட பதவிகள் அளிக்கப்படும் போது, அண்மைக் காலத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் எந்த வித மனஉறுத்தலும் இன்றி அப்பதவி களைஏற்றுக் கொண்டது அரசு நிருவாகத்திற்கு உண்மை யில் உதவி செய்யவில்லை. அரசு ஆதரவு எண்ணம் கொண்ட நீதிபதிகளுக்கு மட்டுமே அரசு நிருவாகத் தொடர்புடைய வழக்குகளை ஒதுக்கீடு செய்வது என்ற இந்த திட்டத்தில், நீதிபதிகளின் திறமை என்பது தொடர்பு அற்றதாக ஆகிவிடுகிறது. மதிப்பு மிகுந்தவை என்று சுதந்திரமான நீதித்துறை கருதும்  மதிப்பீடுகள் அனைத் தையும் அழித்து ஒழிப்பதற்கு, அரசு நிருவாக ஆதரவு எண்ணம் கொண்டதொரு தலைமை நீதிபதியும், நீதிபதி களுக்கிடையே வழக்குகளைப் பிரித்தளிப்பதில் கட்டுப் பாடற்ற முழுமையான அதிகாரம் தலைமை நீதிபதிக்கு அளிக்கும் ஒரு நடைமுறையும் சேர்ந்த கூட்டமைப்பு மட்டுமே போதுமானதாகும். உண்மையாக இல்லாவிட் டாலும், சூழ்நிலைகள் மற்றும் நிகழ்வுகளின் அடிப் படையில் நடைபெற இயல்வது என்றதொரு காட்சியில் இருந்து நீண்ட தூரத்தில் இருக்கும் இது உண்மையில் இப்போது இந்தியாவில் விளையாடிக் கொண்டு வரு கிறது. உண்மையில் சுதந்திரமாக செயல்படக் கூடிய திறமை வாய்ந்த நீதிபதிகள் தனிப்பட்டவர்களுக்கிடை யேயான வழக்குகளில் சமரசம் செய்து வைப்பதற்காக கீழானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டு, முக்கியத்துவம் ஏதும் அற்றவர்களாகக் கருதப்படுகின்றனர். அரசு தொடர்புடைய உணர்ச்சி மிகுந்த வழக்குகளை நீதிபதி அருண் மிஸ்ரா பங்கேற்கும் நீதிமன்ற அமர்வுக்கு விசா ரணைக்கு அனுப்பி வைப்பதற்கு, நீதிபதிகளுக்கிடையே வழக்குகளைப் பிரித்தளிப்பதில், தலைமை நீதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடற்ற முழுமையான அதிகாரத்தை கடந்த மூன்று தலைமை நீதிபதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர் என்று பல விமர்சகர்கள் ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேலும் கவனிக்கவேண்டிய மற்றொரு குறிப்பு என்ன வென்றால்,  இத்தகைய நம்பிக்கைக்குரிய நீதிபதிகள், நீதிமன்றத்தில் அரசு நிர்வாக ஆதரவுத் தன்மை தொடர்ந்து நீடித்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதுடன்,  நெருக் கடி நேரங்களில் தலைமை நீதிபதியைப் பாதுகாக்கும் சேவையையும் செய்து வந்துள்ளனர். இது வெறும் ஒரு கோட்பாடு அல்லது ஊகம் அல்ல என்பதை மறுபடியும் மறுபடியும்  வலியுறுத்திக் கூறமுடியும். எடுத்துக் காட்டாக நீதிபதி தீபக் சர்மா தலைமை நீதிபதியாக இருந்தபோது, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை ஊழல் வழக்கு நீதிபதி அருண் மிஸ்ராவின் அமர்விடம் ஒப்படைக்கப்பட்டதைக் கூறலாம். அதே போல, புகழ் பெற்ற தலைமை நீதிபதி கோகோயின் மீதான பாலியல் தொல்லை வழக்கை விசாரித்த அமர்வில் அருண் மிஸ்ராவும் சேர்க்கப்பட்டிருந்தார்.

அய்ரோப்பிய எடுத்துக் காட்டு

நீதிபதிகளுக்கிடையே வழக்குகளைப் பிரித்தளிப் பதில், தலைமை நீதிபதிக்கு கட்டுப்பாடற்ற முழுமையான அதிகாரம், சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள  நடைமுறை இனியும் வேலை செய்யாது. இன்றைக்கு நமக்குத் தேவைப்படுவதெல்லாம், சட்டப்படியான நிச்சயத் தன் மையும், வழக்குகளை நீதிபதிகளுக்கிடையே பகிர்ந்த ளிப்பதற்கான, விதிகளின் அடிப்படையிலானதொரு நடைமுறையும்தான். இத்தகையதொரு நடைமுறை யைத்தான் அய்ரோப்பிய நீதிமன்றமும், அய்ரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றமும் பின்பற்றுகின்றன. அவற்றில் பல நீதிமன்றங்களில் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதில்லை; அமர் வுகள் மட்டுமே விசாரித்து தீர்ப்புகளை வழங்குகின்றன.

