ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சுகாதாரக் கேடு தலைவர்களின் சிலைகளைச் சுற்றியா - கோயில்களைச் சுற்றியா
August 22, 2020 • Viduthalai • மற்றவை

சுகாதாரக் கேடு தலைவர்களின் சிலைகளைச் சுற்றியா - கோயில்களைச் சுற்றியா?

தலைவர்களின் சிலைகளைச் சுற்றி சுத்தமில்லையாம் - Ôசுத்தமானÕ மனிதரான குருமூர்த்தி மூக்கால் அழுகிறார்.

அய்யப்பன் கோயில்- அங்கு ஓடும் பம்பை நதி - சுற்றுச்சூழலின் சுகாதாரக் கேடுபற்றி பக்தர் ஒருவர் புலம்பியதை ‘தமிழ் இந்து' (20.12.2013, பக்கம் 2) ஏன் அம்பலப்படுத்தவில்லையா?

சிதம்பரத்தைச் சேர்ந்த அய்யப்பப் பக்தர் இரா. ரமேஷ்சங்கர் கூறினார்.

"15 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்று வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக மலையில் சுகாதாரம் என்பது வேதனையளிக்கும் வகையில் உள்ளது. அய்ப்பசி மாத நடைத் திறப்புக்குச் சென்றபோது பம்பையில் அதிக நீரோட்டம் இருந்தது.ஆனால் ஆற்றில் படித்துறை எங்கும் பக்தர்கள் விட்டுச் சென்ற ஆடைகள் அகற்றப்படாமல் கிடந்தன. பம்பையில் உள்ள கழிவறைகள் முழுக்கச் சேறும் சக்தியுமாக இருந்தன. துர்நாற்றம் வீசியது. சபரிமலையில் உள்ள நடைப்பந்தலிலும் அதைத் தொடர்ந்து சுந்நிதானத்துக்குச் செல்லும் பதினெட்டாம்படி அருகிலும் ஏராளமான காட்டுப் பன்றிகள் சுற்றித் திரிந்தன!ÕÕ என்று கூறினாரே - ஆக இது அல்லவோ சுத்தம்! சுத்தம்!! சுயம் பிரகாசம் என்று சொல்லப் போகின்றனரா?

காட்டுப் பன்றிகளை Ôவராகப் பகவான்Õ வாசம் என்று கூறினாலும் கூறுவார்கள்.