ஒரு குறிப்பிட்ட நடைமுறை அல்லது குறிப்பிட்ட நோக்கம் அற்றதொரு முறையில் நீதிபதிகளுக்கு இடையே வழக்குகள் ஒதுக்கப்படுவது என்பதாக அந்த விதி இருக்கக் கூடும். ஆனாலும், நீதிபதிகள் தாங்க ளாகவே ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டு முடிவு செய்தால் மட்டுமே,  இது பற்றிய எந்த விதமான விதியை யும் நடைமுறைப்படுத்த முடியும். எந்த விதமான தனிப்பட்ட விசேட அதிகாரமும் எவர் ஒருவருக்கும் அனுமதிக்கப்படக்கூடாது என்பதில் கருத்தொற்றுமை இருக்க வேண்டும். அத்தகைய தனிப்பட்ட விசேட அதி காரங்கள்தான் நமது பல தொல்லைகளுக்கும் மூல காரணமாக இருக்கின்றன. நடுநிலையான, விதிகளின் அடிப்படையிலான, நீதிபதிகளுக்கிடையே வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் ஒரு நடைமுறை அரசு நிருவாக ஆதரவு எண்ணம் கொண்ட நீதிபதிகளைக் கொண்டு அமர்வுகள் நிரப்பப்படுவது தடுத்து நிறுத்துவதுடன், அமர்வின் நடுநிலை, ஒரு தலை சாரா தன்மை  மற்றும் வெளிப்படைத் தன்மையை எடுத்துக் காட்டுவதாகவும் அது இருக்கும். அதனையடுத்து இவை அனைத்தும் வெளிப்புறக் குறுக்கீடுகள் ஏதுமின்றி நீதிமன்றங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப் படுத்துகின்றன. அத்துடன்  நீதித்துறையின் ஒரு தலை சாராத நடுநிலை மற்றும் சுதந்திரத்தைப் பற்றிய பொது மக்களின் நம்பிக்கையை அது வளர்க்கும். வழக்காடிகளின் சமத்துவத்தையும், நியாயத் தன்மையையும் அது உறுதிப்படுத்தவும் செய் கிறது.

மகிழ்ச்சியற்ற, மனநிறைவு தராத...

நீதித் துறையின் சுதந்திரத்துக்கு அரசு நிருவாகத் திடமிருந்தும், சில நேரங்களில் சட்ட மன்றங்களிடம் இருந்தும் அச்சுறுத்தல்கள் வருகின்றன என்ற கண் ணோட்டம் கொண்ட மனப்பான்மையே இந்தியாவில் நிலவி வருகிறது. ஆனால், நிருவாகம் சட்டமன்றம் போன்ற இதர துறைகளுக்கு வளைந்து கொடுப்பவர் களாக நீதித்துறையின் உள்ளே இருப்பவர்கள் ஆகி விடுவது என்பது முற்றிலும் மாறுபட்ட  வேறொரு கதையாக ஆகிவிடுகிறது. பல பத்தாண்டுகளுக்கு முன்பு தலைமை நீதிபதி பதவியில் இருந்த ஒய்.வி. சந்திரசூட் என்பவர் இதனை எதிர்பார்த்துதான் 1985 ஆம் ஆண்டில், நீதித்துறைக்கான மிகப் பெரிய அச்சுறத்தல் வெளியில் வேறெங்குமிருந்தும் வரப்போவதில்லை. நீதித் துறைக்கு உள்ளே இருந்தே வரப்போகிறது என்று கூறியுள்ளார். உச்சநீதிமன்றம் செயல்படும் முறையில் உண்மையான மாற்றம் ஏற்பட வில்லையெனில்,  பூஷன் வழக்குத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அனைத்து போதனை களினாலும்  எந்த விதமான பயனும் ஏற்படப்போவ தில்லை. தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதற்காக, நீதித் துறை அமைப்பின் சுதந்திரம் தோற்கடிக்கப்படு வதற்கு   அனுமதிக்க வேண்டுமா  அல்லது வெளியில் இருந்து வரும் செல்வாக்கிடமிருந்து நீதித்துறையைப் பாதுகாக்கவேண்டும் என்று உண்மையிலேயே அவர் கள் விரும்ப வேண்டுமா என்பதையும், தங்கள் மீது ஆட்சி செலுத்த நினைக்கும் அரசு நிர்வாகத்தின் கடு மையான முயற்சிகளைத் தோற்கடிப்பதையும் தீவிரமா கப் பரிசீலிப்பதற்காக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனை வரும் ஒன்று சேர்ந்து செயல்படுவதற்கான மிகமிக நல்ல நேரமிதுதான்.

                              நன்றி: 'தி இந்து', 07.09.2020

                              தமிழில்: த.க.பாலகிருட்டிணன்